Author: Farook

Bukhari-843

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

843. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்ந்த பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும், தங்களின் அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவழிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே!)” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களை நீங்கள் தொட்டு விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைத் தொட இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களால் அச்சிறப்பை அடைய முடியாது).

(அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (ஸுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்” என்று

جَاءَ الفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الأَمْوَالِ بِالدَّرَجَاتِ العُلاَ، وَالنَّعِيمِ المُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا، وَيَعْتَمِرُونَ، وَيُجَاهِدُونَ، وَيَتَصَدَّقُونَ، قَالَ: «أَلاَ أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ»،

فَاخْتَلَفْنَا بَيْنَنَا، فَقَالَ بَعْضُنَا: نُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: تَقُولُ: «سُبْحَانَ اللَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلاَثًا وَثَلاَثِينَ»


Bukhari-842

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

842. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதைத் ‘தக்பீர்’ மூலம் நான் அறிந்து கொள்வேன்.

அத்தியாயம்: 10


«كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ»


Bukhari-841

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 155

தொழுகைக்குப்பின் (அல்லாஹ்வை போற்றித் துதித்து) திக்ர் செய்வது.

841. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (ஸலாம் கூறி) கடமையான தொழுகையை முடிக்கும்போது சப்தமாக (அல்லாஹ்வைப் போற்றி) ‘திக்ர்’ செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது (ஆரம்ப) காலத்தில் (கற்றுக் கொடுப்பதற்காக) இருந்தது.

அவ்வாறு மக்கள் கூறக் கேட்டால், அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.


அத்தியாயம்: 10


«أَنَّ رَفْعَ الصَّوْتِ، بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ المَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ»


Bukhari-839 , 840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 154 இமாமுக்கு, பதில் சலாம் கூறாமல் தொழுகைக்காக மட்டும் சலாம் கொடுப்பது. 

839. & 840. இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

‘நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினரின் பள்ளிவாயிலுக்குமிடையே தண்ணீர் ஓடுகிறது. எனவே தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஓர் இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய தொழுமிடமாக) நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன்.

‘இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு மறுநாள் நண்பகலில் அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காரமலேயே ‘உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்தில் நின்றார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தபோது நாங்களும் ஸலாம் கொடுத்தோம்.

‘அல்லாஹ்வின் பொருத்தம் நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறவரின் மீது நரகத்தை

839 . «عَقَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَقَلَ مَجَّةً مَجَّهَا مِنْ دَلْوٍ كَانَ فِي دَارِهِمْ»

 

840 . كُنْتُ أُصَلِّي لِقَوْمِي بَنِي سَالِمٍ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي أَنْكَرْتُ بَصَرِي، وَإِنَّ السُّيُولَ تَحُولُ بَيْنِي وَبَيْنَ مَسْجِدِ قَوْمِي، فَلَوَدِدْتُ أَنَّكَ جِئْتَ، فَصَلَّيْتَ فِي بَيْتِي مَكَانًا حَتَّى أَتَّخِذَهُ مَسْجِدًا، فَقَالَ: «أَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ»، فَغَدَا عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ مَعَهُ بَعْدَ مَا اشْتَدَّ النَّهَارُ، فَاسْتَأْذَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ  مِنْ بَيْتِكَ؟»، فَأَشَارَ إِلَيْهِ مِنَ المَكَانِ الَّذِي أَحَبَّ أَنْ يُصَلِّيَ فِيهِ، فَقَامَ، فَصَفَفْنَا خَلْفَهُ، ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا حِينَ سَلَّمَ

 

 


Bukhari-838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 153 இமாம் சலாம் கொடுக்கும்போதே (பின்பற்றித் தொழுபவர்களும்) சலாம் கொடுப்பது.

இமாம் சலாம் கொடுக்கும்போதே (அவரைப் பின்பற்றி) பின்னால் தொழுவோரும் சலாம் கொடுப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் விரும்பக் கூடியவர்களாய் இருந்தார்கள். 

838. இத்பான்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கும்போது நாங்களும் ஸலாம் கொடுப்போம்.
Book : 10


«صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْنَا حِينَ سَلَّمَ»


Bukhari-837

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 152

(தொழுகை முடிவில்) சலாம் கொடுப்பது. 

837. நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன், சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்:  உம்மு ஸலமா (ரலி)

பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 10


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَمَكَثَ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ»

قَالَ ابْنُ شِهَابٍ: «فَأُرَى وَاللَّهُ أَعْلَمُ أَنَّ مُكْثَهُ لِكَيْ يَنْفُذَ النِّسَاءُ قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ مَنِ انْصَرَفَ مِنَ القَوْمِ»


Bukhari-836

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 151 தொழுது முடிக்கும்வரை நெற்றி, மூக்கு ஆகியவற்றில் படிந்தவற்றைத் துடைக்காமலிருப்பது.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தொழும் போது நெற்றியைத் துடைக்கலாகாது என்று ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர்-ரஹ்) அவர்கள் கூறக் கண்டேன். 

836. அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தண்ணீரும் மண்ணும் கலந்த இடத்தில் ஸுஜூது செய்வதை பார்த்தேன். அவர்களின் நெற்றியில் மண் படிந்திருந்ததையும் கண்டேன்.
Book : 10


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي المَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ»


Bukhari-835

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 150

அத்தஹிய்யாத்துக்குப் பின் (ஸலாம் கொடுப்பதற்கு முன்) விரும்பிய பிரார்த்தனை செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அது கட்டாயம் கிடையாது. 

835. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது, “அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலான்” என்று கூறிக் கொண்டிருந்தோம்.

(பொருள்: அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக!)

(இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான்.

எனினும், “அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன” என்று கூறுங்கள்.

(பொருள்: காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும்

كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ، قُلْنَا: السَّلاَمُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو


Bukhari-834

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

834. அபூபக்ர் (ரலி) அறிவித்தார்.

என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது

‘இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 10


عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي، قَالَ:  قُلْ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ


Next Page » « Previous Page