Author: Farook

Bukhari-783

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 114

தொழுகை வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டால் (தொழுகை நிறைவேறுமா?) 

783. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, “அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 10


أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ»


Bukhari-782

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 113

பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) ஆமீன் கூறுவது.

782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் “கைரில் மஃக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்” என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்துவிட்டால் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இந்த ஹதீஸை ஸுமைய் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாக அறிவித்துள்ளதைப் போன்றே முஹம்மத் பின் அம்ர், நுஐம் அல்முஜ்மிர் ஆகியோரும் அறிவித்துள்ளனர்.


அத்தியாயம்: 10


إِذَا قَالَ الإِمَامُ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقُولُوا: آمِينَ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


Bukhari-781

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 112

ஆமீன் கூறுவதன் சிறப்பு. 

781. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து வருகிறதோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10


إِذَا قَالَ أَحَدُكُمْ: آمِينَ، وَقَالَتِ المَلاَئِكَةُ فِي السَّمَاءِ: آمِينَ، فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


Bukhari-780

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 111

(சப்தமாக ஓதும் தொழுகையில்) இமாம் (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிய பின்) உரத்த குரலில் “ஆமீன்” கூறுவது.

“ஆமீன்” என்பது பிரார்த்தனையாகும் என அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களும், அவர்களைப் பின் பற்றித் தொழுவோரும் பள்ளிவாசலில் பேரொலி எழும் அளவுக்கு (உரத்த குரலில்) “ஆமீன்” கூறினர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் தலைமைத் தாங்கித் தொழுவிப்பவரை அழைத்து, “ஆமீன்” கூறும் வாய்ப்பை எனக்குத் தவறும்படி செய்து விடாதீர் என்று கூறுவார்கள்.

நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஆமீன்” கூறாமல் இருக்க மாட்டார்கள்; (ஆமீன் கூறும்படி) மக்களுக்கு ஆர்வமுட்டுவார்கள். “ஆமீன்” கூறுவதில் நிறைய நன்மை இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். 

780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் “ஆமீன்” கூறும்போது நீங்களும் “ஆமீன்” கூறுங்கள்! ஒருவர் கூறும் “ஆமீன்” வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமையுமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நபி (ஸல்) அவர்கள்,

إِذَا أَمَّنَ الإِمَامُ، فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

– وَقَالَ ابْنُ شِهَابٍ – وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: آمِينَ


Bukhari-779

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 110

(பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுதல். 

779. அபூகதாதா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையில் முதலாவது ரக்அத்தை நீளமாக்கி இரண்டாவது ரக்அத்தைச் சுருக்கித் தொழுபவர்களாக இருந்தனர். இதைப் போன்று ஸுபுஹுத் தொழுகையிலும் செய்பவர்களாக இருந்தனர்.
Book : 10


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي صَلاَةِ الصُّبْحِ»


Bukhari-778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 109

(சப்தமின்றித் தொழும் தொழுகையில்) இமாம் ஒரு சில வசனங்களை மற்றவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதினால் (செல்லுமா?) 

778. அபூகதாதா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையிலும் அஸர்த் தொழுகையிலும் ஸுரத்துல் ஃபாத்திஹாவுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தனர். சில நேரங்களில் (சில வசனங்களை) எங்களுக்குக் கேட்கும் படி ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதலாவது ரக்அத்தை நீளமாக்குவார்கள்.

அத்தியாயம்: 10


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ بِأُمِّ الكِتَابِ وَسُورَةٍ مَعَهَا فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ العَصْرِ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا وَكَانَ يُطِيلُ فِي الرَّكْعَةِ الأُولَى»


Bukhari-777

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 108  லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுவது. 

777. அபூ மஃமர் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றனர். ‘இதை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்?’ என்று திரும்பவும் நாங்கள் கேட்டோம். அதற்கு கப்பாப்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் தாடியின் அசைவு மூலம் அறிந்து கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.
Book : 10


قُلْتُ لِخَبَّابٍ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟ قَالَ: نَعَمْ، قُلْنَا: مِنْ أَيْنَ عَلِمْتَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»


Bukhari-776

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 107

(நான்கு ரக்அத் தொழுகையின்) பிந்திய இரண்டு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா’ ஆரம்ப அத்தியாயத்தை ஓத வேண்டும். 

776. அபூகதாதா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்களிரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கும் ஒதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் ஸுபுஹிலும் செய்வார்கள்.

அத்தியாயம்: 10


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي العَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ»


Bukhari-775

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 106 ஒரே ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும்,

அத்தியாயத்தின் கடைசி வசனங்களை மட்டும் ஓதுவதும், அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும், ஓர் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை மட்டும் ஓதுவதும் (செல்லுமா?)

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் அல்முஃமினூன்’ (எனும் 23ஆவது) அத்தியா யத்தை ஓதித் தொழுவித்தார்கள். மூசா (அலை), ஹாரூன் (அலை) பற்றிக் குறிப்பிடும் வசனம்’ (23:45) அல்லது ஈசா (அலை) அவர்கள் பற்றிக் கூறப்படும் வசனம் (23:50) வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. உடனே ருகூஉ செய்துவிட்டார்கள் என அப்துல்லாஹ் பின் சாயிப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

உமர் (ரலி) அவர்கள் (தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்திலிருந்து நூற்றி இருபது வசனங்களை ஓதினார்கள்; இரண்டாம் ரக்அத்தில் (நூறுக்கும் குறைவான வசனங்களுடைய) அல்மஸானீ’ அத்தியாயங்களில் ஒன்றை ஓதினார்கள்.

அஹ்னஃப் பின் கைஸ் (ரலி) அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல் கஹ்ஃப்’ (எனும்18ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் யூசுஃப்’ (12ஆவது) அத்தியாயத்தை’ அல்லது யூனுஸ்’ (10ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உமர் (ரலி) அவர்கள் இவ்விரண்டு

جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ، فَقَالَ: قَرَأْتُ المُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ، فَقَالَ: «هَذًّا كَهَذِّ الشِّعْرِ، لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرُنُ بَيْنَهُنَّ، فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ المُفَصَّلِ، سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ»


Bukhari-774

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

774. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்ப (சில தொழுகைகளில்) சப்தமின்றி ஓதினார்கள். (ஏனெனில்) ‘உம்முடைய இறைவன் மறப்பவனல்ல’ (திருக்குர்ஆன் 19:64) என்றும் ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு’ (திருக்குர்ஆன் 33:21) என்றும் அல்லாஹ் கூறினான்.
Book :10


قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا أُمِرَ وَسَكَتَ فِيمَا أُمِرَ، {وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا} [مريم: 64] {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]


Next Page » « Previous Page