Author: Farook

Bukhari-873

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 166 பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்கள் தம் கணவரிடம் அனுமதி பெறுவது. 

873. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

‘உங்களின் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 10


«إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ فَلاَ يَمْنَعْهَا»


Bukhari-872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 165

சுப்ஹுத் தொழுகை முடிந்ததும் விரைவாகப் பெண்கள் (பள்ளியிலிருந்து) திரும்பி விடுவதும் குறைந்த நேரமே அவர்கள் பள்ளியில் தங்குவதும். 

872. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகையை இருட்டில் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் (இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யாரென) அறியப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருவர் மற்றொருவரை அறிய மாட்டார்கள்.
Book : 10


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الصُّبْحَ بِغَلَسٍ، فَيَنْصَرِفْنَ نِسَاءُ المُؤْمِنِينَ لاَ يُعْرَفْنَ مِنَ الغَلَسِ – أَوْ لاَ يَعْرِفُ بَعْضُهُنَّ بَعْضًا -»


Bukhari-871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

871. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம்(ரலி) உடைய வீட்டில் தொழுதார்கள். நானும் (எங்கள் இல்லத்தில் வளர்ந்த) அனாதைச் சிறுவரும் அவர்கள் பின் நின்றோம். உம்மு ஸுலைம்(ரலி) எங்களுக்குப் பின்னே நின்றார்.
Book :10


«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ وَأُمّ سُلَيْمٍ خَلْفَنَا»


Bukhari-870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 164 ஆண்கள் (வரிசைக்குப்) பின்னால் பெண்கள் தொழுவது. 

870. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.
ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ஸல்) செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.
Book : 10


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَيَمْكُثُ هُوَ فِي مَقَامِهِ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ»، قَالَ: نَرَى – وَاللَّهُ أَعْلَمُ – أَنَّ ذَلِكَ كَانَ لِكَيْ يَنْصَرِفَ النِّسَاءُ، قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ أَحَدٌ مِنَ الرِّجَالِ


Bukhari-869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

869. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள்.

இதனை அறிவித்த உம்ராவிடம் ‘பனு இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டிருந்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார் என்று யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்கள்.

அத்தியாயம்: 10


«لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ» قُلْتُ لِعَمْرَةَ: أَوَمُنِعْنَ؟ قَالَتْ: نَعَمْ


Bukhari-868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

868. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என் தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன்.’ என அபூ கதாதா அல்அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِنِّي لَأَقُومُ إِلَى الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ»


Bukhari-867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

867. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்ததும் பெண்கள் போர்வைகளால் போர்த்திக் கொண்டு (வீடுகளுக்குப்) புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.
Book :10


«إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ، فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، مَا يُعْرَفْنَ مِنَ الغَلَسِ»


Bukhari-866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 163

(தொழுகை முடிந்தபின்) இமாம் எழுவதை எதிர்பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது. 

866. உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் எழுந்து செல்வார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுடன் தொழுத ஆண்களும் அல்லாஹ் நாடும் அளவுக்கு அமர்ந்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுந்து விடுவார்கள்.

அத்தியாயம்: 10


«أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ المَكْتُوبَةِ، قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَامَ الرِّجَالُ»


Bukhari-865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

865. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 10


«إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى المَسْجِدِ، فَأْذَنُوا لَهُنَّ»


Bukhari-864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 162

இரவிலும், (ஃபஜ்ருக்காக) அதிகாலை இருட்டிலும் பெண்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வது. 

864. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்கள், “இப்பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்ப் பார்த்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.

அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை மக்கள் தொழுது வந்தனர்.

அத்தியாயம்: 10


أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعَتَمَةِ، حَتَّى نَادَاهُ عُمَرُ: نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا يَنْتَظِرُهَا أَحَدٌ غَيْرُكُمْ مِنْ أَهْلِ الأَرْضِ» وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلَّا بِالْمَدِينَةِ، وَكَانُوا يُصَلُّونَ العَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ


Next Page » « Previous Page