Author: Farook

Bukhari-813

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 135 களிமண்ணில் சஜ்தாச் செய்யும் போதும் மூக்குத் தரையில் படுமாறு சஜ்தாச் செய்வது. 

813. அபூ ஸலமா அறிவித்தார்

நான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்றேன். எங்களுடன் தாங்கள் பேரீச்ச மரத்தோட்டத்திற்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று கேட்டேன். அவர்களும் புறப்பட்டனர். லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்று கேட்டேன்.

அப்போது அபூ ஸயீத்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள்.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப்

انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ فَقُلْتُ: أَلاَ تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثُ، فَخَرَجَ، فَقَالَ: قُلْتُ: حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ القَدْرِ، قَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ، فَأَتَاهُ جِبْرِيلُ، فَقَالَ: إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ، فَاعْتَكَفَ العَشْرَ الأَوْسَطَ، فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ، فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ القَدْرِ، وَإِنِّي نُسِّيتُهَا، وَإِنَّهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، فِي وِتْرٍ، وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ» وَكَانَ سَقْفُ المَسْجِدِ جَرِيدَ النَّخْلِ، وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا، فَجَاءَتْ قَزَعَةٌ، فَأُمْطِرْنَا، فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ


Bukhari-812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 134

மூக்கு தரையில் படுமாறு ஸஜ்தாச் செய்தல். 

812. ‘நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நெற்றியைக் குறிப்பிடும்போது தம் கையால் மூக்கை அடையாளம் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 10


«أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَاليَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ القَدَمَيْنِ وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ»


Bukhari-811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

811. பராவு(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொல்லி முடித்து ஸுஜுதுக்குச் செல்லும் வரை  எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தம் முதுகை வளைக்க மாட்டார்கள்.
Book :10


كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَبْهَتَهُ عَلَى الأَرْضِ


Bukhari-810

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நாம் கட்ளையிடப் பட்டோம். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டோம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 10


«أُمِرْنَا أَنْ نَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ نَكُفَّ ثَوْبًا وَلاَ شَعَرًا»


Bukhari-809

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 133

ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தல். 

809. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படியும், (ஸஜ்தாவில்) தலைமுடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10


أُمِرَ النَّبِيُّ صلّى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا: الجَبْهَةِ، وَاليَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالرِّجْلَيْنِ


Bukhari-808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 131 சஜ்தாவின் போது கால் விரல்களைக் கிப்லாவை நோக்கி வைப்பது.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-828)

பாடம் : 132 சஜ்தாவை பூரணமாக (நிதானத்துடன்) செய்யாவிட்டால் (ஏற்படும் கேடுகள்). 

808. அபூ வாயில் அறிவித்தார்.

ருகூவையும் ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டார்கள். அம்மனிதர் தொழுது முடித்தபோது அவரை நோக்கி ‘நீ தொழவில்லை’; இந்நிலையில் நீ மரணித்துவிட்டால் நபி வழி அல்லாத வேறு வழியில் நீ மரணித்தவனாவாய்’ என்று கூறினார்கள்.
Book : 10


رَأَى رَجُلًا لَا يُتِمُّ رُكُوعَهُ، وَلاَ سُجُودَهُ فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ: «مَا صَلَّيْتَ؟» قَالَ: وَأَحْسِبُهُ قَالَ: «وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-807

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 130 சஜ்தா செய்யும் போது புஜங்களை (விலாவுடன் சேர்க்காமல்) இடைவெளிவிட்டு வைக்கவேண்டும்; (தொடைகளைவிட்டும் வயிற்றைப்) பிரித்துவைக்க வேண்டும். 

807. அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னி புஹைனா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழும்போது (ஸஜ்தாவில்) அவர்களின் அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரண்டு கைகளையும் விரிப்பார்கள்.
Book : 10


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ»


Bukhari-806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 129 சஜ்தாவின் சிறப்பு. 

806. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள்.

தொடர்ந்து, ‘கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்’ என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர்.

அப்போது இறைவன் அவர்களை நோக்கி ‘நானே உங்களுடைய இறைவன்’ என்பான்! அதற்கு அவர்கள் ‘எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம்

أَنَّ النَّاسَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ القِيَامَةِ؟ قَالَ: «هَلْ تُمَارُونَ فِي القَمَرِ لَيْلَةَ البَدْرِ لَيْسَ دُونَهُ سَحَابٌ» قَالُوا: لاَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَهَلْ تُمَارُونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ» قَالُوا: لاَ، قَالَ: ” فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ، يُحْشَرُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُ: مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْ، فَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الشَّمْسَ، وَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ القَمَرَ، وَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الطَّوَاغِيتَ، وَتَبْقَى هَذِهِ الأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا، فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا، فَإِذَا جَاءَ رَبُّنَا عَرَفْنَاهُ، فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: أَنْتَ رَبُّنَا، فَيَدْعُوهُمْ فَيُضْرَبُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَانَيْ جَهَنَّمَ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يَجُوزُ مِنَ الرُّسُلِ بِأُمَّتِهِ، وَلاَ يَتَكَلَّمُ يَوْمَئِذٍ أَحَدٌ إِلَّا الرُّسُلُ، وَكَلاَمُ الرُّسُلِ يَوْمَئِذٍ: اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ، وَفِي جَهَنَّمَ كَلاَلِيبُ  مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، هَلْ رَأَيْتُمْ شَوْكَ السَّعْدَانِ؟ ” قَالُوا: نَعَمْ، قَالَ: ” فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ غَيْرَ أَنَّهُ لاَ يَعْلَمُ قَدْرَ عِظَمِهَا إِلَّا اللَّهُ، تَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ، فَمِنْهُمْ مَنْ يُوبَقُ بِعَمَلِهِ، وَمِنْهُمْ مَنْ يُخَرْدَلُ ثُمَّ يَنْجُو، حَتَّى إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ، أَمَرَ اللَّهُ المَلاَئِكَةَ: أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ، وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلَّا أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، قَدْ امْتَحَشُوا فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الحَيَاةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ القَضَاءِ بَيْنَ العِبَادِ وَيَبْقَى رَجُلٌ بَيْنَ الجَنَّةِ وَالنَّارِ وَهُوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولًا الجَنَّةَ مُقْبِلٌ بِوَجْهِهِ قِبَلَ النَّارِ، فَيَقُولُ: يَا رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ، قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا، فَيَقُولُ: هَلْ عَسَيْتَ إِنْ فُعِلَ ذَلِكَ بِكَ أَنْ تَسْأَلَ غَيْرَ ذَلِكَ؟ فَيَقُولُ: لاَ وَعِزَّتِكَ، فَيُعْطِي اللَّهَ مَا يَشَاءُ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ، فَإِذَا أَقْبَلَ بِهِ عَلَى الجَنَّةِ، رَأَى بَهْجَتَهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ، ثُمَّ قَالَ: يَا رَبِّ قَدِّمْنِي عِنْدَ بَابِ الجَنَّةِ، فَيَقُولُ اللَّهُ لَهُ: أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ العُهُودَ وَالمِيثَاقَ، أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ الَّذِي كُنْتَ سَأَلْتَ؟ فَيَقُولُ: يَا رَبِّ لاَ أَكُونُ أَشْقَى خَلْقِكَ، فَيَقُولُ: فَمَا عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَهُ؟ فَيَقُولُ: لاَ وَعِزَّتِكَ، لاَ أَسْأَلُ غَيْرَ ذَلِكَ، فَيُعْطِي رَبَّهُ مَا شَاءَ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، فَيُقَدِّمُهُ إِلَى بَابِ الجَنَّةِ، فَإِذَا بَلَغَ بَابَهَا، فَرَأَى


Bukhari-805

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

805. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் வலது விலாப் புறத்தில் அடி பட்டது. அவர்களை நாங்கள் நோய் விசாரிக்கச் சென்றோம். தொழுகை நேரம் வந்ததும் தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்தவாறு தொழுதோம். நபி(ஸல்) அவர்கள், தொழுகையை முடித்ததும், ‘இமாம் பின்பற்றப் படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்! அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்; அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வலகல் ஹம்து என்று சொல்லுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :10


سَقَطَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَرَسٍ – وَرُبَّمَا قَالَ سُفْيَانُ: مِنْ فَرَسٍ – فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، فَدَخَلْنَا عَلَيْهِ نَعُودُهُ، فَحَضَرَتِ الصَّلاَةُ، فَصَلَّى بِنَا قَاعِدًا وَقَعَدْنَا – وَقَالَ سُفْيَانُ مَرَّةً: صَلَّيْنَا قُعُودًا – فَلَمَّا قَضَى الصَّلاَةَ قَالَ: ” إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا


Bukhari-804

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

804. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள்.

‘இறைவா! வலீத் இப்னு அல்வலீத், ஸலமா இப்னு ஹிஷாம், அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ மற்றும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! ‘முளர்’ கூட்டத்தின் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூஸுஃப்(அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட (பஞ்சமான ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும்) பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். (மதீனாவுக்கு) மேல்த் திசையில் வாழ்ந்த ‘முளர்’ கூட்டத்தினர் அன்றைய தினம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர்.
Book :10


وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، يَدْعُو لِرِجَالٍ فَيُسَمِّيهِمْ بِأَسْمَائِهِمْ، فَيَقُولُ: اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالمُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ ” وَأَهْلُ المَشْرِقِ يَوْمَئِذٍ مِنْ مُضَرَ مُخَالِفُونَ لَهُ


Next Page » « Previous Page