Author: Farook

Bukhari-4693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4693. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி (ஸல்) அவர்கள், இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடு என்று (அவர்களுக்குக் கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர், (கடும் பசி, பட்டினியால் கண்பஞ்சடைந்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால் அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகைபோன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகின்றான் – இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும் (44-10) . மேலும், அல்லாஹ் கூறுகின்றான்- நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே) மீள்கிறீர்கள். (44-15) இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களை விட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படப்போவதில்லை) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்தப் புகையும் வந்துவிட்டது, பத்ருப் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.

أَنَّ قُرَيْشًا لَمَّا أَبْطَئُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالإِسْلاَمِ، قَالَ: «اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ» فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَيْءٍ حَتَّى أَكَلُوا العِظَامَ، حَتَّى جَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى بَيْنَهُ وَبَيْنَهَا مِثْلَ الدُّخَانِ، قَالَ اللَّهُ: {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} [الدخان: 10]، قَالَ اللَّهُ: {إِنَّا كَاشِفُو العَذَابِ قَلِيلًا إِنَّكُمْ عَائِدُونَ} [الدخان: 15]، أَفَيُكْشَفُ عَنْهُمُ العَذَابُ يَوْمَ القِيَامَةِ؟ وَقَدْ مَضَى الدُّخَانُ، وَمَضَتِ البَطْشَةُ


Bukhari-4692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத்துத் தாழிட்டுவிட்டு, வாரும் என்று அழைத்தாள் எனும் (12:23ஆவது) வசனத் தொடர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹய்த்தலக்க என்பதற்கு ஹவ்ரானியா எனும் (சிரியா) மொழியில் இங்கே வா! என்று பொருள். இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் வா! என்பது தான் என்று கூறுகிறார்கள்.

4692. அபூ வாளில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 12:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காலத் ஹைத்த லக்க’ எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 12:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘மஸ்வாஹு’ எனும் சொல்லுக்கு ‘இவரின் அந்தஸ்து’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஃபயா’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள்

{هَيْتَ لَكَ} [يوسف: 23]. قَالَ: «وَإِنَّمَا نَقْرَؤُهَا كَمَا عُلِّمْنَاهَا» {مَثْوَاهُ} [يوسف: 21]: «مُقَامُهُ». {وَأَلْفَيَا} [يوسف: 25]: «وَجَدَا»، {أَلْفَوْا آبَاءَهُمْ} [الصافات: 69]: «أَلْفَيْنَا» وَعَنِ ابْنِ مَسْعُودٍ: (بَلْ عَجِبْتُ وَيَسْخَرُونَ)


Bukhari-4691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4691. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மூ ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘(அவரைப் பற்றிப்) பேசப்பட்டு வரும் பேச்சின் காரணத்தினால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!’ என்று கூறினார்கள். நான் ‘ஆம்! (அப்படித்தான்)’ என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஃகூப் (அலை) அவர்களும் அவர்களின் பிள்ளைகளுமாவார்.

“இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவிகோர வேண்டும்” (அல்குர்ஆன்: 12:18) என்ற வசனத்தை மேற்கோள் காட்டிக் கூறினார்கள்.

அத்தியாயம்: 65


بَيْنَا أَنَا وَعَائِشَةُ أَخَذَتْهَا الحُمَّى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَعَلَّ فِي حَدِيثٍ تُحُدِّثَ» قَالَتْ: نَعَمْ، وَقَعَدَتْ عَائِشَةُ، قَالَتْ: مَثَلِي وَمَثَلُكُمْ كَيَعْقُوبَ وَبَنِيهِ، {بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ، وَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} [يوسف: 18]


Bukhari-4690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 3 இல்லை; உங்கள் மனம் ஒரு (மா பாவச்) செயலை(க் கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கி விட்டது. ஆகவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று) எனும் (12:18ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சவ்வலத் எனும் சொல்லுக்கு அலங்கரித்துக் காட்டியது என்று பொருள்.

4690. இப்னு யுஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது ஆயிஷா குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோரிடமிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) ‘நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு’ என்று கூறினார்கள்.

عَنْ حَدِيثِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا فَبَرَّأَهَا اللَّهُ، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ»، قُلْتُ: إِنِّي وَاللَّهِ لاَ أَجِدُ مَثَلًا، إِلَّا أَبَا يُوسُفَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} [يوسف: 18]، وَأَنْزَلَ اللَّهُ: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ} العَشْرَ الآيَاتِ


Bukhari-4689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 திண்ணமாக, (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன எனும் (12:7 ஆவது) இறைவசனம்.

4689. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள் ‘நாங்கள் தங்களிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர்(இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் சுரங்கங்கள் (எனப்படும் அரபுகளின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள்.

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَكْرَمُ؟ قَالَ: «أَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاهُمْ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ قَالَ: «فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ»، قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ العَرَبِ تَسْأَلُونِي» قَالُوا: نَعَمْ، قَالَ: «فَخِيَارُكُمْ فِي الجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا» تَابَعَهُ أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ


Bukhari-4688

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 1

இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உம் மீதும், யஅகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவுசெய்வான் எனும் (12:6ஆவது) வசனத் தொடர்.

4688. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தாம் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 65


«الكَرِيمُ ابْنُ الكَرِيمِ ابْنِ الكَرِيمِ ابْنِ الكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ»


Bukhari-4687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக,நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும் எனும் (11:114 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுலஃப் எனும் சொல்லுக்கு ஒரு நேரத்திற்குப்பின் ஒரு நேரம் என்று பொருள். ஸுலஃப் எனும் சொல்லிலிருந்து தான் அல் முஸ்தலிஃபா (இரவில் சிறிது நேரம் மக்கள் கூடுமிடம்) என்ற பெயர் (மக்காவிலுள்ள ஓரிடத்திற்கு) வந்தது. அஸ்ஸுலஃப் எனும் இச்சொல்லுக்கு ஒரு நிலைக்குப்பின் ஒரு நிலை என்ற பொருளும் உண்டு. (38:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுல்ஃபா என்பது நெருக்கம் என்ற பொருள் கொண்ட வேர்ச் சொல்லாகும். இஸ்தலஃபூ எனும் சொல்லுக்கு ஒன்று கூடினர் என்று பொருள். (26:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்லஃப்னா எனும் சொல்லுக்கு நாம் ஒன்று கூட்டினோம் என்று பொருள்.

4687. இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்.

ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார்.

أَنَّ رَجُلًا أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَأُنْزِلَتْ عَلَيْهِ: {وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ، وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ، ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114] قَالَ الرَّجُلُ: أَلِيَ هَذِهِ؟ قَالَ: «لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي»


Bukhari-4686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது பிடி இப்படித் தானிருக்கும். திண்ணமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானது மாகும் எனும் (11:102ஆவது) இறைவசனம். (11:99ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர் ரிஃப்த் எனும் சொல்லுக்கு உதவி என்று பொருள். அல் மர்ஃபூத் எனும் சொல்லுக்கு உதவியாளர் என்று பொருள். (அதன் இறந்த கால வினைச் சொல்லான) ரஃபத்துஹு எனும் சொல்லுக்கு அவனுக்கு நான் உதவிபுரிந்தேன் என்று பொருள். (11:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தர்கனூ எனும் சொல்லுக்குச் சாய்ந்து விடுதல் என்று பொருள். (11:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப லவ் லா கான எனும் சொற்றொடருக்கு இருந்திருக்க வேண்டாமா என்று பொருள். உத்ரிஃபூ (ஆசாபாசங்களைப் பின்பற்றி) அழிந்து போயினர் என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (11:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஃபீர் எனும் சொல்லுக்குக் கடுமையான (கூச்சல்) என்று பொருள். ஷஹீக் எனும் சொல்லுக்குப் பலவீனமான குரல் என்று பொருள்.

4686. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்)

«إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: ثُمَّ قَرَأَ: {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ القُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ} [هود: 102]


Bukhari-4685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

மத்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக) நியமித்தோம் எனும் (அல்குர்ஆன்: 11:84) ஆவது வசனத் தொடர்.

அதாவது மத்யன்வாசிகளுக்கு நாம் நியமித்தோம் என்று பொருள். ஏனென்றால், மத்யன் என்பது ஓர் ஊராகும்.

இதைப் போன்றுதான் (அல்குர்ஆன்: 12:82) ஆவது வசனத்திலுள்ள, “அந்த ஊரைக் கேளுங்கள்; அந்த ஓட்டகக் கூட்டத்தைக் கேளுங்கள்” என்பதற்கு அந்த ஊர்வாசிகளையும் ஒட்டகக் கூட்டத்தினரையும் (கேளுங்கள்) என்று பொருள்.


(அல்குர்ஆன்: 11:92) ஆவது வசனத்திலுள்ள, “நீங்கள் அவனைப் புறக்கணித்து விட்டீர்கள்” என்பதற்கு இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பவில்லை என ஷுஐப் (அலை) அவர்கள் (அந்த மத்யன்வாசிகளிடம்) சொன்னார்கள் என்று பொருள்.

(இதன் மூலத்திலுள்ள ழிஹ்ரிய்யு என்பதற்கு முதுகுக்கப்பால் என்று பொருள். பொதுவாக ஒரு மனிதன் தன் தேவை நிறைவேறாத போது ழஹர்த்த பி ஹாஜத்தீ (என் தேவையைப் புறக்கணித்து விட்டாய்) என்றும், வ ஜஅல்த்தனீ ழிஹ்ரிய்யன் (என்னை முதுகுக்கப்பால் ஆக்கிவிட்டாய்)

بَيْنَا ابْنُ عُمَرَ يَطُوفُ إِذْ عَرَضَ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ – أَوْ قَالَ: يَا ابْنَ عُمَرَ – سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّجْوَى؟ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يُدْنَى المُؤْمِنُ مِنْ رَبِّهِ – وَقَالَ هِشَامٌ: يَدْنُو المُؤْمِنُ – حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ فَيُقَرِّرُهُ بِذُنُوبِهِ، تَعْرِفُ ذَنْبَ كَذَا؟ يَقُولُ: أَعْرِفُ، يَقُولُ: رَبِّ أَعْرِفُ مَرَّتَيْنِ، فَيَقُولُ: سَتَرْتُهَا فِي الدُّنْيَا، وَأَغْفِرُهَا لَكَ اليَوْمَ، ثُمَّ تُطْوَى صَحِيفَةُ حَسَنَاتِهِ، وَأَمَّا الآخَرُونَ – أَوِ الكُفَّارُ – فَيُنَادَى عَلَى رُءُوسِ الأَشْهَادِ: {هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ} [هود: 18] ”
وَقَالَ شَيْبَانُ: عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا صَفْوَانُ


Bukhari-4684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 (அப்போது) அவனது அரியாசனம் (அர்ஷ்) நீரின் மீதிருந்தது எனும் (11:7ஆவது) வசனத் தொடர்.

4684. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், ‘நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவுசெய்வேன்’ என்று சொன்னான்.

மேலும் ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்ட எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிட வில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையுளம் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book

أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ، وَقَالَ: يَدُ اللَّهِ مَلْأَى لاَ تَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ، وَقَالَ: أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاءَ وَالأَرْضَ، فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَدِهِ، وَكَانَ عَرْشُهُ عَلَى المَاءِ، وَبِيَدِهِ المِيزَانُ يَخْفِضُ وَيَرْفَعُ ” {اعْتَرَاكَ} [هود: 54]: «افْتَعَلَكَ، مِنْ عَرَوْتُهُ أَيْ أَصَبْتُهُ، وَمِنْهُ يَعْرُوهُ وَاعْتَرَانِي» {آخِذٌ بِنَاصِيَتِهَا} [هود: 56]: «أَيْ فِي مِلْكِهِ وَسُلْطَانِهِ»، {عَنِيدٌ} [هود: 59]: «وَعَنُودٌ وَعَانِدٌ وَاحِدٌ، هُوَ تَأْكِيدُ التَّجَبُّرِ»، {اسْتَعْمَرَكُمْ} [هود: 61]: «جَعَلَكُمْ عُمَّارًا، أَعْمَرْتُهُ الدَّارَ فَهِيَ عُمْرَى جَعَلْتُهَا لَهُ»، {نَكِرَهُمْ} [هود: 70]: «وَأَنْكَرَهُمْ وَاسْتَنْكَرَهُمْ وَاحِدٌ»، {حَمِيدٌ مَجِيدٌ} [هود: 73]: «كَأَنَّهُ فَعِيلٌ مِنْ مَاجِدٍ، مَحْمُودٌ مِنْ حَمِدَ»، {سِجِّيلٌ} [هود: 82]: ” الشَّدِيدُ الكَبِيرُ، سِجِّيلٌ وَسِجِّينٌ، وَاللَّامُ وَالنُّونُ أُخْتَانِ، وَقَالَ تَمِيمُ بْنُ مُقْبِلٍ:
[البحر البسيط]
وَرَجْلَةٍ يَضْرِبُونَ البَيْضَ ضَاحِيَةً … ضَرْبًا تَوَاصَى بِهِ الأَبْطَالُ سِجِّينَا “

. {وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا} [الأعراف: 85]: «أَيْ إِلَى أَهْلِ مَدْيَنَ، لِأَنَّ مَدْيَنَ بَلَدٌ»، وَمِثْلُهُ {وَاسْأَلِ القَرْيَةَ} [يوسف: 82]: «وَاسْأَلِ العِيرَ، يَعْنِي أَهْلَ القَرْيَةِ وَأَصْحَابَ العِيرِ»، {وَرَاءَكُمْ ظِهْرِيًّا} [هود: 92]: ” يَقُولُ لَمْ تَلْتَفِتُوا إِلَيْهِ، وَيُقَالُ: إِذَا لَمْ يَقْضِ الرَّجُلُ حَاجَتَهُ، ظَهَرْتَ بِحَاجَتِي، وَجَعَلْتَنِي ظِهْرِيًّا، وَالظِّهْرِيُّ هَا هُنَا: أَنْ تَأْخُذَ مَعَكَ دَابَّةً أَوْ وِعَاءً تَسْتَظْهِرُ بِهِ “، {أَرَاذِلُنَا} [هود: 27]: «سُقَّاطُنَا إِجْرَامِي هُوَ مَصْدَرٌ مِنْ أَجْرَمْتُ، وَبَعْضُهُمْ يَقُولُ جَرَمْتُ»، {الفُلْكَ} [الأعراف: 64]: «وَالفَلَكُ وَاحِدٌ، وَهْيَ السَّفِينَةُ وَالسُّفُنُ» (مُجْرَاهَا) ” مَدْفَعُهَا، وَهُوَ مَصْدَرُ أَجْرَيْتُ، وَأَرْسَيْتُ: حَبَسْتُ “، وَيُقْرَأُ: (مَرْسَاهَا): «مِنْ رَسَتْ هِيَ» (وَمَجْرَاهَا): «مِنْ جَرَتْ هِيَ»، وَ (مُجْرِيهَا وَمُرْسِيهَا): «مِنْ فُعِلَ بِهَا»، {رَاسِيَاتٌ} [سبأ: 13]: «ثَابِتَاتٌ»


Next Page » « Previous Page