Author: Farook

Bukhari-863

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

863. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்:

‘நபி(ஸல்) அவர்களுடன் (பெருநாள் தொழுகைக்காக வெளியில்) நீங்கள் சென்றதுண்டா?’ என்று ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘ஆம்! எனக்கு அவர்களுடன் நெருக்கமான உறவு இல்லாதிருந்தால் சிறு வயதுடைய நான் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது.

கஸீர் இப்னு ஸல்த்(ரலி) உடைய இல்லத்தினருகில் உள்ள மேடைக்கு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கப் போதனை செய்தார்கள். தர்மம் செய்யுமாறு அவர்களுக்கு வலியுறுத்தினார்கள். பெண்கள் தம் ஆபரணங்களை எடுத்து, பிலால்(ரலி) (ஏந்திய) ஆடையில் போடலானார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களும் பிலாலும் இல்லம் திரும்பினார்கள் என்று விடை அளித்தார்கள்.
Book :10


قَالَ لَهُ رَجُلٌ: شَهِدْتَ الخُرُوجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ، وَلَوْلاَ مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ – يَعْنِي مِنْ صِغَرِهِ – «أَتَى العَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ، وَذَكَّرَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ، فَجَعَلَتِ المَرْأَةُ تُهْوِي بِيَدِهَا إِلَى حَلْقِهَا، تُلْقِي فِي ثَوْبِ بِلاَلٍ، ثُمَّ أَتَى هُوَ وَبِلاَلٌ البَيْتَ»


Bukhari-862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

862. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஒரு நாள் தாமதப் படுத்தினார்கள். ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என்று உமர்(ரலி) கூறியதும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து ‘இந்தப்பூமியில் உங்களைத் தவிர வேறு எவரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை’ என்று கூறினார்கள். அன்றைய தினம் மதீனா வாசிகளைத் தவிர வேறு எவரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.
Book :10


أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَيَّاشٌ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي العِشَاءِ حَتَّى نَادَاهُ عُمَرُ: قَدْ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ يُصَلِّي هَذِهِ الصَّلاَةَ غَيْرُكُمْ»، وَلَمْ يَكُنْ أَحَدٌ يَوْمَئِذٍ يُصَلِّي غَيْرَ أَهْلِ المَدِينَةِ


Bukhari-861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

861. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி வந்தேன். அப்போது நான் பருவம் அடையும் வயதை நெருங்கியவனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘மினா’வில் (முன்னால்) சுவர் எதுவுமின்றித் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் வரிசைகளுக்கிடையே கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கிக் கழுதையை மேய்வதற்காக அவிழ்த்து விட்டேன். பின்னர் வரிசையில் சேர்ந்து கொண்டேன். இது விஷயமாக எவரும் என்னைக் கண்டிக்கவில்லை.
Book :10


أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلاَمَ، «وَرَسُولُ اللَّهِ  صلّى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ»


Bukhari-860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

860. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

என்னுடைய பாட்டி முலைக்கா (ரலி) விருந்து தயாரித்து நபி (ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் விருந்துண்டார்கள். பின்னர், ‘எழுங்கள்; உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்றார்கள். நான் புழக்கத்தினால் கறுத்துப் போய்விட்ட ஒரு பாயருகே சென்று தண்ணீரால் அதைப் பதப்படுத்தினேன். நபி (ஸல்) அவர்கள் (இமாமாக) நின்றார்கள். என்னுடன் (எங்கள் வீட்டில் வளரும்) அனாதைச் சிறுவரும் நின்றார். பாட்டி எங்களுக்குப் பின்னால் நின்றார். நபி (ஸல்) எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

அத்தியாயம்: 10


أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ، فَأَكَلَ مِنْهُ فَقَالَ: «قُومُوا فَلِأُصَلِّيَ بِكُمْ»، فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لَبِثَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاليَتِيمُ مَعِي وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ


Bukhari-859

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

859. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் ஓரிரவு தங்கினேன். இரவில் ஒரு பகுதி கழிந்ததும் நபி(ஸல்) (உறக்கத்திலிருந்து) விழித்தார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையிலிருந்து சுருக்கமாக உளூச் செய்தார்கள். பின்னர் எழுந்து தொழலானார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) செய்தது போன்று உளூச் செய்து அவர்களின் இடப்புறமாக நின்று கொண்டேன். அவர்கள் என்னைப் பிடித்துத் தம் வலப்புறமாக நிறுத்தினார்கள். பின்னர் அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டு குறட்டைவருமளவு படுத்துறங்கினார்கள். அவர்களிடம் (ஸுப்ஹ்) தொழுகை பற்றி முஅத்தின் அறிவிப்பதற்கு வந்தபோது அவருடன் தொழுகைக்காகச் சென்றார்கள். (மீண்டும்) உளூச் செய்யாமலே தொழுகை நடத்தினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கண்கள் உறங்கும்; உள்ளம் உறங்காது என்று சிலர் கூறுகிறார்களே என்று அம்ரிடம் கேட்டேன். அதற்கவர், ‘நபிமார்களின் கனவுகள் வஹீயாகும்’ என்று கூறிவிட்டு,’மகனே! உன்னை நான் அறுப்பதாகக் கனவு கண்டேன். (திருக்குர்ஆன் 37:102) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என சுஃப்யான் கூறுகிறார்.
Book :10


بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ، «قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا – يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ جِدًّا -، ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ، فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَحَوَّلَنِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اضْطَجَعَ، فَنَامَ حَتَّى نَفَخَ، فَأَتَاهُ المُنَادِي يَأْذَنُهُ بِالصَّلاَةِ، فَقَامَ مَعَهُ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» قُلْنَا لِعَمْرٍو: إِنَّ نَاسًا يَقُولُونَ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ» قَالَ عَمْرٌو: سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ: ” إِنَّ رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْيٌ ثُمَّ قَرَأَ: {إِنِّي أَرَى فِي المَنَامِ أَنِّي أَذْبَحُكَ} [الصافات: 102]


Bukhari-858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

858. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’
என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


«الغُسْلُ يَوْمَ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


Bukhari-856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

856. அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்’ என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) ‘அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்’ அல்லது ‘நம்முடன் தொழ வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக் குறிப்பிட்டார்கள்.
Book :10


مَا سَمِعْتَ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الثُّومِ؟ فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا – أَوْ: لاَ يُصَلِّيَنَّ مَعَنَا


Bukhari-855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

855. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.

தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது ‘நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :10


مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا، فَلْيَعْتَزِلْنَا – أَوْ قَالَ: فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا – وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ ”
وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ، فَوَجَدَ لَهَا رِيحًا، فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ البُقُولِ، فَقَالَ: «قَرِّبُوهَا». إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ، فَلَمَّا رَآهُ كَرِهَ  أَكْلَهَا، قَالَ: «كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي» وَقَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ: عَنْ ابْنِ وَهْبٍ أُتِيَ بِبَدْرٍ – وَقَالَ ابْنُ وَهْبٍ: يَعْنِي طَبَقًا فِيهِ خَضِرَاتٌ – وَلَمْ يَذْكُرِ اللَّيْثُ، وَأَبُو صَفْوَانَ، عَنْ يُونُسَ، قِصَّةَ القِدْرِ فَلاَ أَدْرِي هُوَ مِنْ قَوْلِ الزُّهْرِيِّ أَوْ فِي الحَدِيثِ


Bukhari-854

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

854. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளிக்கு வர வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை ஜாபிர்(ரலி) வாயிலாக அறிவிக்கும் அதாஃ இடம் ‘எதனால் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்?’ என்று இப்னு ஜுரைஜ் கேட்டதற்கு ‘சமைக்கப் படாத பச்சை வெங்காயத்தையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்’ என்று அதாஃ விளக்கமளித்தார்.

மற்றோர் அறிவிப்பில் ‘அதன் துர்வாடையையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்’ என்று அதாஃ கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
Book :10


«مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ – يُرِيدُ الثُّومَ – فَلاَ يَغْشَانَا فِي مَسَاجِدِنَا» قُلْتُ: مَا يَعْنِي بِهِ؟ قَالَ: مَا أُرَاهُ يَعْنِي إِلَّا نِيئَهُ، وَقَالَ مَخْلَدُ بْنُ يَزِيدَ: عَنْ ابْنِ جُرَيْجٍ، «إِلَّا نَتْنَهُ»


Next Page » « Previous Page