Author: Farook

Bukhari-6633 & 6634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6633. & 6634. அபூஹுரைரா (ரலி) ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது

இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள் என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் ஆம் அல்லாஹ்வின் தூதரே* அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்* என்னைப் பேச அனுமதியுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், பேசுங்கள் என்றார்கள். அந்த மனிதர், என் மகன் இவரிடம் அஸீஃப் ஆக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அஸீஃப் என்பதற்குக் கூலியாள் என்று பொருள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். ஆகவே, மக்கள் என்னிடம், உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கிடினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறத்துக்) கேட்டேன். அவர்கள், (திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த

أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَحَدُهُمَا: اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَقَالَ الآخَرُ، وَهُوَ أَفْقَهُهُمَا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَأْذَنْ لِي أَنْ أَتَكَلَّمَ، قَالَ: «تَكَلَّمْ» قَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا – قَالَ مَالِكٌ: وَالعَسِيفُ الأَجِيرُ – زَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَجَارِيَةٍ لِي، ثُمَّ إِنِّي سَأَلْتُ أَهْلَ العِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّ مَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَإِنَّمَا الرَّجْمُ عَلَى امْرَأَتِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا غَنَمُكَ وَجَارِيَتُكَ فَرَدٌّ عَلَيْكَ» وَجَلَدَ ابْنَهُ مِائَةً وَغَرَّبَهُ عَامًا، وَأُمِرَ أُنَيْسٌ الأَسْلَمِيُّ أَنْ يَأْتِيَ امْرَأَةَ الآخَرِ، فَإِنِ اعْتَرَفَتْ رَجَمَهَا، فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا


Bukhari-6632

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6632. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம் (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை (நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது)”. என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்றார்கள். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் “இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்)” என்று கூறினார்கள்.

Book :83


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ» فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الآنَ يَا عُمَرُ»


Bukhari-6631

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6631. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :83


«يَا أُمَّةَ مُحَمَّدٍ، وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَبَكَيْتُمْ كَثِيرًا وَلَضَحِكْتُمْ قَلِيلًا»


Bukhari-6630

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6630. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயமாக இறைவழியில் செலவழிக்கப்படும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.15

Book :83


«إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-6629

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6629. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயம் இறைவழியில் செலவழிக்கப்படும்.

என ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அறிவித்தார்.14

Book :83


«إِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَإِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-6628

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும் போது), என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! என்று கூறினார்கள்.10

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின்போது) லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ் வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும் போது) வல்லாஹி’, பில்லாஹி’, தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12

6628. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

‘இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!’ என்பது நபி(ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)யமாக இருந்தது.13

Book : 83


كَانَتْ يَمِينُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»


Bukhari-6627

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

(சத்தியம் செய்யும் போது) வ அய்முல்லாஹி’ என நபி (ஸல்) அவர்கள் கூறியது.7

6627. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உசாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, (இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால் (இது ஒன்றும் புதிதல்ல!) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் தான் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். வ அய்முல்லாஹி (அல்லாஹ்வின் மீதாணையாக!) அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். மக்களிலேயே (அவரின் புதல்வரான) இவர் (உசாமா) என் அன்புக்குரியவராவார்’ என்றார்கள்.8

Book : 83


بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا، وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ، فَطَعَنَ بَعْضُ النَّاسِ فِي إِمْرَتِهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنْ كُنْتُمْ تَطْعَنُونَ فِي إِمْرَتِهِ، فَقَدْ كُنْتُمْ تَطْعَنُونَ فِي إِمْرَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لِلْإِمَارَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ، وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ بَعْدَهُ»


Bukhari-6626

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6626. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, அவர் செய்யும் பெரும் பாவமாகும். (எனவே,) அவர் (சத்தியத்தை முறித்து) நன்மை செய்யட்டும்! – அதாவது பரிகாரம் செய்யட்டும்!

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :83


«مَنِ اسْتَلَجَّ فِي أَهْلِهِ بِيَمِينٍ، فَهُوَ أَعْظَمُ إِثْمًا، لِيَبَرَّ» يَعْنِي الكَفَّارَةَ


Bukhari-6625

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6625. மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும்.6

Book :83


«وَاللَّهِ، لَأَنْ يَلِجَّ أَحَدُكُمْ بِيَمِينِهِ فِي أَهْلِهِ، آثَمُ لَهُ عِنْدَ اللَّهِ مِنْ أَنْ يُعْطِيَ كَفَّارَتَهُ الَّتِي افْتَرَضَ اللَّهُ عَلَيْهِ»


Bukhari-6624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6624. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நாம் தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.5

Book :83


«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»


Next Page » « Previous Page