Author: Farook

Bukhari-4552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4552. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இரண்டு பெண்கள் ‘ஒரு வீட்டில்’ அல்லது ‘ஓர் அறையில்’ (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள், ‘பிரதிவாதி

أَنَّ امْرَأَتَيْنِ، كَانَتَا تَخْرِزَانِ فِي بَيْتٍ أَوْ فِي الحُجْرَةِ، فَخَرَجَتْ إِحْدَاهُمَا وَقَدْ أُنْفِذَ بِإِشْفَى فِي كَفِّهَا، فَادَّعَتْ عَلَى الأُخْرَى، فَرُفِعَ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمْ لذَهَبَ دِمَاءُ قَوْمٍ وَأَمْوَالُهُمْ»، ذَكِّرُوهَا بِاللَّهِ وَاقْرَءُوا عَلَيْهَا: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ} [آل عمران: 77] فَذَكَّرُوهَا فَاعْتَرَفَتْ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اليَمِينُ عَلَى المُدَّعَى عَلَيْهِ»


Bukhari-4551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4551. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம்) தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனம் அருளப்பட்டது.
Book :65


«أَنَّ رَجُلًا أَقَامَ سِلْعَةً فِي السُّوقِ، فَحَلَفَ فِيهَا، لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِهِ، لِيُوقِعَ فِيهَا رَجُلًا مِنَ المُسْلِمِينَ»، فَنَزَلَتْ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] إِلَى آخِرِ [ص:35] الآيَةِ


Bukhari-4549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை. மேலும், இறுதி நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவு மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்க ளுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு (எனும்3:77ஆவது இறைவசனம்). (இவ்வசனத்தில் ஃபஈல் எனும் வாய் பாட்டில் அமைந்த துன்பம் தரும் என்ற பொருளைக் குறிக்கும்) அலீம் எனும் சொல்லுக்கு முஃப்இல் வாய்பாட்டில் அமைந்த முலீம் என்பதன் பொருளாகும். (அதாவது) துன்புறுத்துகின்ற (என்று பொருள்.)
4549. அபூ வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிராமண(வாக்குமூல)த்தின்போது துணிவுடன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி

«مَنْ حَلَفَ يَمِينَ صَبْرٍ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ» فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ: إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا، أُولَئِكَ لاَ خَلاَقَ لَهُمْ فِي الآخِرَةِ إِلَى آخِرِ الآيَةِ، قَالَ: فَدَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ، وَقَالَ: مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ؟ قُلْنَا: كَذَا وَكَذَا، قَالَ: فِيَّ أُنْزِلَتْ كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيِّنَتُكَ أَوْ يَمِينُهُ» فَقُلْتُ: إِذًا يَحْلِفَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، وَهْوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانٌ»


Bukhari-4548

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 2

இன்னும் நான் இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன் (என இறைவனை வேண்டினார் இம்ரானின் துணைவியார்- எனும் 3:36ஆவது வசனத் தொடர்).


4548. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எது வாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவரின் புதல்வரையும் தவிர!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

பிறகு அபூஹுரைரா(ரலி) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால், ‘இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)’ எனும் (அல்குர்ஆன்: 3:36) ஆவது இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 65


«مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا وَالشَّيْطَانُ يَمَسُّهُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ إِيَّاهُ، إِلَّا مَرْيَمَ وَابْنَهَا»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ} [آل عمران: 36]


Bukhari-4547

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3.

“ஆலு இம்ரான்’ அத்தியாயம்1 (3:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துக்காத்தன்’ எனும் (வேர்ச்)சொல்லும் (மற்றொரு வேர்ச்சொல்லான) “தகிய்யத்தன்’ எனும் சொல்லும் (“தற்காத்துக்கொள்ளல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(3:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸிர்ருன்’ எனும் சொல்லுக்கு “கடுங்குளிர்’ என்பது பொருள்.

(3:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷஃபா ஹுஃப்ரத்’ (நெருப்புக் கிடங்கின் விளிம்பு) எனும் செற்றொடர் “ஷஃபா அர்ரக்கியத்’ (கிணற்றின் விளிம்பு) போன்றதாகும். “ஷஃபா’ என்பதற்கு “விளிம்பு’ என்பது பொருள்.

(3:121ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துபவ்விஉ(ல் முஃமினீன மகாஇத லில்கிதால்)’ (நம்பிக்கையாளர்களை உரிய இடங்களில் நிறுத்தும் பொருட்டு) என்பதற்கு “நீங்கள் களம் அமைக்கும் பொருட்டு’ என்பது பொருள்.

(3:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “அல்முசவ்விமீன்’ (இனங்காட்டக்கூடிய) எனும் சொல்லின் ஒருமையான) “அல்முசவ்விம்’ (அல்லது “அல்முசவ்வம்) எனும் சொல்லுக்கு ஒரு தோற்றக் குறியால், அல்லது கம்பளியால், அல்லது அதிலுள்ள ஏதேனும் ஒன்றால் அடையாளம் உள்ளது என்று பொருள். (3:146ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரிப்பிய்யூன்’ (இறைபக்தர்கள்) எனும் சொல் பன்மையாகும். அதன் ஒருமை “ரிப்பிய்யுன்’ என்பதாகும்.

(3:152ஆவது வசனத்தின்

تَلاَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الآيَةَ: {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الكِتَابَ، مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الكِتَابِ، وَأُخَرُ مُتَشَابِهَاتٌ}، فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الفِتْنَةِ، وَابْتِغَاءَ تَأْوِيلِهِ، وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ، وَالرَّاسِخُونَ فِي العِلْمِ يَقُولُونَ: آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الأَلْبَابِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا رَأَيْتِ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكِ الَّذِينَ سَمَّى اللَّهُ فَاحْذَرُوهُمْ»


Bukhari-4546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4546. மர்வான் அல்அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் – அவர் இப்னு உமர்(ரலி)தாம் என்று எண்ணுகிறேன் – ‘உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான்.’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை இதற்குப் பின்னுள்ள (‘அல்லாஹ், எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பொறுப்புகளைச் சுமத்துவதில்லை’ எனும் 02:286 வது) இறைவசனம் மாற்றிவிட்டது’ என்று கூறினார்கள்.
Book :65


{إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ} [البقرة: 284] قَالَ: «نَسَخَتْهَا الآيَةُ الَّتِي بَعْدَهَا»


Bukhari-4545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (எனும் 2:284ஆவது வசனத் தொடர்).
4545. மர்வான் அல் அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் – அவர் இப்னு உமர்(ரலி) தாம் – ‘உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் ஆற்றல்மிக்கவன் ஆவான்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.
Book : 65


أَنَّهَا قَدْ نُسِخَتْ: {وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ} [البقرة: 284] ” الآيَةَ


Bukhari-4544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 ஒரு நாளைப் பற்றி அஞ்சுங்கள். அந்நாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்தவற்றுக்கு நிறைவாக(ப் பிரதிபலன்) அளிக்கப்படுவான். இன்னும் அவர்கள் (எந்த வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (எனும் 2:281ஆவது இறைவசனம்).
4544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 02:281 வது) வசனம் ஆகும்.
Book : 65


«آخِرُ آيَةٍ نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آيَةُ الرِّبَا»


Bukhari-4543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 (உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி) நெருக்கடி உள்ளவராக இருந்தால், வசதி வருகின்றவரை எதிர்பார்(த்து பொறுத்திரு)த்தல் வேண்டும். நீங்கள் (தர்மத்தின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின்,தர்மமாக வழங்கிவிடுவதே மிகவும் மேலான தாகும் (எனும் 2:280ஆவது இறைவசனம்).
4543. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.
Book : 65


«لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ، قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَهُنَّ عَلَيْنَا، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الخَمْرِ»


Next Page » « Previous Page