Author: Farook

Bukhari-2592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2592. மைமூனா பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ (விடுதலை) செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
Book :50


أَنَّهَا أَعْتَقَتْ وَلِيدَةً وَلَمْ تَسْتَأْذِنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ يَوْمُهَا الَّذِي يَدُورُ عَلَيْهَا فِيهِ، قَالَتْ: أَشَعَرْتَ يَا رَسُولَ اللَّهِ أَنِّي أَعْتَقْتُ وَلِيدَتِي، قَالَ: «أَوَفَعَلْتِ؟»، قَالَتْ: نَعَمْ، قَالَ: «أَمَا إِنَّكِ لَوْ أَعْطَيْتِهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لِأَجْرِكِ»


Bukhari-2591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2591. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

செலவழி ! கணக்கிட்டு (செலவழித்து)க் கொண்டிருக்காதே! (அப்படிக் கணக்கிட்டு நீ செலவழித்தால்) அல்லாஹ்வும் உனக்கு (தரும் போது) கணக்கிட்டு (தந்து) விடுவான்.

கஞ்சத்தனமாகப் பையில் (சேர்த்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன்னிடம் கஞ்சத்தனமாக நடந்து கொள்வான். இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :50


«أَنْفِقِي، وَلاَ تُحْصِي، فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي، فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ»


Bukhari-2590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 ஒருத்திக்குக் கணவன் இருக்கும் போதே, தன் கணவனல்லாத மற்றவர்களுக்கு அவள் அன்பளிப்புச் செய்வதும், தனது அடிமையை விடுதலை செய்வதும்.

அவள் விவரமற்ற பேதையாக இல்லாமலிருந்தால் செல்லும்; அவள் விவரமற்ற பேதையாக இருந்தால் செல்லாது.

அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்கள் வாழ்க்கைக்கு நிலைபாட்டைத் தரக் கூடியவையாக உங்களுக்கு அல்லாஹ் ஆக்கியுள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர்களிடம் ஒப்படைக்காதீர்கள். (4.:5)

2590. அஸ்மா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்.
Book : 50


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا لِيَ مَالٌ إِلَّا مَا أَدْخَلَ عَلَيَّ الزُّبَيْرُ، فَأَتَصَدَّقُ؟ قَالَ: «تَصَدَّقِي، وَلاَ تُوعِي فَيُوعَى عَلَيْكِ»


Bukhari-2589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2589. நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்;

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 50


«العَائِدُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


Bukhari-2588

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

கணவன் தன் மனைவிக்கும், மனைவி தன் கணவனுக்கும் அன்பளிப்புச் செய்தல்.

இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்வது செல்லும் என்று கூறினார்கள்.

கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ அன்பளிப்புச் செய்தால் தமது அன்பளிப்பை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கி, அவர்களுடைய கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள விரும்பி, தம் மற்ற மனைவிமார்களிடம் (அவர்களிடம் தாம் தங்கவேண்டிய நாட்களிலும் ஆயிஷா (ரலி) அவர்களிடமே தங்கிக் கொள்வதற்கு) அனுமதி கேட்டார்கள். மேலும், தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தான் கக்கிய வாந்தியைத் தானே தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தன் மனைவியிடம், உனது மஹ்ரில் சிறிதளவை அல்லது உன் மஹ்ர் முழுவதையும் எனக்கு அன்பளிப்புச் செய்து விடு என்று கூறி (அதைப் பெற்றுக் கொண்டு) சிறிது காலத்திற்குள் அவளை விவாகரத்துச் செய்து விட, (விவாகரத்துச் செய்யப்பட்ட) அப்பெண், அவரிடம் தான்

«لَمَّا ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَدَّ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ الأَرْضَ، وَكَانَ بَيْنَ العَبَّاسِ وَبَيْنَ رَجُلٍ آخَرَ»، فَقَالَ عُبَيْدُ اللَّهِ: فَذَكَرْتُ لِابْنِ عَبَّاسٍ مَا قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي: وَهَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ؟ قُلْتُ: لاَ، قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ


Bukhari-2587

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 அன்பளிப்புச் செய்ய சாட்சிகள் வைத்தல்

2587. ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள்.

என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.
Book : 50


أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ: لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا؟»، قَالَ: لاَ، قَالَ: «فَاتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ»، قَالَ: فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ


Bukhari-2586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 பிள்ளைக்கு அன்பளிப்புச் செய்வது.

ஒருவர் தன் பிள்ளைகளில் சிலருக்கு மட்டும் அன்பளிப்புச் செய்தால் அவர்களிடையே நீதி செலுத்தி மற்ற பிள்ளைகளுக்கும் அதே போன்று கொடுக்கும் வரை அது செல்லாது. அது வரை (யாரும்) அதற்கு சாட்சியாக இருக்கவும் கூடாது.

நபி (ஸல்) அவர்கள், அன்பளிப்புச் செய்யும் விஷயத்தில் உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

தந்தை, தான் செய்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? மேலும் தந்தை, தன் பிள்ளையின் செல்வத்திலிருந்து வரம்பு மீறாமல் நியாயமான அளவு உண்பது அனு மதிக்கப்பட்டதா?

நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கி இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விட்டார்கள். மேலும், இதை நீ விரும்பியவாறு செய்து கொள் என்று கூறினார்கள்.

2586. நுஃமான் பின் பஷிர் அவர்கள் கூறியதாவது:

என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச்

أَنَّ أَبَاهُ أَتَى بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا، فَقَالَ: «أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ»، قَالَ: لاَ، قَالَ  «فَارْجِعْهُ»


Bukhari-2585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2585. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார்கள்.
Book :50


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا»


Bukhari-2583 & 2584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 தற்போது கைவசம் இல்லாத அன்பளிப்பை (வழங்குவதாக வாக்களிப்பது) செல்லும் என்று கருதுவது.

2583. & 2584. மிஸ்வர் பின் மக்ரமா(ரலி)அவர்களும், மர்வான் அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து விட்டு பிறகு, (மக்களே!) உங்கள் சகோதரர்கள் (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவதையே நான் உசிதமாகக் கருதுகிறேன்.

ஆகவே, உங்களில் எவர் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்து விட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே திருப்பித் தந்துவிடட்டும். எவர், அல்லாஹ், நமக்கு முதலாவதாக (கிடைக்கும் வெற்றியில்) அளிக்கின்ற பொருள்களிலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும் என்று கூறினார்கள். மக்கள் நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத் திருப்பித் தந்து விட) சம்மதிக்கின்றோம் என்று கூறினார்கள்.
Book : 50


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ، قَامَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ، فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا»، فَقَالَ النَّاسُ: طَيَّبْنَا لَكَ


Bukhari-2582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

நிராகரிக்கக் கூடாத அன்பளிப்பு.

2582. அஸ்ரா பின் ஸாபித் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸுமாமா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்கு வாசனைத் திரவியத்தைக் கொடுத்து, அனஸ் (ரலி) அவர்களுக்கு, வாசனைத் திரவியத்தை எவராவது அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை அவர்கள் ஏற்க மறுப்பதில்லை என்றும் கூறினார்.

மேலும் ஸுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் வாசனைத் திரவியத்தை ஏற்க மறுப்பதில்லை” என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.


அத்தியாயம்: 50


دَخَلْتُ عَلَيْهِ فَنَاوَلَنِي طِيبًا، قَالَ: «كَانَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ لاَ يَرُدُّ الطِّيبَ»

قَالَ: وَزَعَمَ أَنَسٌ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ»


Next Page » « Previous Page