Author: Farook

Bukhari-4999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

நபித்தோழர்களில் குர்ஆன் அறிஞர்கள்27

4999. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) குறித்து அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) கூறுகையில், ‘நான் என்றென்றும் அவர்களை நேசிப்பேன்; (ஏனெனில்,) நபி (ஸல்), அவர்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை (ஓதக்) கற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறக் கேட்டுள்ளேன்’ என்றார்கள். 28

Book : 66


لاَ أَزَالُ أُحِبُّهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَسَالِمٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ»


Bukhari-4998

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4998. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்

ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி (ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் ‘இஃதிகாஃப்’ மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் ‘இஃதிகாஃப்’ மேற்கொண்டார்கள். 26

Book :66


«كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً، فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي العَامِ الَّذِي قُبِضَ فِيهِ، وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا، فَاعْتَكَفَ عِشْرِينَ فِي العَامِ الَّذِي قُبِضَ فِيهِ»


Bukhari-4997

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

நபி (ஸல்) அவர்களை, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, (வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச்செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்கள்.24

4997. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரிவழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமளானின் ஒவ்வோர் இரவும் – ரமளான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு) ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாக நபி

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ، وَأَجْوَدُ مَا يَكُونُ فِي شَهْرِ رَمَضَانَ، لِأَنَّ جِبْرِيلَ كَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ فِي شَهْرِ رَمَضَانَ، حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»


Bukhari-4996

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4996. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) கூறினார்

‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் கற்றுள்ளேன்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூறினார். (இதைக் கூறிய) பிறகு, அப்துல்லாஹ் (ரலி) எழுந்து (தம் இல்லத்தினுள்) சென்றார்கள். அவர்களுடன் அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்களும் உள்ளே சென்றார்கள்.

(சிறிது நேரம் கழித்து) அல்கமா (ரஹ்) வெளியே வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் அது குறித்துக் கேட்டோம். அதற்கவர்கள், ‘அவை, இப்னு மஸ்வூத் (ரலி) (தொகுத்து வைத்துள்ள) குர்ஆன் பிரதியின்படி ஆரம்ப இருபது ‘முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களாகும். அவற்றின் கடைசி அத்தியாயங்கள் ‘ஹாமீம்’ அத்தியாயங்களாகும். ‘ஹாமீம் அத்துகான்’ மற்றும் ‘அம்ம யத்தசாஅலூன’ ஆகியனவும் அவற்றில் அடங்கும்’ என்று கூறினார்கள். 23

Book :66


«لَقَدْ تَعَلَّمْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهُنَّ اثْنَيْنِ اثْنَيْنِ، فِي كُلِّ رَكْعَةٍ»، فَقَامَ عَبْدُ اللَّهِ وَدَخَلَ مَعَهُ عَلْقَمَةُ، وَخَرَجَ عَلْقَمَةُ فَسَأَلْنَاهُ، فَقَالَ: عِشْرُونَ سُورَةً مِنْ أَوَّلِ المُفَصَّلِ عَلَى تَأْلِيفِ ابْنِ مَسْعُودٍ، آخِرُهُنَّ الحَوَامِيمُ: حم الدُّخَانِ وَعَمَّ يَتَسَاءَلُونَ


Bukhari-4995

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4995. பராஉ (ரலி) கூறினார்

நான் ‘சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87 வது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பே கற்றுக்கொண்டேன். 22

Book :66


«تَعَلَّمْتُ سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى قَبْلَ أَنْ يَقْدَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-4994

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4994. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் (ரஹ்) அறிவித்தார்

இப்னு மஸ்வூத் (ரலி) பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம் (ஆகிய 17, 18, 19ஆம்) அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், ‘இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் அடங்கும்’ என்று குறிப்பிட்டார்கள். 21

Book :66


 يَقُولُ فِي بَنِي إِسْرَائِيلَ، وَالكَهْفِ، وَمَرْيَمَ، وَطه، وَالأَنْبِيَاءِ: «إِنَّهُنَّ مِنَ العِتَاقِ الأُوَلِ، وَهُنَّ مِنْ تِلاَدِي»


Bukhari-4993

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

குர்ஆன் (அத்தியாயங்கள் வரிசைப்படி) தொகுக்கப்படுதல்.18

4993. யூஸுஃப் இப்னு மாஹக் (ரஹ்) அறிவித்தார்

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, ‘(இறந்தவருக்கு அணிவிக்கப்படும்) ‘கஃபன்’ துணியில் சிறந்தது எது? (வெள்ளை நிறமா? மற்ற நிறமா?)’ என்று கேட்டார். ஆயிஷா (ரலி), ‘அடப்பாவமே! (நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்தக் கஃபன் துணியால் அடக்கப்பட்டாலும்) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?’ என்று கேட்டார்கள்.

அதற்கவர், ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்?’ என்று கூறினார். (அன்னை) அவர்கள், ‘ஏன்?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘அதனை (முன்மாதிரியாக)க் கொண்டு நான் குர்ஆனை (வரிசைக் கிரமமாக) தொகுக்க வேண்டும். ஏனெனில், (தற்போது) வரிசைப் பிரகாரம் தொகுக்கப்படாமல் தான் குர்ஆன் ஓதப்பட்டு வருகிறது’ என்று கூறினார். ஆயிஷா (ரலி),

إِنِّي عِنْدَ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا، إِذْ جَاءَهَا عِرَاقِيٌّ، فَقَالَ: أَيُّ الكَفَنِ خَيْرٌ؟ قَالَتْ: وَيْحَكَ، وَمَا يَضُرُّكَ؟ ” قَالَ: يَا أُمَّ المُؤْمِنِينَ، أَرِينِي مُصْحَفَكِ؟ قَالَتْ: لِمَ؟ قَالَ: لَعَلِّي أُوَلِّفُ القُرْآنَ عَلَيْهِ، فَإِنَّهُ يُقْرَأُ غَيْرَ مُؤَلَّفٍ، قَالَتْ: وَمَا يَضُرُّكَ أَيَّهُ قَرَأْتَ قَبْلُ؟ ” إِنَّمَا نَزَلَ أَوَّلَ مَا نَزَلَ مِنْهُ سُورَةٌ مِنَ المُفَصَّلِ، فِيهَا ذِكْرُ الجَنَّةِ وَالنَّارِ، حَتَّى إِذَا ثَابَ النَّاسُ إِلَى الإِسْلاَمِ نَزَلَ الحَلاَلُ وَالحَرَامُ، وَلَوْ نَزَلَ أَوَّلَ شَيْءٍ: لاَ تَشْرَبُوا الخَمْرَ، لَقَالُوا: لاَ نَدَعُ الخَمْرَ أَبَدًا، وَلَوْ نَزَلَ: لاَ تَزْنُوا، لَقَالُوا: لاَ نَدَعُ الزِّنَا أَبَدًا، لَقَدْ نَزَلَ بِمَكَّةَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ: {بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ} [القمر: 46] وَمَا نَزَلَتْ سُورَةُ البَقَرَةِ وَالنِّسَاءِ إِلَّا وَأَنَا عِنْدَهُ “، قَالَ: فَأَخْرَجَتْ لَهُ المُصْحَفَ، فَأَمْلَتْ عَلَيْهِ آيَ السُّوَرِ


Bukhari-4992

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4992. உமர்பின் கத்தாப் (ரலி) அறிவித்தார்

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம் (ரலி) ‘அல்ஃபுர்கான்’ எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?’ என்று கேட்டேன். அவர், ‘இதை எனக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்’ என்று பதிலளித்தார். உடனே நான், ‘நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதிய முறையிலில்லாமல் வேறு முறையில் எனக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பித்தார்கள்’ என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ، لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: كَذَبْتَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ، فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْسِلْهُ، اقْرَأْ يَا هِشَامُ» فَقَرَأَ عَلَيْهِ القِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَلِكَ أُنْزِلَتْ»، ثُمَّ قَالَ: «اقْرَأْ يَا عُمَرُ» فَقَرَأْتُ القِرَاءَةَ الَّتِي أَقْرَأَنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَلِكَ أُنْزِلَتْ إِنَّ هَذَا القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ»


Bukhari-4991

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

ஏழு (வட்டார) மொழி வழக்கில் குர்ஆன் அருளப்பெற்றது.15

4991. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். 16

Book : 66


«أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ فَرَاجَعْتُهُ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ وَيَزِيدُنِي حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ»


Bukhari-4990

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4990. பராஉ (ரலி) அறிவித்தார்

‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘ஸைதை அழைத்து வாருங்கள். அவர் தம்முடன் ‘பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு அல்லது ‘அகலமான எலும்பு, மைக்கூடு’ ஆகியவற்றை எடுத்துவரட்டும்’ என்று கூறினார்கள்.

(ஸைத் இப்னு ஸாபித் (ரலி) வந்தபோது,) ‘இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் முதுகுக்குப் பின்னால், கண் பார்வையற்றவரான அம்ர் பின் உம்மி மக்த்தூம் (ரலி) இருந்தார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகிறீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!’ என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில் ‘இடையூறு உள்ளவர்கள் தவிர’ எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) இறங்கிற்று. 14

Book :66


لَمَّا نَزَلَتْ: {لاَ يَسْتَوِي} [النساء: 95] القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ {وَالمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95]، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُ لِي زَيْدًا وَلْيَجِئْ بِاللَّوْحِ وَالدَّوَاةِ وَالكَتِفِ – أَوِ الكَتِفِ وَالدَّوَاةِ -» ثُمَّ قَالَ: ” اكْتُبْ {لاَ يَسْتَوِي القَاعِدُونَ} [النساء: 95] ” وَخَلْفَ ظَهْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمْرُو بْنُ أُمِّ مَكْتُومٍ الأَعْمَى، قَالَ: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنِي، فَإِنِّي رَجُلٌ ضَرِيرُ البَصَرِ؟ فَنَزَلَتْ مَكَانَهَا: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ} [النساء: 95] {وَالمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95] {غَيْرُ أُولِي الضَّرَرِ} [النساء: 95]


Next Page » « Previous Page