Author: Farook

Bukhari-3377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 17

அல்லாஹ் கூறுகிறான்: ஸமூத் குலத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன்: 7:73)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ஹிஜ்ர் வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (அல்குர்ஆன்: 15:80)

ஹிஜ்ர் என்பதற்கு விலக்கப்பட்டது, கட்டடம், பெண்குதிரை, அறிவு முதலான பொருட்கள் இருந்தாலும் இங்கே ஸமூத் கூட்டத்தார் வசித்த இடத்தையே அது குறிக்கும்.


3377. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஸாலிஹ் – அலை- அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி (ஸல்) அவர்கள், ‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூஸம்ஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக் கொண்டு முன்வந்தான்’ என்று கூறினார்கள்.


அத்தியாயம்: 60


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَكَرَ الَّذِي عَقَرَ النَّاقَةَ، قَالَ: «انْتَدَبَ لَهَا رَجُلٌ ذُو عِزٍّ وَمَنَعَةٍ فِي قَوْمِهِ كَأَبِي زَمْعَةَ»


Bukhari-3376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

(அல்லாஹ் கூறுகிறான்:) பிறகு, அந்தத் தூதர்கள் லூத்திடம் வந்த போது, நீங்கள் அறிமுகமற்றவர்களாய் இருக்கிறீர்களே என்று லூத் கூறினார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: இல்லை. எதனைக் குறித்து இவர்கள் சந்தேகம் கொண்டிருந்தார்களோ அதனையே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். நாங்கள் சத்தியத்துடன் உங்களிடம் வந்திருக்கின்றோம். நாங்கள் உண்மையைத் தான் சொல்கிறோம்.

எனவே, நீங்கள் இரவு சற்று இருக்கும் போதே உங்கள் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். மேலும்,நீங்கள் அவர்களைப் பின் தொடர்ந்தே செல்லுங்கள்! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்! எங்கு செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்படுகின்றதோ அங்கு நேராகச் செல்லுங்கள். மேலும்,விடிவதற்குள் இவர்கள் அனைவரும் வேரோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நமது இந்த முடிவை நாம் திட்டவட்டமாக அவருக்கு அறிவித்து விட்டோம்.

(இதற்குள்ளாக) ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக லூத்தின் இல்லம் வந்(து சூழ்ந்)தனர். லூத் கூறினார்: (சகோதரர்களே!) இ(ந்தச் சிறு)வர்கள் என்னுடைய விருந்தாளி (வானவர்)கள். என்னை அவமானப்படுத்தி விடாதீர்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்! அதற்கு அவர்கள், ஊர் உலகத்துக்கெல்லாம்

قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]


Bukhari-3375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

(அல்லாஹ் கூறுகிறான்:)

மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். நினைவு கூருங்கள்: அவர் தம் சமூகத்தாரிடம், நீங்கள் உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கிறீர்களா? பெண்களை விட்டுவிட்டு, காம உணர்வைத் தீர்த்துக் கொள்ள ஆண்களையா தேடியலைகிறீர்கள்?

உண்மையில் நீங்கள் மிக அறிவீனமான செயல் புரியும் மக்கள் ஆவீர் என்று சொன்னார். ஆயினும், அவருடைய சமூகத்தாரின் பதில், லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள். இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் என்பதாகவே இருந்தது.

இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவளை நாம் பின் தங்கியவர்களில் ஒருத்தியாக முடிவுசெய்து விட்டிருந்தோம். மேலும் அந்த மக்களின் மீது ஒரு மழையைப் பொழியச் செய்தோம். அது எச்சரிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் கெட்ட மழையாய் இருந்தது. (27:54-58)

3375. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லூத்(அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர்களாயிருந்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 60


«يَغْفِرُ اللَّهُ لِلُوطٍ، إِنْ كَانَ لَيَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ»


Bukhari-3374

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் நிகழ்ச்சி.

இது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களும், அபூஹுரைரா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 14

(அல்லாஹ் கூறுகிறான்:) யஅகூபை இறப்பு அணுகிய போது நீங்கள் அங்கிருந்தீர்களா? அவர் இறக்கும் வேளையில் தம் மக்களிடம் கேட்டார்: மக்களே! எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்? அதற்கு அவர்கள், உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அத்துடன் நாங்கள் அவனுக்கே கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக இருப்போம் என்று கூறினார்கள். (2:133)49

3374. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள்

قِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ «أَكْرَمُهُمْ أَتْقَاهُمْ» قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ، ابْنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ، ابْنِ خَلِيلِ اللَّهِ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ العَرَبِ تَسْأَلُونِي» قَالُوا: نَعَمْ، قَالَ: «فَخِيَارُكُمْ فِي الجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقُهُوا»


Bukhari-3373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

அல்லாஹ் கூறுகிறான்: இந்த வேதத்தில் (நம் அடியாரும், தூதருமான) இஸ்மாயீல்அவர்களை நினைவு கூருங்கள். அவர் தன் வாக்குறுதியில் உண்மையாளராய் இருந்தார். (19:54)

3373. ஸலமா இப்னுஅக்வஃ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல்(அலை) அவர்களும்) அம்பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

உடனே, அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரண்டு சாரரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்தினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம்பெய்யாமல் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், (மீண்டும்) ‘நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 60


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا ارْمُوا، وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ» قَالَ: فَأَمْسَكَ أَحَدُ الفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكُمْ لاَ تَرْمُونَ». فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ، قَالَ: «ارْمُوا وَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ»


Bukhari-3372

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றியும் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருந்தாளிகள்,உங்கள் மீது சாந்தி நிலவுவதாக! என்று கூறி அவரிடம் வந்த போது, உங்களைக் குறித்து எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று அவர் கூறினார். அதற்கு அவர்கள், நீங்கள் அஞ்ச வேண்டாம். ஞானமுள்ள ஒரு குழந்தையைப் பற்றிய நற்செய்தியை உங்களுக்கு நாங்கள் அறிவிக்கின்றோம் என்று பதில் கூறினார்கள். (திருக் குர்ஆன் 15:51-53)

(நினைவு கூருங்கள்:) என் இரட்சகனே! இறந்தவர்களை நீ எப்படி உயிராக்குகின்றாய் என்பதை எனக்குக் காட்டு என்று இப்ராஹீம் கூறிய போது, நீங்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? என்று (அல்லாஹ்) கேட்டான். (அதற்கு) அவர், ஆம்; (நம்பிக்கை கெண்டுள் ளேன்.) ஆயினும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக (இப்படிக் கேட்டேன்) என்று சொன்னார். (2:260)

3372. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி யுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.

திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம(அலை) அவர்கள்,

نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ: {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي المَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي} [البقرة: 260]

وَيَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفُ، لَأَجَبْتُ الدَّاعِيَ


Bukhari-3371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3371. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் – என்று கூறுவார்கள்.

Book :60


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الحَسَنَ وَالحُسَيْنَ، وَيَقُولُ: ” إِنَّ أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ


Bukhari-3370

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3370. அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா (ரஹ்) அறிவித்தார்:

என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, “நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்’ என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல், முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு! நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.

இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின்

أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: بَلَى، فَأَهْدِهَا لِي، فَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ البَيْتِ، فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ


Bukhari-3369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3369. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்

மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே!’ உங்களின் மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்து’ சொல்வது?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் இறைவா!

இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தாரின் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்களின் மீதும், அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் அவர்களின் மீதும் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளின் மீதும் கருணை புரிவாயாக!

இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களின் மனைவிமார்களின் மீதும் அவர்களின் சந்ததிகளின் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்’ என்று சொல்லுங்கள்’ என பதிலளித்தார்கள்.
Book :60


أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ


Bukhari-3368

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3368. நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை (புதுப்பித்துக்) கட்டிய பொழுது இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களை விடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி) கட்டியிருப்பதை நீ பார்க்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதை தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் சாலிம்(ரஹ்) கூறினார்.

(இதை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னி அபூ பக்ர்(ரலி) அறிவிக்கக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘ஆயிஷா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டிருந்தால் அது சரியே!

ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும்) வளைந்த பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரண்டு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம் இறையில்லமான கஅபா, இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம்விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும் என்றே கருதுகிறேன்’

«أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ لَمَّا بَنَوْا الكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟ فَقَالَ: «لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالكُفْرِ»، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الحِجْرَ، إِلَّا أَنَّ البَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ ” وَقَالَ إِسْمَاعِيلُ: عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ


Next Page » « Previous Page