Author: Farook

Bukhari-6462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6462. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.

Book :81


«كَانَ أَحَبُّ العَمَلِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَدُومُ عَلَيْهِ صَاحِبُهُ»


Bukhari-6461

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 நற்செயல்கள் புரிவதில் நடுநிலைப் போக்கும் நீடித்த நிலையும் (விரும்பத்தக்கவை ஆகும்).46

6461. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது எது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நிரந்தரமாய்ச் செய்யப்படும் செயல்’ என்று விடையளித்தார்கள். ‘(இரவில்) நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) எப்போது எழுவார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள் ‘சேவல் கூவும்போது (நடுநிசி நேரம்) எழு(ந்து தொழுவார்கள்) என்று விடையளித்தார்கள்.

Book : 81


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَيُّ العَمَلِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «الدَّائِمُ» قَالَ: قُلْتُ: فَأَيَّ حِينٍ كَانَ يَقُومُ؟ قَالَتْ: «كَانَ يَقُومُ إِذَا سَمِعَ الصَّارِخَ»


Bukhari-6460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6460. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

Book :81


«اللَّهُمَّ ارْزُقْ آلَ مُحَمَّدٍ قُوتًا»


Bukhari-6459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6459. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம் ‘நான் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். இரண்டு மாதங்களில் (ஆனால்,) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது’ என்று கூறினார்கள். அதற்கு நான் ‘(அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?’ என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள் கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு) இருப்பினும், அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அண்டைவீட்டாராக, இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்து கொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தம் இல்லங்களிலிருந்து அவர்கள் கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்.

Book :81


أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ: «ابْنَ أُخْتِي، إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ [ص:98] رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ» فَقُلْتُ: مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ: «الأَسْوَدَانِ التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَبْيَاتِهِمْ فَيَسْقِينَاهُ»


Bukhari-6458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6458. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தாரகிய) நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்காமலேயே ஒரு மாதகாலம் கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம் பழமும் நீரும்தான் (எங்கள் உணவாகும்); (எப்போதாவது) சிறிது இறைச்சி எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டால் தவிர.

Book :81


«كَانَ يَأْتِي عَلَيْنَا الشَّهْرُ مَا نُوقِدُ فِيهِ نَارًا، إِنَّمَا هُوَ التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنْ نُؤْتَى بِاللُّحَيْمِ»


Bukhari-6457

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6457. கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று வருவோம். (அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒரு நாள்) அனஸ்(ரலி) அவர்கள் ‘சாப்பிடுங்கள்; (ஆனால்) நான் அறிந்த மட்டில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட ஆட்டை அவர்கள் தங்களின் கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை’ என்றார்கள்.

Book :81


كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ، وَخَبَّازُهُ قَائِمٌ، وَقَالَ: «كُلُوا، فَمَا أَعْلَمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَغِيفًا مُرَقَّقًا حَتَّى لَحِقَ بِاللَّهِ، وَلاَ رَأَى شَاةً سَمِيطًا بِعَيْنِهِ قَطُّ»


Bukhari-6456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6456. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.

அத்தியாயம்: 81


«كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَدَمٍ، وَحَشْوُهُ مِنْ لِيفٍ»


Bukhari-6455

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6455. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம் பழமாகவே இருக்கும்.

Book :81


«مَا أَكَلَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْلَتَيْنِ فِي يَوْمٍ إِلَّا إِحْدَاهُمَا تَمْرٌ»


Bukhari-6454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6454. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

Book :81


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ قَدِمَ المَدِينَةَ، مِنْ طَعَامِ بُرٍّ ثَلاَثَ لَيَالٍ تِبَاعًا، حَتَّى قُبِضَ»


Bukhari-6453

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6453. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற்புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்துவந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னுடைய) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்துவந்த வழிபாடு வீணாம் நான் இழப்புக்குள்ளாம் விட்டேன் (போலும் என வருந்தினேன்).

Book :81


«إِنِّي لَأَوَّلُ العَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ، وَرَأَيْتُنَا نَغْزُو وَمَا لَنَا طَعَامٌ إِلَّا وَرَقُ الحُبْلَةِ، وَهَذَا السَّمُرُ، وَإِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا تَضَعُ الشَّاةُ، مَا لَهُ خِلْطٌ، ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الإِسْلاَمِ، خِبْتُ إِذًا وَضَلَّ سَعْيِي»


Next Page » « Previous Page