Author: Farook

Bukhari-6421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:

1. பொருளாசை.

2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :81


يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ ” رَوَاهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ


Bukhari-6420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6420. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.

1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.

2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Book :81


لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ: فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ ” قَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، وَابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدٌ، وَأَبُو سَلَمَةَ


Bukhari-6419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

ஒருவர் அறுபது வயதை அடைந்து விட்டால் அதற்கு மேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:

சிந்தித்து உணரக்கூடியவன் சிந்திப்பதற்கு வேண்டிய நீண்ட ஆயுளை உங்களுக்கு நாம் கொடுக்கவில்லையா? இன்னும் எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்துதானே இருந்தார்! (என்று அல்லாஹ் கேட்பான்). (அல்குர்ஆன்: 35:37)

அதாவது, எச்சரிக்கை செய்பவர் என்பது வயது மூப்பினால் ஏற்படும் நரையாகும்.


6419. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


இந்தச் செய்தியை ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ அவர்களிடமிருந்து மஃன் பின் முஹம்மத் அறிவித்துள்ளதைப்

«أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ، حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً»


Bukhari-6418

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6418. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு ‘(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் – ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது’ என்று கூறினார்கள்.

Book :81


خَطَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطُوطًا، فَقَالَ: «هَذَا الأَمَلُ وَهَذَا أَجَلُهُ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ جَاءَهُ الخَطُّ الأَقْرَبُ»


Bukhari-6417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

எதிர்பார்ப்புகளும் அவை அளவு கடந்து போவதும்.

அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 3:185)

அவர்கள் உண்டு, சுகித்து, ஆசை அவர்களைத் திசை திருப்புமாறு அவர்களை விட்டு விடுவீராக! பின்னர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 15:3)

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மறுமை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் புதல்வர்கள் உள்ளனர். எனவே, நீங்கள் மறுமையின் புதல்வர்களாயிருங்கள். இம்மையின் புதல்வர்களாகிவிடாதீர்கள். இன்று வினை உண்டு. விசாரணை இல்லை. நாளை விசாரணை உண்டு. ஆனால் வினை இல்லை.


6417. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

خَطَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا مُرَبَّعًا، وَخَطَّ خَطًّا فِي الوَسَطِ خَارِجًا مِنْهُ، وَخَطَّ خُطَطًا صِغَارًا إِلَى هَذَا الَّذِي فِي الوَسَطِ مِنْ جَانِبِهِ الَّذِي فِي الوَسَطِ، وَقَالَ: ” هَذَا الإِنْسَانُ، وَهَذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ – أَوْ: قَدْ أَحَاطَ بِهِ – وَهَذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ، وَهَذِهِ الخُطَطُ الصِّغَارُ الأَعْرَاضُ، فَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا، وَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا


Bukhari-6416

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு; அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு என்ற நபிமொழி.

6416. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.

அத்தியாயம்: 81


أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ»
وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»


Bukhari-6415

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 மறுமையுடன் ஒப்பிடுகையில் இம்மையின் நிலை.5 அல்லாஹ் கூறுகின்றான்: (மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண்விளையாட்டும் வேடிக்கையும் அலங் காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடை யில் வீண் பொறாமையேற்படுத்துவதாகவும், பொருட்களிலும் சந்ததிகளிலும் போட்டி யேற்படுத்துவதாகவும்தான் இருக்கிறது. (இதன் நிலையானது:) ஒரு மழையின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் (உதவியால் முளைத்த) பயிர் (நன்கு வளர்ந்து) விவசாயி களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பின்னர் அது உலர்ந்து மஞ்சள் நிறத்தில் மாறி விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகிவிடுகின்றது. (இம்மை வாழ்வும் அவ்வாறுதான்.) மறுமையிலோ (அவர்களில் பலருக்கு) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்த மும் கிடைக்கின்றன. ஆகவே, இந்த (உலக) அற்ப வாழ்வு ஏமாற்றுகின்ற (அற்ப) இன்பமேயன்றி வேறில்லை. (57:20)

6415. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது

«مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»


Bukhari-6414

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6414. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.

அகழ்ப் போரின்போது நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, ‘இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; எனவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!’ என்று (பாடியபடி) கூறினார்கள்.4

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Book :81


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَنْدَقِ، وَهُوَ يَحْفِرُ وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ، وَيَمُرُّ بِنَا، فَقَالَ: «اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ، فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالمُهَاجِرَهْ» تَابَعَهُ سَهْلُ بْنُ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


Bukhari-6413

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6413. அனஸ்(ரலி) அறிவித்தார்.

(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!’ என்று (பாடியபடி) சொன்னார்கள். 3

Book :81


«اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ، فَأَصْلِحِ الأَنْصَارَ وَالمُهَاجِرَهْ»


Bukhari-6412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 81

நெகிழ்வூட்டும் அறவுரைகள்.

பாடம்: 1

ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும்; மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.

6412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1 . ஆரோக்கியம்.

2 . ஓய்வு.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 81


نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ ”
قَالَ عَبَّاسٌ العَنْبَرِيُّ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


Next Page » « Previous Page