Author: Farook

Bukhari-1845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 இஹ்ராம் இல்லாமல் மக்காவிலும் ஹரம்-புனித எல்லையிலும் நுழைதல்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு நுழைந்திருக்கிறார்கள். ஹஜ், உம்ரா செய்ய நாடுபவருக்குத்தான் இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்;விறகு வியாபாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. 

1845. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தையும் நஜ்து வாசிகளுக்கு ‘கர்ன் அல் மனாஸில்’ எனும் இடத்தையும் யமன்வாசிகளுக்கும் ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் அணிவதற்குரிய எல்லையாக நிர்ணயித்தார்கள்.

இவ்வெல்லைகள் அந்தப் பகுதியினருக்கும் அதன் வழியாக வேறு பகுதியிலிருந்து ஹஜ், உம்ராவை நாடி வருபவருக்கும், உரியனவாகும்! இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எந்த இடத்திலிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்தே இஹ்ராம் அணிய வேண்டும்; மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் அணிய வேண்டும்!’
Book : 28


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ المَدِينَةِ ذَا الحُلَيْفَةِ، وَلِأَهْلِ نَجْدٍ قَرْنَ المَنَازِلِ، وَلِأَهْلِ اليَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ، وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِمْ، مِمَّنْ أَرَادَ الحَجَّ وَالعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَ ذَلِكَ، فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ»


Bukhari-1844

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 இஹ்ராம் கட்டியவர் ஆயுதம் தரிப்பது.

எதிரிகளைப் பற்றி அஞ்சினால் ஆயுதம் தரித்துக்கொள்ளலாம்; ஆனால் குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும்!என்று இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று இக்ரிமா (ரஹ்) அவர்களைத் தவிர வேறுயாரும் கூறவில்லை. 

1844. பராவு(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யப் புறப்பட்டார்கள். மக்காவிற்குள் நுழைய அவர்களை மக்காவாசிகள் அனுமதிக்கவில்லை. (அடுத்த ஆண்டில்) ஆயுதங்களை உறையில் போட்டுக் கொண்டு மக்காவினுள் நுழைவதாக அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்தார்கள்.
Book : 28


اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي القَعْدَةِ، فَأَبَى أَهْلُ مَكَّةَ أَنْ يَدَعُوهُ يَدْخُلُ مَكَّةَ حَتَّى قَاضَاهُمْ: لاَ يُدْخِلُ مَكَّةَ سِلاَحًا إِلَّا فِي القِرَابِ


Bukhari-1843

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 வேட்டி கிடைக்காவிட்டால் கால் சட்டைகளை அணியலாம். 

1843. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் ‘யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்!’ என்றார்கள்.
Book : 28


خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ، فَقَالَ: «مَنْ لَمْ يَجِدِ الإِزَارَ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ»


Bukhari-1842

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1842. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இஹ்ராம் அணிந்தவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது!

செருப்பு கிடைக்காதவர்கள் காலுறைகளை அணியலாம். ஆயினும் கரண்டைக்குக் கீழே இருக்கும்படி (மேலிருந்து கரண்டைக்குக் கீழ் வரை) அவற்றை வெட்டி விட வேண்டும்!’ என்று விடையளித்தார்கள்.
Book :28


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا يَلْبَسُ المُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَ: «لاَ يَلْبَسِ القَمِيصَ، وَلاَ العَمَائِمَ، وَلاَ السَّرَاوِيلاَتِ، وَلاَ البُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ زَعْفَرَانٌ، وَلاَ وَرْسٌ، وَإِنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ»


Bukhari-1841

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 இஹ்ராம் கட்டியவருக்கு செருப்பு கிடைக்காவிட்டால் காலுறைகளை அணியலாம். 

1841. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும்போது, “யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்!  என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
Book : 28


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ بِعَرَفَاتٍ: «مَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ، وَمَنْ لَمْ يَجِدْ إِزَارًا فَلْيَلْبَسْ سَرَاوِيلَ لِلْمُحْرِمِ»


Bukhari-1840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 இஹ்ராம் கட்டியவர் குளிப்பது.

இஹ்ராம் கட்டியவர் குளியலறைக்குச் செல்லாம்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இஹ்ராம் கட்டியவர் (தலையைச்) சொறிந்துகொள்வதில் குற்றமில்லை! என்று இப்னு உமர் (ரலி) அவர்களும் (மேனியைச் சொறிந்துகொள்வதில் தவறில்லை!) என்று ஆயிஷா (ரலி) அவர்களும் கருதுகிறார்கள். 

1840. அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்(ரஹ்) அறிவித்தார்.

‘அப்வா என்ற இடத்தில் மிஸ்வர் மின் மக்ரமா(ரலி) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகிய இருவரும் கருத்து வேறுபட்டனர். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையைக் கழுவலாம்!’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையக் கழுவக் கூடாது!’ என்ற மிஸ்வர்(ரலி) கூறினார்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), என்னை அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே திரையால் மறைக்கப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். ‘நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். ‘யார் அது?’ என்று கேட்டார்கள். ‘நானே அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்! ‘நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது எவ்வாறு தலையைக் கழுவுவார்கள்?’ என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் இப்னு

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ العَبَّاسِ، وَالمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، اخْتَلَفَا بِالأَبْوَاءِ فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ يَغْسِلُ المُحْرِمُ رَأْسَهُ، وَقَالَ المِسْوَرُ: لاَ يَغْسِلُ المُحْرِمُ رَأْسَهُ، فَأَرْسَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ العَبَّاسِ إِلَى أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ بَيْنَ القَرْنَيْنِ، وَهُوَ يُسْتَرُ بِثَوْبٍ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَنْ هَذَا؟ فَقُلْتُ: أَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُنَيْنٍ، أَرْسَلَنِي إِلَيْكَ عَبْدُ اللَّهِ بْنُ العَبَّاسِ، أَسْأَلُكَ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ رَأْسَهُ وَهُوَ مُحْرِمٌ؟ فَوَضَعَ أَبُو أَيُّوبَ يَدَهُ عَلَى الثَّوْبِ، فَطَأْطَأَهُ حَتَّى بَدَا لِي رَأْسُهُ، ثُمَّ قَالَ: لِإِنْسَانٍ يَصُبُّ عَلَيْهِ: اصْبُبْ، فَصَبَّ عَلَى رَأْسِهِ، ثُمَّ حَرَّكَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، وَقَالَ: «هَكَذَا رَأَيْتُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»


Bukhari-1839

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1839. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரின் ஒட்டகம் அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரின் உடல் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, ‘அவரைக் குளிப்பாட்டி கபனிடுங்கள்! அவரின் தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்) தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :28


وَقَصَتْ بِرَجُلٍ مُحْرِمٍ نَاقَتُهُ، فَقَتَلَتْهُ، فَأُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اغْسِلُوهُ، وَكَفِّنُوهُ، وَلاَ تُغَطُّوا  رَأْسَهُ، وَلاَ تُقَرِّبُوهُ طِيبًا، فَإِنَّهُ يُبْعَثُ يُهِلُّ»


Bukhari-1838

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 13 இஹ்ராம் அணிந்த ஆண்களும் பெண்களும் நறுமணப் பொருளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதாகும்.

இஹ்ராம் அணிந்த பெண் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியக் கூடாது! என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்., 

1838. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று ஒருவர் எழுந்து கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!

குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!’ என்று பதிலளித்தார்கள்.
Book : 28


قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَاذَا تَأْمُرُنَا أَنْ نَلْبَسَ مِنَ الثِّيَابِ فِي الإِحْرَامِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَلْبَسُوا القَمِيصَ، وَلاَ السَّرَاوِيلاَتِ، وَلاَ العَمَائِمَ، وَلاَ البَرَانِسَ إِلَّا أَنْ يَكُونَ أَحَدٌ لَيْسَتْ لَهُ نَعْلاَنِ، فَلْيَلْبَسِ الخُفَّيْنِ، وَلْيَقْطَعْ أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا شَيْئًا مَسَّهُ زَعْفَرَانٌ، وَلاَ الوَرْسُ، وَلاَ تَنْتَقِبِ المَرْأَةُ المُحْرِمَةُ، وَلاَ تَلْبَسِ القُفَّازَيْنِ»

 

 


Bukhari-1837

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 12

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்தல். 

1837. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணந்தார்கள்!.

அத்தியாயம்: 28


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ»


Bukhari-1836

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1836. இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், ‘லஹ்யு ஜமல்’ எனுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் இரத்தம் குத்தி எடுத்தார்கள்!’
Book :28


«احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ مُحْرِمٌ بِلَحْيِ جَمَلٍ فِي وَسَطِ رَأْسِهِ»


Next Page » « Previous Page