Author: Farook

Bukhari-3549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3549. பராஉ (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை.
Book :61


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسَنَ النَّاسِ وَجْهًا وَأَحْسَنَهُ خَلْقًا، لَيْسَ بِالطَّوِيلِ البَائِنِ، وَلاَ بِالقَصِيرِ»


Bukhari-3548

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3548. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை.

நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தம் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலும் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.

Book :61


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ بِالطَّوِيلِ البَائِنِ، وَلاَ بِالقَصِيرِ، وَلاَ بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلَيْسَ بِالْآدَمِ، وَلَيْسَ بِالْجَعْدِ القَطَطِ، وَلاَ بِالسَّبْطِ، بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، فَتَوَفَّاهُ اللَّهُ وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ»


Bukhari-3547

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3547. ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான் (ரஹ்) அறிவித்தார்.

அனஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் நாற்பது வயதுடையவர்கள் இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்து வந்தார்கள். மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்துவிட்டார்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் ரபீஆ (ரஹ்) கூறினார்: நான் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒன்றை (நபியவர்களின் மறைவுக்குப் பின்) பார்த்தேன். அது சிவப்பாக இருந்தது.) நான் (அது குறித்து, நபியவர்கள் மருதாணி பூசி இருந்தார்களா என்று) கேட்டேன். அதற்கு, ‘(நபியவர்கள் பூசிய) நறுமணப் பொருளின் காரணத்தால்

يَصِفُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ رَبْعَةً مِنَ القَوْمِ لَيْسَ بِالطَّوِيلِ وَلاَ بِالقَصِيرِ، أَزْهَرَ اللَّوْنِ لَيْسَ بِأَبْيَضَ، أَمْهَقَ وَلاَ آدَمَ، لَيْسَ بِجَعْدٍ قَطَطٍ، وَلاَ سَبْطٍ رَجِلٍ أُنْزِلَ عَلَيْهِ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ، فَلَبِثَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ يُنْزَلُ عَلَيْهِ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، وَقُبِضَ وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعَرَةً بَيْضَاءَ» قَالَ رَبِيعَةُ: «فَرَأَيْتُ شَعَرًا مِنْ شَعَرِهِ، فَإِذَا هُوَ أَحْمَرُ فَسَأَلْتُ فَقِيلَ احْمَرَّ مِنَ الطِّيبِ»


Bukhari-3546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3546. ஹரீஸ் இப்னு உஸ்மான் (ரஹ்) கூறினார்.

நான் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(நான் அவர்களைப் பார்த்த போது) அவர்களின் கீழுதட்டின் அடியில் (தாடைக்க மேலே) உள்ள குறுந்தாடியில் வெள்ளை முடிகள் இருந்தன’ என்று பதிலளித்தார்கள்.
Book :61


أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَرَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ شَيْخًا؟ قَالَ: «كَانَ فِي عَنْفَقَتِهِ شَعَرَاتٌ بِيضٌ»


Bukhari-3545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3545. அபூ ஜுஹைஃபா அஸ் ஸுவாயீ (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன்.
Book :61


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَرَأَيْتُ بَيَاضًا مِنْ تَحْتِ شَفَتِهِ السُّفْلَى العَنْفَقَةَ»


Bukhari-3544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3544. இஸ்மாயீல் இப்னு அபீ காலித் (ரஹ்) அறிவித்தார்.

‘நபி (ஸல்) அவர்களை பார்த்திருக்கிறேன். அலீயின் மகன் ஹஸன் அவர்கள் அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி பொழிவதாக! நபி (ஸல்) அவர்களை (தோற்றத்தில்) ஒத்திருந்தார்கள்’ என்று அபூ ஜுஹைஃபா (ரலி) கூறினார்.

நான் அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்களின் தன்மையை எனக்கு கூறுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் பொன்னிறமுடையவர்களாக, வெண்மை கலந்த கருநிற தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். எங்களுக்கு பதின் மூன்று பெண் ஒட்டகங்கள் தரும்படி உத்திரவிட்டார்கள். அதை நாங்கள் கைவசம் பெற்றுக் கொள்வதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்’ என்று கூறினார்கள்.
Book :61


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الحَسَنُ بْنُ عَلِيٍّ عَلَيْهِمَا السَّلاَمُ يُشْبِهُهُ، قُلْتُ لِأَبِي جُحَيْفَةَ: صِفْهُ لِي، قَالَ: ” كَانَ أَبْيَضَ، قَدْ شَمِطَ، وَأَمَرَ لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلاَثَ عَشْرَةَ قَلُوصًا، قَالَ: فَقُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ نَقْبِضَهَا


Bukhari-3543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3543. அபூ ஜுஹைஃபா (ரலி) கூறினார்.

நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஹஸன் (ரலி) (தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கிறார்கள்.
Book :61


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ الحَسَنُ يُشْبِهُهُ»


Bukhari-3542

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 நபி (ஸல்) அவர்களின் தன்மை.

3542. உக்பா இப்னு ஹாரிஸ் (ரலி) கூறினார்.

அபூ பக்ர் (ரலி) அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்களைக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள்.

உடனே, அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக் கொண்டு, ‘என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கிறாய்; (உன் தந்தை) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை’ என்று கூறினார்கள். அப்போது அலீ (ரலி) (அபூ பக்ர் – ரலி – அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
Book : 61


صَلَّى أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ العَصْرَ، ثُمَّ خَرَجَ يَمْشِي، فَرَأَى الحَسَنَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، فَحَمَلَهُ عَلَى عَاتِقِهِ،

وَقَالَ: بِأَبِي، شَبِيهٌ بِالنَّبِيِّ لاَ شَبِيهٌ بِعَلِيٍّ ” وَعَلِيٌّ يَضْحَكُ


Bukhari-3541

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

நபித்துவ முத்திரை.

3541. சாயிப் இப்னு யஸீத் (ரலி) கூறினார்.

என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்’ என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இரக்கத்துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் ‘உளூ’ செய்தார்கள். அவர்கள் உளூச் செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு, நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன்.

(நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் இப்னு உபைதில்லாஹ் (ரஹ்), ‘குதிரையின் இருகண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது’ என்று பதிலளித்தார்கள்.

(அறிஞர்) இப்ராஹீம் இப்னு ஹம்ஸா (ரஹ்), ‘மணவறைத் திரையில் பொருத்தப்படுகிற பித்தானைப் போன்றிருந்தது’ என்று கூறினார்கள்.’
Book : 61


ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَقَعَ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ، وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ، «فَنَظَرْتُ إِلَى خَاتِمٍ بَيْنَ كَتِفَيْهِ»،

قَالَ: ابْنُ عُبَيْدِ اللَّهِ «الحُجْلَةُ مِنْ حُجَلِ الفَرَسِ الَّذِي بَيْنَ عَيْنَيْهِ»،

قَالَ: إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ: مِثْلَ زِرِّ الحَجَلَةِ


Bukhari-3540

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

3540. ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) அறிவித்தார்.

சாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், ‘எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்தித்தார்கள்’ என்று கூறினார்கள்.
Book : 61


رَأَيْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، ابْنَ أَرْبَعٍ وَتِسْعِينَ، جَلْدًا مُعْتَدِلًا، فَقَالَ: قَدْ عَلِمْتُ: مَا مُتِّعْتُ بِهِ سَمْعِي وَبَصَرِي إِلَّا بِدُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

إِنَّ خَالَتِي ذَهَبَتْ بِي إِلَيْهِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي شَاكٍ، فَادْعُ اللَّهَ لَهُ، قَالَ: «فَدَعَا لِي»


Next Page » « Previous Page