Author: Farook

Bukhari-4917

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 (அவன்) இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழிபிறவியாகவும் இருக்கின்றான். (இவன் போன்றவனுக்கெல் லாம் நபியே! நீங்கள் அடங்கிவிடாதீர்கள் (எனும் 68:13ஆவது இறைவசனம்).

4917. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 68:13 வது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவன் குறையுக் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாவான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பதுபோல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது’ என்று கூறினார்கள். 2

Book : 65


{عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ} [القلم: 13] قَالَ: «رَجُلٌ مِنْ قُرَيْشٍ لَهُ زَنَمَةٌ مِثْلُ زَنَمَةِ الشَّاةِ»


Bukhari-4916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

நபி (தம் துணைவியராகிய) உங்களை விவாகரத்துச் செய்து விடுவாராயின், உங்களுக்கு பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்கிட முடியும். அவர்கள் (வாய்மையான) முஸ்லிம்களாய், இறை நம்பிக்கையுள்ளோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயும், கன்னிகளாயும் இருப்பார்கள் (எனும் 66:5ஆவது இறை வசனம்).

4916. உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்தால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்’ என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (திருக்குர்ஆன் 66:5 வது) இறைவசனம் அருளப்பட்டது. 8

Book : 65


اجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَيْرَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُنَّ: عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ «فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ»


Bukhari-4915

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், (அது உங்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில்,) உங்களிருவரின் இதயங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து விட்டிருக்கின்றன எனும் (66:4ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஃகத் எனும் சொல்லுக்குப் பிறழ்தல் என்று பொருள். (இதன் தன்மை வினைச் சொற் களான) ஸஃகவ்த்து மற்றும் அஸ்ஃகைத்து ஆகியவற்றுக்கு நான் சாய்ந்தேன் என்று பொருள். (6:113ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) – தஸ்ஃகா எனும் சொல்லுக்கு அவை சாய்வதற்காகஎன்று பொருள். தழாஹரூன எனும் சொல்லுக்குக் கூடிப் பேசிச் செயல் படுதல் என்று பொருள். ழஹீர்எனும் சொல்லுக்கு உதவியாளர் என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: (66:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கூ அன்ஃபுசக்கும் வஅஹ்லீக்கும் (உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்பதன் கருத்தாவது: இறையச்சத்தைக் கைக் கொள்ளுமாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் அறிவுரை பகர்வதுடன், அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்பியுங்கள்.

4915. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

كُنْتُ أُرِيدُ أَنْ أَسْأَلَ عُمَرَ عَنِ المَرْأَتَيْنِ اللَّتَيْنِ تَظَاهَرَتَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَكَثْتُ سَنَةً، فَلَمْ أَجِدْ لَهُ مَوْضِعًا حَتَّى خَرَجْتُ مَعَهُ حَاجًّا، فَلَمَّا كُنَّا بِظَهْرَانَ ذَهَبَ عُمَرُ لِحَاجَتِهِ، فَقَالَ: أَدْرِكْنِي بِالوَضُوءِ فَأَدْرَكْتُهُ بِالإِدَاوَةِ، فَجَعَلْتُ أَسْكُبُ عَلَيْهِ المَاءَ، وَرَأَيْتُ مَوْضِعًا فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، مَنِ المَرْأَتَانِ اللَّتَانِ تَظَاهَرَتَا؟ قَالَ ابْنُ عَبَّاسٍ: فَمَا أَتْمَمْتُ كَلاَمِي حَتَّى قَالَ: «عَائِشَةُ، وَحَفْصَةُ»