Author: Farook

Bukhari-793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 122 ருகூஉவை முழுமைப்படுத்தாத ஒருவரை திரும்பத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தது. 

793. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை’ என்றும் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது).

அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்தியமார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.

‘நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக!

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ المَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى، ثُمَّ جَاءَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلّى الله عليه وسلم فَرَدَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ السَّلاَمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَصَلَّى، ثُمَّ جَاءَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ» ثَلاَثًا، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، فَمَا أُحْسِنُ غَيْرَهُ، فَعَلِّمْنِي، قَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ، فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ القُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا»


Bukhari-792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 120 ருகூவில் முதுகைச் சமமாக வைப்பது.

அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்), நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக) சாய்த்தார்கள் என்று கூறியுள்ளார்கள்.

(குறிப்பு: காண்க: பின் வரும் ஹதீஸ்-828)

பாடம் : 121 ருகூஉவைப் பூரணமாக்குதல், (அதில்) நிலைகொள்ளுதல், (ஆடாமல் அசையாமல்) நிதானித்தல் ஆகியவற்றிற்குரிய வரம்பு. 

792. பரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ருகூவும் அவர்களின் ஸஜ்தாவும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.
Book : 10


«كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ وَبَيْنَ السَّجْدَتَيْنِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، مَا خَلاَ القِيَامَ وَالقُعُودَ قَرِيبًا مِنَ السَّوَاءِ»


Bukhari-791

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 119 ருகூவைப் பூரணமாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் குற்றம்). 

791. ஸைத் இப்னு வஹ்பு அறிவித்தார்.

ருகூவையும் ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டனர். அப்போது அவர்கள் நீர் தொழவே இல்லை. இந்த நிலையில் நீர் மரணித்துவிட்டால் முஹம்மத்(ஸல்) அவர்களின் மார்க்கத்தில் மரணித்தவராக மாட்டீர்’ என்றார்கள்.
Book : 10


رَأَى حُذَيْفَةُ رَجُلًا لَا يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ، قَالَ: «مَا صَلَّيْتَ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ الفِطْرَةِ الَّتِي فَطَرَ اللَّهُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا»


Bukhari-790

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 118 ருகூஉவின் போது உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைப்பது.

அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ -ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்) நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்)கைகளை முழங் கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள். 

790. முஸ்அப் இப்னு ஸஃது அறிவித்தார்.

நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, ‘நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக்கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம்’ என்றார்.
Book : 10


صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي، وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ، «فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ»


Bukhari-789

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

789. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்ததும்போது ‘ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா லகல் ஹம்து’

மற்றோர் அறிவிப்பில் ‘வலகல் ஹம்து’ என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.

அத்தியாயம்: 10


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ: رَبَّنَا لَكَ الحَمْدُ “

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، عَنِ اللَّيْثِ: «وَلَكَ الحَمْدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يَفْعَلُ ذَلِكَ فِي الصَّلاَةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا، وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ الجُلُوسِ»


Bukhari-788

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 117 சஜ்தாவிலிருந்து எழும் போது தக்பீர் கூறுவது. 

788. இக்ரிமா அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து இவர் ஒரு மடையர் என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘உன் தாய் உன்னை இழந்து விடட்டும்; அம்மனிதர் நபி(ஸல்) அவர்களின் வழி முறையைச் செயல் படுத்திவிட்டார்’ என்று கூறினார்கள்.
Book : 10


صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ ، فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً ، فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ : إِنَّهُ أَحْمَقُ ، فَقَالَ: ثَكِلَتْكَ أُمُّكَ ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

787. இக்ரிமா அறிவித்தார்.

ஒருவர் ‘மகாமு இப்ராஹீம்’ எனுமிடத்தில் தொழுவதைக் கண்டேன். அவர் குனியும் போதும் நிமிரும் போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘இது நபி(ஸல்) அவர்கள் தொழுத தொழுகை போல் இல்லையா? தாயற்றுப் போவாய்’ என்று குறிப்பிட்டார்கள்.
Book :10


رَأَيْتُ رَجُلًا عِنْدَ المَقَامِ، «يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، وَإِذَا قَامَ وَإِذَا وَضَعَ»، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَوَلَيْسَ تِلْكَ صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لاَ أُمَّ لَكَ


Bukhari-786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 116 சஜ்தாவின்போதும் தக்பீரை முழுமையாகக் கூறுவது. 

786. முதர்ரிஃப் அறிவித்தார்.

நானும் இம்ரான் இப்னு ஹுஸைனும் அலீ(ரலி)யைப் பின் பற்றித் தொழுதோம். அலீ(ரலி) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறினார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டு ரக்அத்தை முடித்து எழும்போதும் தக்பீர் சொன்னார்கள். தொழுகையை முடித்த பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டு ‘இவர் நபி(ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவு படுத்திவிட்டார்’ என்று இம்ரான்(ரலி) குறிப்பிட்டார்கள்.
Book : 10


صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ، «فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ»، فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، فَقَالَ: قَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ: لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-785

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

785. அபூ ஸலமா அறிவித்தார்.

குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூ ஹுரைரா(ரலி) தொழுகை நடத்திவிட்டு ‘நான் உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் தொழுகை போன்றே தொழுது காட்டினேன்’ என்றும் கூறினார்கள்.
Book :10


أَنَّهُ كَانَ «يُصَلِّي بِهِمْ، فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ، وَرَفَعَ»، فَإِذَا انْصَرَفَ، قَالَ: إِنِّي لَأَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-784

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 115 ருகூஉவின் போது தக்பீரை முழுமையாகக் கூறுவது.

இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (818ஆவது) ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும். 

784. முதர்ரிஃப் அறிவித்தார்.

‘பஸரா’ நகரில் அலீ(ரலி)யைப் பின்பற்றி இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) தொழுதார்கள். (அலீ(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவு படுத்தும் வகையில் தொழுகை நடத்துகிறார்! நபி(ஸல்) அவர்கள் குனியும் போதும் தாழும் போதும் ‘தக்பீர்’ கூறுபவர்களாக இருந்தனர்’ என்று குறிப்பிட்டார்கள்.
Book : 10


صَلَّى مَعَ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالْبَصْرَةِ فَقَالَ: «ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاَةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ  أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ»


Next Page » « Previous Page