Author: Farook

Bukhari-4623

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 (கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்கு களான) பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக, மறுப்பாளர்கள் தாம் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கை களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர் (எனும் 5:103ஆவது இறைவசனம்). (5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ இஃத் காலல்லாஹ் எனும் சொற்றொட ரில் உள்ள கால(சொன்னான்) எனும் (இறந்த கால வினைச்) சொல்லுக்குச் சொல்வான் என்று (எதிர்கால வினையின்) பொருளாகும். இந்த வசனத்திலள்ள இஃத் எனும் சொல் சொல்லிடை இணைப்புக் குறி (ஸிலா) ஆகும். (5:112ஆவது வசனத்திலுள்ள வினை யாலணையும் பெயரான) அல்மாயிதா எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொருத்தவரை விருந்தாக்கப்படும் உணவு எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். ஈஷத்துன் ராளியா (திருப்தியான வாழ்க்கை), தத்லீக் கத்துல்பாயினா (இறுதிசெய்யப்பட்ட விவாகரத்து) ஆகிய சொற்றொடர்களைப் போல. (இதன்படி அல்மாயிதா என்பதன்) சொற்பொருள் விருந்தாளிக்கு அளிக்கப்படும் நல்ல உணவு என்பதாகும். (இஷ்திகாக் எனும் சொல் திரிபு வேறுபாட்டில் இச்சொல்லை ஃபஅல, யஃப்இலு எனும் வாய்பாட்டில்) மாத,யமீது (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு.

«رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ، كَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ» وَالوَصِيلَةُ: النَّاقَةُ [ص:55] البِكْرُ، تُبَكِّرُ فِي أَوَّلِ نِتَاجِ الإِبِلِ، ثُمَّ تُثَنِّي بَعْدُ بِأُنْثَى، وَكَانُوا يُسَيِّبُونَهَا لِطَوَاغِيتِهِمْ، إِنْ وَصَلَتْ إِحْدَاهُمَا بِالأُخْرَى لَيْسَ بَيْنَهُمَا ذَكَرٌ، وَالحَامِ: فَحْلُ الإِبِلِ يَضْرِبُ الضِّرَابَ المَعْدُودَ، فَإِذَا قَضَى ضِرَابَهُ وَدَعُوهُ لِلطَّوَاغِيتِ، وَأَعْفَوْهُ مِنَ الحَمْلِ، فَلَمْ يُحْمَلْ عَلَيْهِ شَيْءٌ وَسَمَّوْهُ الحَامِيَ ” وقَالَ لِي أَبُو اليَمَانِ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدًا، قَالَ: يُخْبِرُهُ بِهَذَا، قَالَ: وَقَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَحْوَهُ، وَرَوَاهُ ابْنُ الهَادِ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-4622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4622. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் ‘என் ஒட்டகம் எங்கே?’ என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்.

இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 05:101)

Book :65


كَانَ قَوْمٌ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتِهْزَاءً، فَيَقُولُ الرَّجُلُ: مَنْ أَبِي؟ وَيَقُولُ الرَّجُلُ تَضِلُّ نَاقَتُهُ: أَيْنَ نَاقَتِي؟ ” فَأَنْزَلَ اللَّهُ فِيهِمْ هَذِهِ الآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ} [المائدة: 101] حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا


Bukhari-4621

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப் பட்டால் அவை உங்களுக்கு மனவருத் தத்தை ஏற்படுத்தும். எனும் (5:101ஆவது) இறைவசனம்.

4621. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்னார்’ என்று கூறினார்கள். அப்போதுதான் ‘இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும’ எனும் இந்த (திருக்குர்ஆன்

خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ، قَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا»، قَالَ: فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُجُوهَهُمْ لَهُمْ خَنِينٌ، فَقَالَ رَجُلٌ: مَنْ أَبِي؟ قَالَ: فُلاَنٌ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ: {لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ} [المائدة: 101] رَوَاهُ النَّضْرُ، وَرَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ شُعْبَةَ


Bukhari-4620

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது. (ஆனால்,இனி தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து) அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்ப வர்களாகவும், நற்செயல்கள் புரிகின்றவர் களாகவும், இன்னும் (எந்த எந்தப் பொருள் களைவிட்டுத் தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து) விலகியிருப்பவர்களாகவும்,மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச் சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்ப வர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் (இத்தகைய) நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான் (எனும் 5:93ஆவது இறை வசனம்).

4620. அனஸ்(ரலி) அறிவித்தார்.

(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரிச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.

அபுந் நுஅமான்(ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு சலாம்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்ததாவது:

كُنْتُ سَاقِيَ القَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ، فَنَزَلَ تَحْرِيمُ الخَمْرِ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى، فَقَالَ أَبُو طَلْحَةَ: اخْرُجْ فَانْظُرْ مَا هَذَا الصَّوْتُ، قَالَ: فَخَرَجْتُ فَقُلْتُ: هَذَا مُنَادٍ يُنَادِي: «أَلاَ إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ»، فَقَالَ لِي: اذْهَبْ فَأَهْرِقْهَا، قَالَ: فَجَرَتْ فِي سِكَكِ المَدِينَةِ، قَالَ: وَكَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الفَضِيخَ، فَقَالَ بَعْضُ القَوْمِ: قُتِلَ قَوْمٌ وَهْيَ فِي بُطُونِهِمْ، قَالَ: فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا} [المائدة: 93]