Author: Farook

Bukhari-803

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 128

சஜ்தாச் செய்யும் போது தக்பீர் கூறியவாறே குனிய வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் (சஜ்தாவிற்குச் செல்லும் போது) முழங்கால்களைத் தரையில் வைப்பதற்கு முன் தம் (உள்ளங்)கைகளை வைப்பார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

803. அபூஸலமாவும், அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மானும் அறிவித்தார்கள்.

கடமையான தொழுகைகளிலும் அது அல்லாத (உபரித்) தொழுகைகளிலும் ரமளானிலும் ரமளான் அல்லாத நாள்களிலும் ஒவ்வொரு தொழுகையிலும் அபூ ஹுரைரா (ரலி) தக்பீர் சொல்பவர்களாக இருந்தனர். நிற்கும்போது அவர்கள் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூவு செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வதற்கு முன் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவுக்காகக் குனியும்போது ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள்; பின்னர் (இரண்டாம்) ஸஜ்தாச் செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டு எழும்போது தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும் வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே

كَانَ يُكَبِّرُ فِي كُلِّ صَلاَةٍ مِنَ المَكْتُوبَةِ، وَغَيْرِهَا فِي رَمَضَانَ وَغَيْرِهِ، فَيُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ يَقُولُ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ قَبْلَ أَنْ يَسْجُدَ ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الجُلُوسِ فِي الِاثْنَتَيْنِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ حَتَّى يَفْرُغَ مِنَ الصَّلاَةِ “، ثُمَّ يَقُولُ حِينَ يَنْصَرِفُ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَقْرَبُكُمْ شَبَهًا بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كَانَتْ هَذِهِ لَصَلاَتَهُ حَتَّى فَارَقَ الدُّنْيَا


Bukhari-802

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

802. அபூ கிலாபா அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதை மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) எங்களுக்குத் தொழுது காட்டினார்கள். இவ்வாறு அவர்கள் செய்து காட்டியது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. அவர்கள் நின்றார்கள். நன்கு நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். பின்னர் தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் மவுனமாக நின்றார்கள்.

பின் நம்முடைய பெரியார் அபூ புரைத் தொழுவது போன்றே மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் தொழுது காட்டினார்கள்.

இந்த அபூ புரைத் தொழும்போது (இரண்டாம்) ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்திச் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு (இரண்டாம் ரக்அத்துகளாக) எழுக்கூடியவராக இருந்தார் என்று அய்யூப் குறிப்பிடுகிறார்.
Book :10


كَانَ مَالِكُ بْنُ الحُوَيْرِثِ يُرِينَا كَيْفَ كَانَ صَلاَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَاكَ فِي غَيْرِ وَقْتِ صَلاَةٍ، «فَقَامَ فَأَمْكَنَ القِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَمْكَنَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَنْصَبَ هُنَيَّةً»، قَالَ: فَصَلَّى بِنَا صَلاَةَ شَيْخِنَا هَذَا أَبِي بُرَيْدٍ، وَكَانَ أَبُو بُرَيْدٍ: «إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الآخِرَةِ اسْتَوَى قَاعِدًا، ثُمَّ نَهَضَ»


Bukhari-801

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

801. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் ருகூவிலும் எழுந்து நிற்கும் நேரமும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப் பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன.
Book :10


«كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ»


Bukhari-800

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 127 ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி, நிதானத்துடன் நிலைகொள்வது.

நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தி (தமது) ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமர்ந்து நிற்பார்கள் என அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ -ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(குறிப்பு: விவரம் அறியக் காண்க: ஹதீஸ்எண்-828) 

800. ஸாபித் அறிவித்தார்.

அனஸ்(ரலி) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள்.
Book : 10


كَانَ أَنَسٌ يَنْعَتُ لَنَا صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ” فَكَانَ يُصَلِّي وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، قَامَ حَتَّى نَقُولَ: قَدْ نَسِيَ


Bukhari-799

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

799. ரிஃபாஆ இப்னு ராஃபிவு (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறினார்கள்.

அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் ‘ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி’ என்று கூறினார். தொழுது முடித்ததும் ‘இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?’ என்று நபி (ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் ‘நான்’ என்றார். ‘முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அத்தியாயம்: 10


كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ “، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «مَنِ المُتَكَلِّمُ» قَالَ: أَنَا، قَالَ: «رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ»


Bukhari-798

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

798. அனஸ்(ரலி) அறிவித்தார்.

மக்ரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் நபி(ஸல்) காலத்தில் இருந்தது.
Book :10


«كَانَ القُنُوتُ فِي المَغْرِبِ وَالفَجْرِ»


Bukhari-797

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 126 

797. அபூஸலமா அறிவித்தார்:

அபூஹுரைரா (ரலி) லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகைகளின் கடைசி ரக்அத்துகளில் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறியபிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பிரார்த்திப்பார்கள். இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
Book : 10


لَأُقَرِّبَنَّ صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ” يَقْنُتُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَصَلاَةِ العِشَاءِ، وَصَلاَةِ الصُّبْحِ، بَعْدَ مَا يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الكُفَّارَ


Bukhari-796

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 125

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுவதன் சிறப்பு. 

796. ‘இமாம் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


إِذَا قَالَ الإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


Bukhari-795

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 124 ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் (தொழுவிக்கும்) இமாமும் அவரைப் பின் பற்றித் தொழுவோரும் கூற வேண்டியவை. 

795. ‘நபி(ஸல்) அவர்கள் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறியபின் ‘அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து’ என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறுவார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، قَالَ: اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ، وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ، قَالَ: اللَّهُ أَكْبَرُ


Bukhari-794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

ருகூவில் பிரார்த்திப்பது. 

794. நபி (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் “ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும் மஃக்ஃபிர்லீ” (பொருள்: அல்லாஹ்வே! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு!) என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 10


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي


Next Page » « Previous Page