Author: Farook

Bukhari-5049

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 அடுத்தவரிடமிருந்து குர்ஆனைச் செவியேற்க விரும்புவது.

5049. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்!’ என்று கூறினார்கள். நான் ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?’ என்று கேட்டேன். அவர்கள் ‘பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். 61

Book : 66


قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ عَلَيَّ القُرْآنَ»، قُلْتُ: آقْرَأُ عَلَيْكَ، وَعَلَيْكَ أُنْزِلَ، قَالَ: «إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي»


Bukhari-5048

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்.

5048. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என என்னிடம் கூறினார்கள்.

Book : 66


«يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ»


Bukhari-5047

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 தர்ஜீஉ (முறையில் ஓதுதல்).59

5047. அப்துல்லாஹ் இப்னு முஃகஃப்பல்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) பயணித்துக் கொண்டிருந்த தம் ஒட்டகத்தின் மீது இருந்தவாறு ‘அல்ஃபத்ஹ் எனும் (48 வது) அத்தியாயத்தை’ அல்லது ‘அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை’ மெல்லிய குரலில் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை பார்த்தேன். 60

Book : 66


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ وَهُوَ عَلَى نَاقَتِهِ أَوْ جَمَلِهِ، وَهِيَ تَسِيرُ بِهِ، وَهُوَ يَقْرَأُ سُورَةَ الفَتْحِ – أَوْ مِنْ سُورَةِ الفَتْحِ – قِرَاءَةً لَيِّنَةً يَقْرَأُ وَهُوَ يُرَجِّعُ»


Bukhari-5046

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5046. கத்தாதா(ரஹ்) அறிவித்தார்

‘நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?’ என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.

அதற்கவர்கள், ‘நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் ‘பிஸ்மில்லா..ஹ்’ என நீட்டுவார்கள், ‘அர்ரஹ்மா..ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹ்மா..ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹீ…ம்’ என்றும் நீட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 66


سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَتْ مَدًّا»، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ


Bukhari-5045

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 நீட்டி ஓதுதல்.58

5045. கத்தாதா(ரஹ்) அறிவித்தார்

நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறைபற்றிக் கேட்டேன் அதற்கவர்கள், ‘(நீட்டி ஓதவேண்டிய இடங்களில்) நன்றாக நிட்டி ஓதுவது நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது’ என்று பதிலளித்தார்கள்.

Book : 66


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ يَمُدُّ مَدًّا»


Bukhari-5044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5044. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

‘(நபியே!) இந்த ‘வஹீ’யை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (எங்கே வேத வசனங்களை மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் அதை மனனமிடுவதற்காக ஓதியபடி) தம் நாவையும் தம் இதழ்களையும் அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ் ‘லா உக்சிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75 வது) அத்தியாயத்திலுள்ள ‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்களின் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்’ எனும் (திருக்குர்ஆன் 75:16, 17) வசனங்களை அருளினான். (அதாவது,) ‘உங்கள் நெஞ்சில் பதியச்செய்வதும் அதை நீங்கள் ஓதும்படி செய்வதும்

{لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]، قَالَ: ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالوَحْيِ، وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ، فَيَشْتَدُّ عَلَيْهِ، وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي: {لاَ أُقْسِمُ بِيَوْمِ القِيَامَةِ} [القيامة: 1]، {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ، إِنَّ عَلَيْنَا جَمْعَهُ} [القيامة: 17] فَإِنَّ عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ {وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 17] فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19] ” قَالَ: «إِنَّ عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ»، قَالَ: «وَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ»


Bukhari-5043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 திருத்தமாகவும் நிதானமாகவும் குர்ஆனை ஓதுதல். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73:4). மனிதர்களுக்கு நீர் இதனைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்தக் குர்ஆனைப் படிப்படியாக அருளினோம். (17:106) பாடல்களை அவசரம் அவசரமாகப் படிப்பதைப் போன்று குர்ஆனை ஓதுவது வெறுப்புக்குரிய செயலாகும். (44:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபீஹா யுஃப்ரகு’ என்பதற்கு அந்த இரவில் தெளிவுப்படுத்தப்படுகிறது’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (17:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபரக்னாஹு’எனும் சொல்லுக்கு, நாம் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள்.

5043. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) கூறினார்

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) காலையில் சென்றோம். அப்போது ஒருவர், ‘நேற்றிரவு நான் ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை (முழுமையாக) ஓதி முடித்தேன்’ என்றார். அதற்கு அப்துல்லாஹ்(ரலி), ‘பாட்டுப் பாடுவதைப் போன்று அவரச அவரசமாக ஓதினீரா? யாகி (சரியான) ஓதல் முறையைச் செவியேற்றுள்ளோம். மேலும்,

غَدَوْنَا عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ رَجُلٌ: قَرَأْتُ المُفَصَّلَ البَارِحَةَ، فَقَالَ: «هَذًّا كَهَذِّ الشِّعْرِ إِنَّا قَدْ سَمِعْنَا القِرَاءَةَ، وَإِنِّي لَأَحْفَظُ القُرَنَاءَ الَّتِي كَانَ يَقْرَأُ بِهِنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَمَانِيَ عَشْرَةَ سُورَةً مِنَ المُفَصَّلِ، وَسُورَتَيْنِ مِنْ آلِ حم»


Bukhari-5042

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5042. ஆயிஷா(ரலி) கூறினார்

இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள். 

Book :66


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَارِئًا يَقْرَأُ مِنَ اللَّيْلِ فِي المَسْجِدِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً أَسْقَطْتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا»


Bukhari-5041

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5041. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) ‘அல்ஃபுர்கான்’ எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அவர் அதை ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். (சற்று நிதானித்து) அவர் தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

(அவர் தொழுகையை முடித்ததும் அவரின் மேல் துண்டை) அவரின் கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘இந்த அத்தியாயத்தை நான் (உம்மிடமிருந்து) செவியேற்றபடி உமக்கு ஓதிக்கொடுத்தது யார்?’ என்று கேட்டேன். அவர், ‘இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஓதிக் கொடுத்தார்கள்’ என்று பதிலளித்தார். உடனே நான், ‘நீர் பொய் சொல்லிவிட்டீர்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் நான் செவியேற்ற இந்த அத்தியாயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களே எனக்கு (நீர் ஓதியதற்கு மாற்றமாக) ஓதிக் கொடுத்தார்கள்’ என்று கூறியபடி

سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَؤُهَا عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ، لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ، فَانْتَظَرْتُهُ حَتَّى سَلَّمَ، فَلَبَبْتُهُ فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: كَذَبْتَ فَوَاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُوَ أَقْرَأَنِي هَذِهِ السُّورَةَ، الَّتِي سَمِعْتُكَ فَانْطَلَقْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقُودُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، وَإِنَّكَ أَقْرَأْتَنِي سُورَةَ الفُرْقَانِ، فَقَالَ: «يَا هِشَامُ اقْرَأْهَا» فَقَرَأَهَا القِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ» ثُمَّ قَالَ: «اقْرَأْ يَا عُمَرُ» فَقَرَأْتُهَا الَّتِي أَقْرَأَنِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ»


Bukhari-5040

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 அல்பகரா’ அத்தியாயம் என்றும், இன்ன இன்ன அத்தியாயம் என்றும் கூறுவதைக் குற்றமாகக் கருதலாகாது.52

5040. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறவருக்கு அந்த இரண்டுமே போதும்!

என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 66


«الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ مَنْ قَرَأَ بِهِمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ»


Next Page » « Previous Page