Author: Farook

Bukhari-6532

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6532. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :83


«يَعْرَقُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ حَتَّى يَذْهَبَ عَرَقُهُمْ فِي الأَرْضِ سَبْعِينَ ذِرَاعًا، وَيُلْجِمُهُمْ حَتَّى يَبْلُغَ آذَانَهُمْ»


Bukhari-6531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 அல்லாஹ் கூறுகின்றான்: மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்நாளில் அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் (விசாரணைக்காக) நிற்பார்கள். (83:4-6) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களிடையே இருந்த தொடர்புகள் யாவும் (மறுமையில்) அறுந்து விடும் எனும் (2:166ஆவது) வசனத்திலுள்ள தொடர்புகள்’ என்பது, இம்மையிலுள்ள உறவுகளைக் குறிக்கும்.

6531. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘அந்நாளில் அம்லத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் (விசாரணைக்காக) நிற்பார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) வசனம் தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் ‘அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் நிற்பார்’ என்று குறிப்பிட்டார்கள்.112

Book : 83


{يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ العَالَمِينَ} [المطففين: 6] قَالَ: «يَقُومُ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ»


Bukhari-6530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 நிச்சயமாக, மறுமை நாளின் அதிர்ச்சி யானது, (திகிலை உண்டாக்கும்) பயங்கர மான நிகழ்ச்சியாகும்எனும் (22:1ஆவது) வசனத்தொடர்.110 (53:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸிஃபத்தில் ஆஸிஃபா’ (நெருங்கி வர வேண்டியது வந்துவிட்டது) என்பதற்கு மறுமை நாள் நெருங்கிவிட்டது என்று பொருள்.

6530. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) ‘ஆதமே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் ‘(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்’ என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் ‘(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்’ என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவன் ‘ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)’ என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து)

يَا آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالخَيْرُ فِي يَدَيْكَ، قَالَ: يَقُولُ: أَخْرِجْ بَعْثَ النَّارِ، قَالَ: وَمَا بَعْثُ النَّارِ؟ قَالَ: مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ، فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ (وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سَكْرَى وَمَا هُمْ بِسَكْرَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ) ” فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ؟ قَالَ: «أَبْشِرُوا، فَإِنَّ مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا وَمِنْكُمْ رَجُلٌ» ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الجَنَّةِ» قَالَ: فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الجَنَّةِ، إِنَّ مَثَلَكُمْ فِي الأُمَمِ كَمَثَلِ الشَّعَرَةِ البَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الأَسْوَدِ، أَوِ الرَّقْمَةِ فِي ذِرَاعِ الحِمَارِ»


Bukhari-6529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6529. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறுமை நாளில் முதன் முதலில் அழைக்கப்படுபவர் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களாவார்கள். அப்போது அவர்கள் முன் அவர்களின் சந்ததிகள் இருப்பார்கள். சந்ததிகளிடம் ‘இவர் தாம் உங்கள் தந்தை ஆதம்’ என்று கூறப்படும். உடனே ஆதம் (அலை) அவர்கள் (இறைவனின் அழைப்பை ஏற்று, ‘இறைவா!) எத்தனை பேரை (அவ்வாறு) பிரிக்க வேண்டும்?’ என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், ‘ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்று ஒன்பது பேரைத் தனியாகப் பிரித்திடுங்கள்’ என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

உடனே மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒவ்வொரு நூறு பேரிலும் தொண்ணூற்று ஒன்பது பேர் (நரகத்திற்கெனப் பிரித்து) எடுக்கப்பட்டால் எங்களில் (சொர்க்கத்திற்கென) யார்தான் மிஞ்சுவார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘மற்ற சமுதாயங்களுக்கிடையே என் சமுதாயத்தார் கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றவர்கள் ஆவார்கள்’ என்று கூறினார்கள்.

Book :83


أَوَّلُ مَنْ يُدْعَى يَوْمَ القِيَامَةِ آدَمُ، فَتَرَاءَى ذُرِّيَّتُهُ، فَيُقَالُ: هَذَا أَبُوكُمْ آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، فَيَقُولُ: أَخْرِجْ بَعْثَ جَهَنَّمَ مِنْ ذُرِّيَّتِكَ، فَيَقُولُ: يَا رَبِّ كَمْ أُخْرِجُ، فَيَقُولُ: أَخْرِجْ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةً وَتِسْعِينَ ” فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِذَا أُخِذَ مِنَّا مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ، فَمَاذَا يَبْقَى مِنَّا؟ قَالَ: «إِنَّ أُمَّتِي فِي الأُمَمِ كَالشَّعَرَةِ البَيْضَاءِ فِي الثَّوْرِ الأَسْوَدِ»


Bukhari-6528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6528. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி(ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். நபி(ஸல்) அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். நபி(ஸல்) அவர்கள் ‘முஹம்மதின் உயிர் எவனுடைய கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும்

كُنَّا مَعَ النَّبِيِّ فِي قُبَّةٍ، فَقَالَ: «أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الجَنَّةِ» قُلْنَا: نَعَمْ، قَالَ: «أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الجَنَّةِ» قُلْنَا: نَعَمْ، قَالَ: «أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الجَنَّةِ» قُلْنَا: نَعَمْ، قَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الجَنَّةِ، وَذَلِكَ أَنَّ الجَنَّةَ لاَ يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ، وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ البَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الأَسْوَدِ، أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الأَحْمَرِ»


Bukhari-6527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6527. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்’ என்று கூறினார்கள்.

Book :83


تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ؟ فَقَالَ: «الأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ


Bukhari-6526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6526. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாம்விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104)

மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப் பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்’ என்பேன். அப்போது அல்லாஹ் ‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ என்பான்.

அப்போது நான், நல்லடியார் (நபி ஈசா(அலை) அவர்கள்)

قَامَ فِينَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: ” إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ} [الأنبياء: 104] الآيَةَ، وَإِنَّ أَوَّلَ الخَلاَئِقِ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، وَإِنَّهُ سَيُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: يَا رَبِّ أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ} [المائدة: 117]- إِلَى قَوْلِهِ – {الحَكِيمُ} [البقرة: 32] قَالَ: فَيُقَالُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ


Bukhari-6525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6525. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) மீது இருந்தபடி ‘நிச்சயமாக நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்’ என்று உரையில் குறிப்பிட்டதை கேட்டேன்.

Book :83


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى المِنْبَرِ، يَقُولُ: «إِنَّكُمْ مُلاَقُو اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلًا»


Bukhari-6524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6524. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, காலால் நடந்தவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக (பிறந்த மேனியுடன்) அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்.

‘இது நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கேட்ட (பிரபலமான) ஹதீஸ்களில் ஒன்றென நாங்கள் கருதுகிறோம்’ என்று சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

Book :83


«إِنَّكُمْ مُلاَقُو اللَّهِ حُفَاةً عُرَاةً مُشَاةً غُرْلًا» قَالَ سُفْيَانُ: هَذَا مِمَّا نَعُدُّ أَنَّ ابْنَ عَبَّاسٍ، سَمِعَهُ مِنَ النَّبِيِّ


Bukhari-6523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6523. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! (திருக்குர்ஆன் 25:43 வது இறைவசனத்தின்படி மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தன்னுடைய முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

(இதை அறிவித்த) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள் ‘ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!’ என்றார்கள். 108

Book :83


أَنَّ رَجُلًا قَالَ: يَا نَبِيَّ اللَّهِ، كَيْفَ يُحْشَرُ الكَافِرُ عَلَى وَجْهِهِ؟ قَالَ: «أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ القِيَامَةِ» قَالَ قَتَادَةُ: بَلَى وَعِزَّةِ رَبِّنَا


Next Page » « Previous Page