Author: Farook

Bukhari-823

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 142

தொழுகையில் ஒற்றைப் படையான ரக்அத்களை முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டுப் பிறகு எழுவது. 

823. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள்.

அத்தியாயம்: 10


أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا»


Bukhari-822

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 141

சஜ்தாவில் கைகளைப் பரப்பி வைக்கலாகாது.

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காமலும் சஜ்தாச் செய்தார்கள் என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) கூறியுள்ளார்கள். 

822. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது.’ என அனஸ் (ரலி) அறிவித்தார்

அத்தியாயம்: 10


«اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ»


Bukhari-821

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

821. ஸாபித் அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தியது போல் நான் உங்களுக்குத் தொழுகை நடத்துவதில் எந்த குறையும் வைக்க மாட்டேன்’ என்று அனஸ்(ரலி) கூறினார். அவர்கள், ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று கூறுமளவு நிற்பார்கள். மேலும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நினைக்குமளவு அமர்ந்திருப்பார்கள். அனஸ்(ரலி) செய்தது போல் உங்களிடம் நான் காணவில்லை.
Book :10


إِنِّي لاَ آلُو أَنْ أُصَلِّيَ بِكُمْ، كَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا – قَالَ ثَابِتٌ: كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ يَصْنَعُ شَيْئًا لَمْ أَرَكُمْ تَصْنَعُونَهُ – ” كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى يَقُولَ القَائِلُ: قَدْ نَسِيَ، وَبَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى يَقُولَ القَائِلُ: قَدْ نَسِيَ


Bukhari-820

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

820. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன.
Book :10


«كَانَ سُجُودُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرُكُوعُهُ وَقُعُودُهُ بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ»


Bukhari-819

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

819. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (சில நாள்கள்) தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும் போது) ‘நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும், இன்னின்ன தொழுகைகளை இன்னின்ன நேரத்தில் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் முதியவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :10


«لَوْ رَجَعْتُمْ إِلَى أَهْلِيكُمْ صَلُّوا صَلاَةَ كَذَا، فِي حِينِ كَذَا صَلُّوا صَلاَةَ كَذَا، فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»


Bukhari-818

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 140 இரு சஜ்தாக்களுக்கு இடையே (இருப்பில் சிறிது நேரம்) நிலைகொள்வது. 

818. அபூ கிலாபா அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டியதை உங்களுக்கு நான் செய்து காட்டட்டுமா?’ என்று மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) தம் தோழர்களிடம் கேட்டார்கள். இது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. (அவர்கள் தொழுது காண்பித்த போது) அவர்கள் நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தக்பீர் கூறினார்கள். பின்பு தலையை உயர்த்திச் சிறிது நேரம் நின்றார்கள். பின்பு ஸஜ்தாச் செய்து, பின்பு தலையை உயர்த்திச் சிறிது நேரம் இருந்தார்கள். இதோ நம்முடைய பெரியார் அம்ர் இப்னு ஸலமா தொழுவது போன்றே அந்த நபித்தோழர் தொழுது காண்பித்தார்கள்.
அந்தப் பெரியவர் அம்ர் இப்னு ஸலமா தொழும்போது மூன்றாம் ரக்அத்திலோ, நான்காம் ரக்அத்திலோ உட்கார்ந்து விட்டு எழுபவராக இருந்தார்கள். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை என்னால் காண முடியவில்லை என்று அய்யூப் என்பவர் குறிப்பிடுகிறார்.
Book : 10


أَلاَ أُنَبِّئُكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: وَذَاكَ فِي غَيْرِ حِينِ صَلاَةٍ، فَقَامَ، ثُمَّ رَكَعَ فَكَبَّرَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَامَ هُنَيَّةً، ثُمَّ سَجَدَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ هُنَيَّةً، فَصَلَّى صَلاَةَ عَمْرِو بْنِ سَلِمَةَ شَيْخِنَا هَذَا، قَالَ أَيُّوبُ: كَانَ يَفْعَلُ شَيْئًا لَمْ أَرَهُمْ يَفْعَلُونَهُ كَانَ يَقْعُدُ فِي الثَّالِثَةِ وَالرَّابِعَةِ


Bukhari-817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 139

சஜ்தாவில் துதிப்பதும் பிரார்த்திப்பதும். 

817. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி’ (இறைவா! உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! என்னை மன்னித்து விடு) என்று அதிகமதிகம் கூறுவார்கள். (இதாஜாஅ… என்ற அத்தியாயத்தில் கூறப்படும்) குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள்.

அத்தியாயம்: 10


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ” يَتَأَوَّلُ القُرْآنَ


Bukhari-816

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 138

தொழும் போது (தரையில் படாதவாறு) தமது ஆடையைப் பிடிக்கக் கூடாது. 

816. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 10


«أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا وَلاَ ثَوْبًا»


Bukhari-815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 137

(ஸஜ்தாவின் போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது. 

815. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10


«أُمِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ»


Bukhari-814

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 136 (தொழும் முன்) ஆடையை முடிச்சிட்டுக் கொள்வதும், அதை இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும், (தொழுது கொண்டிருக்கும் போது ஆடை நழுவி) மறைக்க வேண்டிய உறுப்புக்கள் வெளியில் தெரிந்துவிடும் என அஞ்சினால் தொழுகையிலேயே ஆடையை அணைத்துப் பிடித்துக்கொள்வதும். 

814. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் சிறிதாக இருந்த தங்களின் கீழாடையைப் பிடரிகளின் மீது கட்டிக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுபவர்களாக இருந்தனர். (ஸஜ்தாவின் போது) ஆண்கள் ஸஜ்தாச் செய்து உட்காரும் வரை நீங்கள் உங்கள் தலையை உயர்த்த வேண்டாம் என்று பெண்களுக்குக் கூறப்பட்டிருந்தது.
Book : 10


كَانَ النَّاسُ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُمْ عَاقِدُوا أُزْرِهِمْ مِنَ الصِّغَرِ عَلَى رِقَابِهِمْ، فَقِيلَ لِلنِّسَاءِ: «لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا»


Next Page » « Previous Page