Author: Farook

Bukhari-2613

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2613. இப்னு உமர்(ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்) என்று கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள். நபி (ல்) அவர்கள், அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு அவர்களுக்குத் தேவையுள்ளது என்று கூறினார்கள்.
Book :50


أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ، فَذَكَرَتْ لَهُ ذَلِكَ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا»، فَقَالَ: «مَا لِي وَلِلدُّنْيَا» فَأَتَاهَا عَلِيٌّ، فَذَكَرَ ذَلِكَ لَهَا، فَقَالَتْ: لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ، قَالَ: «تُرْسِلُ بِهِ إِلَى فُلاَنٍ، أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ»


Bukhari-2612

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 எதை அணிவது வெறுக்கத் தக்கதோ அதை அன்பளிப்பாக வழங்குதல்.

2612. இப்னு உமர்(ரலி) கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் நுழைவாயிலருகே பட்டு அங்கி விற்கப்படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் வாங்கி, ஜும்ஆ நாளிலும், தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும் போதும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்குமே என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார் என்று கூறினார்கள். பிறகு, சில பட்டு அங்கிகள் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றிலிருந்து ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களா? -உTதாரிdதுடைய- அங்கியின் விஷயத்தில் நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இதை நீங்கள் அணிந்து கொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்த, இணைவைப்பவரான தன் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.
Book : 50


رَأَى عُمَرُ بْنُ الخَطَّابِ حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ المَسْجِدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوِ اشْتَرَيْتَهَا، فَلَبِسْتَهَا يَوْمَ الجُمُعَةِ وَلِلْوَفْدِ، قَالَ: «إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ»، ثُمَّ جَاءَتْ حُلَلٌ، فَأَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ مِنْهَا حُلَّةً، وَقَالَ: أَكَسَوْتَنِيهَا، وَقُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ؟ فَقَالَ: «إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا»، فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا


Bukhari-2611

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 ஒருவர், தன் ஒட்டகத்தில் சவாரி செய்து கொண்டிருப்பவருக்கே அதை அன்பளிப்புச் செய்து விட்டால் அது செல்லும்.

2611. இப்னு உமர்(ரலி) கூறியதாவது:

நாங்கள் ஒரு பிராயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நான் (என் தந்தைக்குச் சொந்தமான) ஒரு முரட்டு ஒட்டகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம், இதை எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி (கையகப்படுத்தாமலேயே), அப்துல்லாஹ்வே! இது உனக்குரியது என்று என்னிடம் கூறினார்கள்.
Book : 50


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، وَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «بِعْنِيهِ»، فَابْتَاعَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ»


Bukhari-2610

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2610. இப்னு உமர்(ரலி) கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகம் ஒன்றின் மீது நான் சவாரி செய்து கொண்டிருந்தேன். அது நபி (ஸல்) அவர்களை முந்திக் கொண்டு சென்றது. அப்போது என் தந்தை உமர் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ்வே! நபி (ஸல்) அவர்களை யாரும் முந்தக் கூடாது என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், அதை எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்டார்கள். என் தந்தை, அதை உங்களுக்கு நான் விற்றுவிட்டேன் என்று கூறினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள். பிறகு என்னைப் பார்த்து, அப்துல்லாஹ்வே! இது உனக்குரியது. நீ விரும்பியபடி இதைப் பயன்படுத்திக் கொள் என்று சொன்னார்கள்.
Book :50


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَكَانَ عَلَى بَكْرٍ لِعُمَرَ صَعْبٍ، فَكَانَ يَتَقَدَّمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُولُ أَبُوهُ: يَا عَبْدَ اللَّهِ، لاَ يَتَقَدَّمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدٌ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِعْنِيهِ»، فَقَالَ عُمَرُ: هُوَ لَكَ، فَاشْتَرَاهُ، ثُمَّ قَالَ: «هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ، فَاصْنَعْ بِهِ مَا شِئْتَ»


Bukhari-2609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2609. அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதையுடைய ஒட்டகத்தை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றார்கள். அதைக் கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களிடம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டு வந்தார். (அப்போது அவர் நபியவர்களிடம் சற்று கடுமையாகப் பேசினார்.

ஆகவே, தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள்.) நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களைத் தடுத்து), உரிமையுடையவர் கடுமையாகப் பேச அனுமதியுண்டு என்று கூறினார்கள். பிறகு, அவரது சிறு வயது ஒட்டத்தை விடச் சிறந்ததைக் கொடுத்து அவரது கடனை அடைத்தார்கள். மேலும், உங்களில் எவர் அழகிய முறையில் கடனை அடைக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள்.
Book :50


أَنَّهُ أَخَذَ سِنًّا، فَجَاءَ صَاحِبُهُ يَتَقَاضَاهُ، فَقَالُوا لَهُ: فَقَالَ: «إِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا»، ثُمَّ قَضَاهُ أَفْضَلَ مِنْ سِنِّهِ، وَقَالَ: «أَفْضَلُكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً»


Bukhari-2607 & 2608

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 பலர் பலருக்கு அன்பளிப்புச் செய்தல்.

2607. & 2608. மர்வான் பின் ஹகம் (ரலி) மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், ஹவாஸின் குலத்தார் முஸ்லிம்களாக வந்தபோது அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதிகளையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.

(உங்கள்) போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வம் இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள் அல்லது போர்க் கைதிகள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகி விட்டபோது, நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடயே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்தார்கள்.

حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ، فَقَالَ لَهُمْ: ” مَعِي مَنْ تَرَوْنَ وَأَحَبُّ الحَدِيثِ إِلَيَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ: إِمَّا السَّبْيَ وَإِمَّا المَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ “، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلَّا إِحْدَى الطَّائِفَتَيْنِ، قَالُوا: فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا، فَقَامَ فِي المُسْلِمِينَ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ جَاءُونَا تَائِبِينَ وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ، فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ»، فَقَالَ النَّاسُ: طَيَّبْنَا يَا رَسُولَ اللَّهِ لَهُمْ، فَقَالَ لَهُمْ: «إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِيهِ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ»، فَرَجَعَ النَّاسُ، فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ أَنَّهُمْ طَيَّبُوا، وَأَذِنُوا وَهَذَا الَّذِي بَلَغَنَا مِنْ سَبْيِ هَوَازِنَ، هَذَا آخِرُ قَوْلِ الزُّهْرِيِّ «يَعْنِي فَهَذَا الَّذِي بَلَغَنَا»


Bukhari-2606

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2606. அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரை தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், உரிமையுடையவர் (கடன் கொடுத்தவர்), தன் உரிமையை வசூலிக்கும் போது கடுமையாகப் பேச(வும் கடுமையாக நடந்து கொள்ள)வும் அவருக்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டு, அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின் சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம் தான் எங்களுக்குக் கிடைக்கிறது என்று கூற, நபி (ஸல்) அவர்கள், அதை வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார் என்று கூறினார்கள்.
Book :50


كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ: «دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا»، وَقَالَ: «اشْتَرُوا لَهُ سِنًّا، فَأَعْطُوهَا إِيَّاهُ» فَقَالُوا: إِنَّا لاَ نَجِدُ سِنًّا إِلَّا سِنًّا هِيَ أَفْضَلُ مِنْ سِنِّهِ، قَالَ: «فَاشْتَرُوهَا، فَأَعْطُوهَا إِيَّاهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً»


Bukhari-2605

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2605. சஹ்ல் பின் சஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது, அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, இவர்களுக்கு இந்தப் பாலைக் கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தருகிறாயா? என்று கேட்டார்கள்.

அச்சிறுவர், மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய (நற்)பேற்றை வேறெவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த பானத்தை சிறுவரின் கையில் வைத்தார்கள்.
Book :50


أُتِيَ بِشَرَابٍ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ، وَعَنْ يَسَارِهِ أَشْيَاخٌ، فَقَالَ لِلْغُلاَمِ: «أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ»، فَقَالَ الغُلاَمُ: لاَ وَاللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا، فَتَلَّهُ فِي يَدِهِ


Bukhari-2603

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 கைவசம் பெற்றுக் கொண்ட அன்பளிப்பும், பெற்றுக் கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹவாஸின் குலத்தாருக்கு அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக (கனீமத்தாக) தாங்கள் பெற்றவற்றை, அவை பங்கிடப்படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்து விட்டார்கள்.

2603. ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம்  (அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் போது) சென்றேன், எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.
Book : 50


«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، فَقَضَانِي وَزَادَنِي»


Next Page » « Previous Page