Author: Farook

Bukhari-4532

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4532. முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார்.
அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் ஹாரிஸ்(ரலி) தொடர்பான அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்), ‘அப்துல்லாஹ் இப்னு உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்கள்) இதை ஏற்றுக் கொண்டதில்லையே’ என்று கூறினார்.
உடனே நான் உரத்த குரலில், ‘கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் இப்னு உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன் தான்’ என்று சொன்னேன். பிறகு நான் (அந்த அவையிலிருந்து வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) ‘மாலிக் இப்னு ஆமிர்’ அல்லது ‘மாலிக் இப்னு அவ்ஃப்'(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், ‘தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னைவிட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு மஸ்வூத்(ரலி),

جَلَسْتُ إِلَى مَجْلِسٍ فِيهِ عُظْمٌ مِنَ الأَنْصَارِ، وَفِيهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، فَذَكَرْتُ حَدِيثَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فِي شَأْنِ سُبَيْعَةَ بِنْتِ الحَارِثِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: وَلَكِنَّ عَمَّهُ كَانَ لاَ يَقُولُ ذَلِكَ، فَقُلْتُ: إِنِّي لَجَرِيءٌ إِنْ كَذَبْتُ عَلَى رَجُلٍ فِي جَانِبِ الكُوفَةِ، وَرَفَعَ صَوْتَهُ، قَالَ: ثُمَّ خَرَجْتُ فَلَقِيتُ مَالِكَ بْنَ عَامِرٍ، أَوْ مَالِكَ بْنَ عَوْفٍ قُلْتُ: كَيْفَ كَانَ قَوْلُ ابْنِ مَسْعُودٍ فِي المُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَهْيَ حَامِلٌ؟ فَقَالَ: قَالَ ابْنُ مَسْعُودٍ: ” أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ، وَلاَ تَجْعَلُونَ لَهَا الرُّخْصَةَ، لَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ القُصْرَى بَعْدَ الطُّولَى، وَقَالَ أَيُّوبُ: عَنْ مُحَمَّدٍ، لَقِيتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ


Bukhari-4531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4531. அப்துல்லாஹ் இப்னு அபீ நஜீஹ் அல்மக்கீ(ரஹ்) அறிவித்தார்.
‘உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள்’ (எனும் 02:234 வது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்:
(கணவன் இறந்த) அந்தப் பெண் (நான்கு மாதம், பத்து நாள்கள் காத்திருத்தல் எனும்) இந்த ‘இத்தா’வைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் ‘உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம் மரண சாசனம் செய்வார்களாக, ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது.’ எனும் (திருக்குர்ஆன் 02:240 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாள்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாள்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாள்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவனின் வீட்டிலேயே)

{وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} [البقرة: 234] قَالَ: كَانَتْ هَذِهِ العِدَّةُ، تَعْتَدُّ عِنْدَ أَهْلِ زَوْجِهَا وَاجِبٌ، فَأَنْزَلَ اللَّهُ: {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ} قَالَ: جَعَلَ اللَّهُ لَهَا تَمَامَ السَّنَةِ سَبْعَةَ أَشْهُرٍ وَعِشْرِينَ لَيْلَةً وَصِيَّةً، إِنْ شَاءَتْ سَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى: {غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ} [البقرة: 240] فَالعِدَّةُ كَمَا هِيَ وَاجِبٌ عَلَيْهَا زَعَمَ ذَلِكَ عَنْ مُجَاهِدٍ، وَقَالَ عَطَاءٌ، قَالَ ابْنُ عَبَّاسٍ: ” نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا عِنْدَ أَهْلِهَا فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى: {غَيْرَ إِخْرَاجٍ} [البقرة: 240] قَالَ عَطَاءٌ: ” إِنْ شَاءَتْ اعْتَدَّتْ عِنْدَ أَهْلِهِ وَسَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ، لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ} [البقرة: 234] ” قَالَ عَطَاءٌ: «ثُمَّ جَاءَ المِيرَاثُ، فَنَسَخَ السُّكْنَى، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَلاَ سُكْنَى لَهَا» وَعَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ بِهَذَا، وَعَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: ” نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا فِي أَهْلِهَا فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، لِقَوْلِ اللَّهِ {غَيْرَ إِخْرَاجٍ} [البقرة: 240] ” نَحْوَهُ


Bukhari-4530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 41 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்து கொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர் களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்). (2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) யஅஃபூன (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு அன்பளிப் பாகக் கொடுத்தால் என்று பொருள்.
4530. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், ‘உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்’ எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின்

قُلْتُ: لِعُثْمَانَ بْنِ عَفَّانَ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} [البقرة: 234] قَالَ: قَدْ نَسَخَتْهَا الآيَةُ الأُخْرَى، فَلِمَ تَكْتُبُهَا؟ أَوْ تَدَعُهَا؟ قَالَ: «يَا ابْنَ أَخِي لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْهُ مِنْ مَكَانِهِ»


Bukhari-4529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 40

நீங்கள் (உங்களுடைய) மனைவியரை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா)தவணையின் இறுதியை அடைந்து விட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை (உறவினர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம். (அல்குர்ஆன்: 2:232) எனும் வசனத் தொடர்.

4529. மஃஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண் கேட்டு வந்தனர்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களின் சகோதரியை அவரின் கணவர் விவாகரத்துச் செய்து ‘இத்தா’ காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார். (எனவே, இது முழு விவாகரத்து (தலாக் பாயின்) ஆகும்.) பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஃகில் (ரலி) (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள்.

அப்போதுதான், ‘அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்துகொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்’ (அல்குர்ஆன்: 2:232) எனும் வசனம் அருளப்பட்டது.

அத்தியாயம்: 65


«أَنَّ أُخْتَ مَعْقِلِ بْنِ يَسَارٍ طَلَّقَهَا زَوْجُهَا فَتَرَكَهَا حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا، فَخَطَبَهَا، فَأَبَى مَعْقِلٌ» فَنَزَلَتْ: {فَلاَ تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ} [البقرة: 232]


Bukhari-4528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4528. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள்.

எனவே, ‘உங்கள் பெண்கள் உங்களுக்குரிய ‘விளை நிலம்’ ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) இறைவசனம் அருளப்பட்டது.

Book :65


كَانَتِ اليَهُودُ تَقُولُ: إِذَا جَامَعَهَا مِنْ وَرَائِهَا جَاءَ الوَلَدُ أَحْوَلَ، فَنَزَلَتْ: {نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ} [البقرة: 223]


Bukhari-4527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4527. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
‘எனவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர்(ரலி), ‘மனைவியிடம் அவளுடைய… கணவன் புணரலாம்’ என்று குறிப்பிட்டார்கள்.
Book :65


{فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ} [البقرة: 223]. قَالَ: يَأْتِيهَا فِي، رَوَاهُ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ


Bukhari-4526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர் கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள்தாம் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம்.
4526. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும் வரை (வேறு எதுவும்) பேசமாட்டார்கள். ஒரு நாள் (அவர்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த போது) அவர்களை (ஓதவிடாமல்) நான் பிடித்துக்கொண்டேன். அவர்கள் ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி ‘இந்த வசனம் எந்த விஷயத்தில் அருளப்பட்டது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘தெரியாது’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இன்ன இன்ன விஷயத்தில் அருளப்பட்டது’ என்று கூறிவிட்டு பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.
Book : 65


إِذَا قَرَأَ القُرْآنَ لَمْ يَتَكَلَّمْ حَتَّى يَفْرُغَ مِنْهُ، فَأَخَذْتُ عَلَيْهِ يَوْمًا، فَقَرَأَ سُورَةَ البَقَرَةِ، حَتَّى انْتَهَى إِلَى مَكَانٍ، قَالَ: تَدْرِي فِيمَ أُنْزِلَتْ؟ قُلْتُ: لاَ، قَالَ: أُنْزِلَتْ فِي كَذَا وَكَذَا، ثُمَّ مَضَى


Bukhari-4525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4525. அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற்படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன’ என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா(ரலி), ‘வழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ’ என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் ‘குஃத்திபூ’ என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள்.
Book :65


«مَعَاذَ اللَّهِ وَاللَّهِ مَا وَعَدَ اللَّهُ رَسُولَهُ مِنْ شَيْءٍ قَطُّ إِلَّا عَلِمَ أَنَّهُ كَائِنٌ قَبْلَ أَنْ يَمُوتَ، وَلَكِنْ لَمْ يَزَلِ البَلاَءُ بِالرُّسُلِ، حَتَّى خَافُوا أَنْ يَكُونَ مَنْ مَعَهُمْ يُكَذِّبُونَهُمْ» فَكَانَتْ تَقْرَؤُهَا: (وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا) مُثَقَّلَةً


Bukhari-4524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கை கொண்ட)வர்களின் (சோதனை யான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்து விடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங் களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட் டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது (எனும் 2:214ஆவது இறைவசனம்).
4524. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) ‘(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ எனும் (திருக்குர்ஆன் 12:110 வது) வசனத்தில் (‘குஃத்திபூ’ இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள் – என்று வாசிக்காமல்) ‘குஃதிபூ’ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்’) என்று வாசித்துவிட்டு அவ்வசனத்திலிருந்து, ‘இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்

{حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا} [يوسف: 110] خَفِيفَةً، ذَهَبَ بِهَا هُنَاكَ، وَتَلاَ: {حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلاَ إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ} [البقرة: 214]. فَلَقِيتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ


Bukhari-4523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 2:204ஆவது வசனத் தொடர்). (2:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஸ்ல் எனும் சொல்லுக்கு உயிரினம் என்று பொருள் என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4523. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்பவனேயாவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 65


«أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الخَصِمُ» وَقَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page