Author: Farook

Bukhari-2602

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 ஒருவர் பலருக்கு அன்பளிப்புச் செய்வது.

அஸ்மா (ரலி) அவர்கள், காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களையும், அப்துல்லாஹ் பின் அபீ அத்தீக் (ரஹ்) அவர்களையும் பார்த்து, நான் என் சகோதரி ஆயிஷாவிடமிருந்து ஃகாபாவிலிருந்த ஒரு சொத்தை வாரிசாகப் பெற்றேன். அதற்குப் பகரமாக முஆவியா (ரலி) அவர்கள் எனக்கு ஒருலட்சம் கொடுத்திருந்தார்கள். அதை உங்கள் இருவருக்கும் என் அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்கள்.

2602. சஹ்ல் பின் சஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலது பக்கத்தில் ஒரு சிறுவரும் இடது பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் அந்த சிறுவரிடம், நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (என் பக்கத்திலுள்ள முதியவர்களுக்கு) கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்கள். அந்தச் சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை வேறெவருக்காகவும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி) பானத்தை வைத்தார்கள்.
Book : 50


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِشَرَابٍ، فَشَرِبَ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ، فَقَالَ لِلْغُلاَمِ: «إِنْ أَذِنْتَ لِي أَعْطَيْتُ هَؤُلاَءِ»، فَقَالَ: مَا كُنْتُ لِأُوثِرَ بِنَصِيبِي مِنْكَ يَا رَسُولَ اللَّهِ أَحَدًا، فَتَلَّهُ فِي يَدِهِ


Bukhari-2601

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 வரவேண்டிய கடனை அன்பளிப்பாக்கி விடுவது.

இதற்கு அனுமதியுண்டு என்று ஹகம் (ரஹ்) கூறுகிறார்கள்.

ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் தமக்கு ஒரு மனிதர் தரவேண்டிய கடனை அன்பளிப்புச் செய்தார்கள்.

எவர் மீது ஒரு கடமை (அல்லது கடன்) இருக்கின்றதோ, அவர் அதனை நிறைவேற்றி விடட்டும்; அல்லது உரியவரிடம் மன்னிப்பு வாங்கி அதை ஹலால் (தனக்கு அனுமதிக்கப்பட்டதாக) ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை தன் மீது கடன் இருக்கின்ற நிலையில் கொல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட் டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் (மீதியிருந்த கடனைத் தள்ளுபடி செய்து) என் தந்தையை மன்னிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்கள்.

2601. ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை உஹுதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப்பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள், என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின்

أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، فَاشْتَدَّ الغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمْتُهُ، فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا ثَمَرَ حَائِطِي، وَيُحَلِّلُوا أَبِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي وَلَمْ يَكْسِرْهُ لَهُمْ، وَلَكِنْ قَالَ: «سَأَغْدُو عَلَيْكَ إِنْ شَاءَ اللَّهُ»،

فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهِ بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ حُقُوقَهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ ثَمَرِهَا بَقِيَّةٌ، ثُمَّ جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ، فَأَخْبَرْتُهُ بِذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «اسْمَعْ، وَهُوَ جَالِسٌ، يَا عُمَرُ»، فَقَالَ: أَلَّا يَكُونُ؟ قَدْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ وَاللَّهِ، إِنَّكَ لَرَسُولُ اللَّهِ


Bukhari-2600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 அன்பளிப்பு பெற்றவர் அன்பளிப்பைக் கைவசம் பெற்றுக் கொண்டார்; ஆனால், நான் ஏற்றுக் கொண்டேன் என்று கூறவில்லையென்றால்……..

2600. அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்ன (நடந்தது)? என்று கேட்டார்கள். அவர் நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டேன் என்றார்.

நபி (ஸல்) அவர்கள் உன்னிடம் அடிமை எவரும் உண்டா? என்று கேட்டார்கள். அம்மனிதர், இல்லை என்று கூறினார். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உன்னால் முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர், முடியாது என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா என்று கேட்டார்கள்.. அதற்கும் அவர் முடியாது என்று பதிலளித்தார்.

அப்போது அன்சாரி ஒருவர், அரக் ஒன்றை; கொண்டு வந்தார். அரக் என்பது பேரீச்சம் பழக் கூடையாகும். நபி (ஸல்) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், இதை எடுத்துச் சென்று தர்மம் செய்து விடு என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்களை விட அதிகத் தேவையுடைய(வறிய)வர்களுக்கா நான் இதை தர்மம் செய்வது?

உங்களை சத்திய மார்க்கத்துடன்

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَلَكْتُ، فَقَالَ: «وَمَا ذَاكَ؟»، قَالَ: وَقَعْتُ بِأَهْلِي فِي رَمَضَانَ، قَالَ: «تَجِدُ رَقَبَةً؟»، قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟»، قَالَ: لاَ، قَالَ: «فَتَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا؟» قَالَ: لاَ، قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بِعَرَقٍ، وَالعَرَقُ المِكْتَلُ فِيهِ تَمْرٌ، فَقَالَ: «اذْهَبْ بِهَذَا فَتَصَدَّقْ بِهِ»، قَالَ: عَلَى أَحْوَجَ مِنَّا يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا، قَالَ: «اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ»


Bukhari-2599

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 (அன்பளிப்பாக வழங்கப்படும்) அடிமைகளையும் பொருட்களையும் எப்படிப் பெற்றுக் கொள்வது?

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு முரட்டு ஒட்டகக் குட்டியின் மீது (சவாரி செய்து கொண்டு) இருந்தேன்; அதை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள். பின்னர், அப்துல்லாஹ்வே! இது உனக்குரியது என்று நபியவர்கள் கூறினார்கள்.

2599. மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள். ஆனால், என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றையும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதரிடம் வா! என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன்.

என் தந்தை, எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு என்று கூற, நான் நபி (ஸல்) அவர்களை அழைத்தேன், அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள், நான் உங்களுக்காக இதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தேன் என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, மக்ரமா திருப்தியடைந்தான் என்று கூறினார்கள்.
Book : 50


قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةً، وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ مِنْهَا شَيْئًا، فَقَالَ مَخْرَمَةُ: يَا بُنَيَّ، انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقْتُ مَعَهُ، فَقَالَ: ادْخُلْ، فَادْعُهُ لِي، قَالَ: فَدَعَوْتُهُ لَهُ، فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا، فَقَالَ: «خَبَأْنَا هَذَا لَكَ»، قَالَ: فَنَظَرَ إِلَيْهِ، فَقَالَ: «رَضِيَ مَخْرَمَةُ»


Bukhari-2598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புச் செய்து, அல்லது அன்பளிப்புச் செய்வதாக வாக்களித்து, அன்பளிப்பு தன்னிடம் வந்து சேருவதற்கு முன்பே (அன்பளிப்புச் செய்ய வாக்களித்தவர் அல்லது வாக்களிக்கப்பட்டவர்) இறந்து விட்டால்…

(வாக்களித்தவர், வாக்களிக்கப்பட்டவர் இருவருமே இறந்து விட்டால், அன்பளிப்புப் பெறுபவர் உயிராயிருந்த போதே அன்பளிப்புப் பொருள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததெனில் அது அன்பளிப்புப் பெறுபவருடைய வாரிசுகளுக்குரியதாகும்.

அன்பளிப்புப் பெறுபவர் உயிராயிருந்த போது அன்பளிப்புப் பொருள் (அவருக்கென்று) தனியாக எடுத்து வைக்கப்படவில்லை யென்றால் அது அன்பளிப்புச் செய்தவரின் வாரிசுகளுக்குரியதாகும் என்று அபீதா பின் அம்ரு (ரஹ்) கூறுகின்றார்கள்.

இருவரில் எவர் முதலில் இறந்தாலும் அன்பளிப்புப் பொருளை அன்பளிப்புப் பெறுபவரின் தூதர் கைவசம் பெற்றுக் கொண்டிருந்தால் அது அன்பளிப்புப் பெற்றவரின் வாரிசுகளுக்குரியதேயாகும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

2598. ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் பஹ்ரைனின் நிதி வந்து விட்டால் நான் உனக்கு இவ்வளவு தருவேன் என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால்,

قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ جَاءَ مَالُ البَحْرَيْنِ أَعْطَيْتُكَ هَكَذَا – ثَلاَثًا»، فَلَمْ يَقْدَمْ حَتَّى تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ أَوْ دَيْنٌ، فَلْيَأْتِنَا، فَأَتَيْتُهُ، فَقُلْتُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَدَنِي فَحَثَى لِي ثَلاَثًا


Bukhari-2597

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2597. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸ்த் என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார்.

அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? என்று மும்முறை கூறினார்கள்.
Book :50


اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنَ الأَزْدِ، يُقَالُ لَهُ ابْنُ الأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ قَالَ: هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي، قَالَ: «فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ، فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لاَ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ القِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ، أَوْ شَاةً تَيْعَرُ» ثُمَّ رَفَعَ بِيَدِهِ  حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ: «اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ، اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ» ثَلاَثًا


Bukhari-2596

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 தகுந்த காரணத்தினால் அன்பளிப்பை ஏற்க மறுப்பது.

அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது; இன்று அது லஞ்சமாக மாறிவிட்டது என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

2596. ஸஅப் பின் ஜஸ்ஸாமா(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் அப்வா என்னும் இடத்தில் அல்லது வத்தான் என்னும் இடத்தில் இருந்தபோது, (வேட்டையாடிய) காட்டுக் கழுதையை அவர்களுக்கு நான் அன்பளிப்பாகத் தந்தேன், அப்போது அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். ஆகவே, அதைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவர்கள் என் அன்பளிப்பை ஏற்க மறுத்து விட்டதால் என் முகத்தில் தோன்றிய கவலைக் குறியைக் கண்டபோது, நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால் தான் உன் அன்பளிப்பைத் திருப்பித் தந்தோம் என்று கூறினார்கள்.
Book : 50


أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِمَارَ وَحْشٍ وَهُوَ بِالأَبْوَاءِ – أَوْ بِوَدَّانَ – وَهُوَ مُحْرِمٌ، فَرَدَّهُ، قَالَ صَعْبٌ: فَلَمَّا عَرَفَ فِي وَجْهِي رَدَّهُ هَدِيَّتِي قَالَ: «لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ وَلَكِنَّا حُرُمٌ»


Bukhari-2595

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2595. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் எவருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அவ்விருவரில் எவரது வாசல் உன் வீட்டு வாசலுக்கு அருகிலுள்ளதோ அவருக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள்.
Book :50


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي؟ قَالَ: «إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا»


Bukhari-2594

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 யாருக்கு முதலில் அன்பளிப்புச் செய்வது?

2594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையான குரைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான மைமூனா (ரலி) அவர்கள் தமது அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், (இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய் மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
Book : 50


إِنَّ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْتَقَتْ وَلِيدَةً لَهَا، فَقَالَ لَهَا: «وَلَوْ وَصَلْتِ بَعْضَ أَخْوَالِكِ كَانَ أَعْظَمَ لِأَجْرِكِ»


Bukhari-2593

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2593. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கலில்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள்.

ஆனால், சவ்தா பின்த்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
Book :50


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page