Author: Farook

Bukhari-833

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

833. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் பாதுகாப்புத் தேடுவதை செவியுற்றுள்ளேன்.
Book :10


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ


Bukhari-832

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 149 சலாம் கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய பிரார்த்தனை. 

832. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள்.

‘தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
Book : 10


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ ” فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ المَغْرَمِ، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ، حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ»


Bukhari-831

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 148

கடைசி இருப்பில் ‘அத்தஹிய்யாத்’ ஓதுவது. 

831. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பின்னால் தொழும்போது, “அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல், வ மீகாயீல், அஸ்ஸலாமு அலா ஃபுலான்” (ஜிப்ரீல் மீதும் மீக்காயீல் மீதும் சாந்தி உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ் தான் ‘ஸலாம்’ (எனும் சாந்தி) அளிப்பவனாக இருக்கிறான்.

உங்களில் ஒருவர் தொழும்போது, “அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன” என்று கூறுங்கள்.

(பொருள்: காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்)

இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியதாக அமையும்.

மேலும்,

كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا: السَّلاَمُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:  إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمُوهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ


Bukhari-830

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 147 முதல் அத்தஹிய்யாத்’ இருப்பு. 

830. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களுக்கு லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஓர் இருப்பு கடமையான நிலையில் (இரண்டாம் ரக்அத்தில் உட்காராமலே) எழுந்துவிட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்தனர்.
Book : 10


«صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا كَانَ فِي آخِرِ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»


Bukhari-829

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 146

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டு மீண்டும் உட்காரவில்லை. ஆகவே, முதலாம் அத்தஹிய்யாத்’ இருப்பு’ கட்டாயம் அல்ல. 

829. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது,உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.

அத்தியாயம்: 10


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمُ الظَّهْرَ، فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاَةَ وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ كَبَّرَ وَهُوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ سَلَّمَ»


Bukhari-828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

828. முஹம்மத் இப்னு அம்ர் கூறினார்:

நான் சில நபித் தோழர்களுடன் அமர்ந்திருந்தேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி அப்போது பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ(ரலி) ‘நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது தம் இரண்டு கைகளையும் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவு செய்யும்போது இரண்டு கைகளையும் மூட்டுக் கால்களின் மீது படியச் செய்வார்கள். பின்னர் தம் முதுகை (வளைவு இன்றி) நேராக்குவார்கள்.

(ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும்போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிர்வார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது தம் கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தம் கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்.

இரண்டாவது ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும்போது இடது காலை (வலப் புறமாகக்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்துத் தம் இருப்பிடம் தரையில் படியுமாறு உட்கார்வார்கள்’ எனக் கூறினார்கள்.

அத்தியாயம்: 10


أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْنَا صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ: أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ، ثُمَّ هَصَرَ ظَهْرَهُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ، فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلاَ قَابِضِهِمَا، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ القِبْلَةَ، فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ اليُسْرَى، وَنَصَبَ اليُمْنَى، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ اليُسْرَى، وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ»


Bukhari-827

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 145 அத்தஹிய்யாத் இருப்பில் அமரும் முறை.

உம்முத் தர்தா அஸ்ஸுஃக்ரா (ரஹ்) அவர்கள் தமது தொழுகையில் ஆண்கள் உட்காருவது போன்றே உட்காருவார்கள். அவர் மார்க்கச் சட்டங்களை நன்கு விளங்கிய பெண்மணியாக இருந்தார்கள். 

827. அப்துல்லாஹ் அறிவித்தார்.

(என்னுடைய தந்தை) இப்னு உமர்(ரலி) தொழுகையில் உட்காரும்போது சம்மணமிட்டு உட்காருவதை பார்த்தேன். சிறு வயதினனாக இருந்த நானும் அவ்வாறே உட்கார்ந்தேன். இதைக் கண்ட இப்னு உமர்(ரலி) ‘தொழுகையில் உட்காரும் முறை என்னவென்றால் உன் வலது காலை நாட்டி வைத்து இடது காலைப் படுக்கை வசமாக வைப்பது தான்’ என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் மட்டும் சம்மணமிட்டு அமர்கிறீர்களே என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரலி) ‘என் கால்கள் என்னைத் தாங்காது’ என்று விடையளித்தார்கள்.
Book : 10


أَنَّهُ كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَتَرَبَّعُ فِي الصَّلاَةِ إِذَا جَلَسَ، فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ، فَنَهَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَقَالَ: «إِنَّمَا سُنَّةُ الصَّلاَةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ اليُمْنَى وَتَثْنِيَ اليُسْرَى»، فَقُلْتُ: إِنَّكَ تَفْعَلُ ذَلِكَ، فَقَالَ: إِنَّ رِجْلَيَّ لاَ تَحْمِلاَنِي


Bukhari-826

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

826. முதர்ரிப் அறிவித்தார்.

நானும், இம்ரானும் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களின் பின்னே தொழுதோம். அவர்கள் ஸஜ்தாவின்போது தக்பீர் கூறினார்கள். (ஸஜ்தாவிலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள்.) இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் இம்ரான்(ரலி) என் கையைப் பிடித்து, ‘நிச்சயமாக இவர் முஹம்மத்(ஸல்) அவர்களின் தொழுகை போன்றே தொழுது காட்டியுள்ளார்’ என்றோ ‘முஹம்மத்(ஸல்) அவர்களின் தொழுகையை இவர் எனக்கு நினைவு படுத்திவிட்டார்’ என்றோ குறிப்பிட்டார்கள்.
Book :10


صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ، صَلاَةً خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، «فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ وَإِذَا رَفَعَ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ»، فَلَمَّا سَلَّمَ أَخَذَ عِمْرَانُ بِيَدِي، فَقَالَ: لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ: لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-825

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 144 இரண்டாம் சஜ்தாவிலிருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போது தக்பீர் கூறவேண்டும்.

இரண்டாம் சஜ்தாவிலிருந்து எழும் போது அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள். 

825. ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் கூறினார்:

எங்களுக்கு அபூ ஸயீத்(ரலி) தொழுகை நடத்தினார்கள். அப்போது ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் ஸஜ்தாச் செய்யும் போதும் ஸஜ்தாவிலிருந்து எழும் போதும் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள். மேலும் ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்ததை நான் பார்த்துள்ளேன்’ என்றும் குறிப்பிட்டார்கள்.
Book : 10


صَلَّى لَنَا أَبُو سَعِيدٍ «فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَحِينَ سَجَدَ وَحِينَ رَفَعَ وَحِينَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ» وَقَالَ: هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-824

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 143 ஒரு ரக்அத்தை முடித்து அடுத்த ரக்அத்திற்காக எழும் போது பூமியில் கைகளை ஊன்றி எழ வேண்டுமா? 

824. அபூ கிலாபா அறிவித்தார்.

எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) வந்து ‘இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்களை எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறிவிட்டு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

நான் அபூ கிலாபாவிடம் அவரின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டேன். அதற்கு அபூ கிலாபா ‘(அம்ர் இப்னு ஸலமா என்ற) இந்த முதியவர் தொழுதது போன்று இருந்தது’ எனக் கூறினார்கள். அந்த முதியவர் தக்பீரைப் பூரணமாகக் கூறுவார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக ஸுஜூதிலிருந்து எழும்போது இருப்பில் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருவார் என அய்யூப் கூறினார்.
Book : 10


جَاءَنَا مَالِكُ بْنُ الحُوَيْرِثِ، فَصَلَّى بِنَا فِي مَسْجِدِنَا هَذَا، فَقَالَ: إِنِّي لَأُصَلِّي بِكُمْ وَمَا أُرِيدُ الصَّلاَةَ، وَلَكِنْ أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، قَالَ أَيُّوبُ: فَقُلْتُ لِأَبِي قِلاَبَةَ: وَكَيْفَ كَانَتْ صَلاَتُهُ؟ قَالَ: مِثْلَ صَلاَةِ شَيْخِنَا هَذَا – يَعْنِي عَمْرَو بْنَ سَلِمَةَ – قَالَ أَيُّوبُ: وَكَانَ ذَلِكَ الشَّيْخُ «يُتِمُّ التَّكْبِيرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ عَنِ السَّجْدَةِ الثَّانِيَةِ جَلَسَ وَاعْتَمَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ قَامَ»


Next Page » « Previous Page