Author: Farook

Bukhari-643

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 28 தொழுகைக்கு இகாமத் சொன்ன பின் பேசுவது.

643. ஹுமைத் அறிவித்தார்.

நான் தாபித் அல் புனானி இடம் தொழுகைக்கு இகாமத் சொன்ன பின்பேசக் கூடியவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் ஒருவர் வந்து நபி(ஸல்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதனால் அவர்கள் தொழுகைக்குத் தாமதமாக வந்தார்கள்’ என்று அனஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸைக் கூறினார்.
Book : 10


سَأَلْتُ ثَابِتًا البُنَانِيَّ – عَنِ الرَّجُلِ يَتَكَلَّمُ بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ – فَحَدَّثَنِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلاَةُ فَعَرَضَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلاَةُ»


Bukhari-642

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 இகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது.

642. அனஸ்(ரலி) அறிவித்தார்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கிவிட்டனர்.
Book : 10


«أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِي رَجُلًا فِي جَانِبِ المَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ القَوْمُ»


Bukhari-641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

ஒருவர் நாம் தொழவில்லை’ என்று சொல்லலாம்.

641. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

கந்தக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) வந்து ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் (அஸர்) தொழவில்லை’ என்றார்கள். நோன்பு வைத்திருந்தவர்கள் நோன்பு துறந்த பின் இது நடந்தது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் தொழவில்லை’ என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ என்ற இடத்திற்குச் சென்றார்கள். உளூச் செய்து அஸர் தொழுதார்கள். அதன் பிறகு மஃரிபு தொழுதார்கள்.
Book : 10


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ عُمَرُ بْنُ الخَطَّابِ يَوْمَ الخَنْدَقِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ: مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ، حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا صَلَّيْتُهَا» فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ، فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى – يَعْنِي العَصْرَ – بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا المَغْرِبَ


Bukhari-640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 (இகாமத் சொல்லப்பட்ட பின்) இமாம், நான் திரும்பி வரும்வரை அப்படியே இருங்கள் என்று (மக்களிடம்) சொல்லிவிட்டுச் சென்றால் (அவர் வரும் வரை) அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.

640. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தங்கள் வரிசைகளைச் சரி செய்தனர். நபி(ஸல்) அவர்கள் வந்து முன்னே நின்றார்கள். அவர்களின் மீது குளிப்புக் கடமையாகி இருந்ததால், ‘உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். பின்னர் தலையிலிருந்து நீர் சொட்ட வந்து எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
Book : 10


أُقِيمَتِ الصَّلاَةُ، فَسَوَّى النَّاسُ صُفُوفَهُمْ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَقَدَّمَ، وَهُوَ جُنُبٌ، ثُمَّ قَالَ: «عَلَى مَكَانِكُمْ» فَرَجَعَ فَاغْتَسَلَ، ثُمَّ خَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً، فَصَلَّى بِهِمْ


Bukhari-639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 (இகாமத் சொன்ன பிறகு) ஏதாவது காரணத்திற்காகப் பள்ளியிலிருந்து வெளியே செல்லலாமா?

639. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இகாமத் சொல்லப்பட்டு, வரிசைகள் சரி செய்யப்பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வந்தார்கள். அவர்களின் இடத்தில் நின்றதும் அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ‘உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் குளித்துவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும் வரை நாங்கள் அப்படியே நின்றிருந்தோம்.
Book : 10


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ، وَعُدِّلَتِ الصُّفُوفُ، حَتَّى إِذَا قَامَ فِي مُصَلَّاهُ، انْتَظَرْنَا أَنْ يُكَبِّرَ، انْصَرَفَ، قَالَ: «عَلَى مَكَانِكُمْ» فَمَكَثْنَا عَلَى هَيْئَتِنَا، حَتَّى خَرَجَ إِلَيْنَا يَنْطِفُ رَأْسُهُ مَاءً، وَقَدِ اغْتَسَلَ


Bukhari-638

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 தொழுகைக்கு அவசரப்பட்டு விரைந்து செல்லலாகாது. நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் எழுந்து செல்ல வேண்டும்.

638. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம். அமைதியைக் கடைபிடியுங்கள்.’ என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
Book : 10


«إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ، فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ»


Bukhari-637

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 (தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?)  எப்போது எழ வேண்டும்?

637. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம்.’ என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
Book : 10


«إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ، فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي»


Bukhari-636

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 21

தொழுகையில் போய்ச் சேர அவசர அவசர மாகச் செல்ல வேண்டாம். நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். தவறிப் போன (ரக்அத்)தைப் (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

636. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10


«إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»


Bukhari-635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 20

எங்களுக்குத் தொழுகை தவறிவிட்டது என்று கூறலாமா?

இவ்வாறு கூறுவதை முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் வெறுப்பிற்குரியதாகக் கருதினார்கள். மாறாக அவர், (தொழுகையை) நாங்கள் அடைந்துகொள்ளவில்லை’ என்று கூறலாம் என்றார்கள்.

பின்வரும் ஹதீஸில் தவறிப்போனதை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்களுடைய கருத்தைவிட  நபி (ஸல்) அவர்களின் சொல்லே சரியானதாகும்.


635. அபூகதாதா (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)’ என்று அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு ‘(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்’ என்று பதில் கூறினர். ‘அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 10


بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى قَالَ: «مَا شَأْنُكُمْ؟» قَالُوا: اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاَةِ؟ قَالَ: «فَلاَ تَفْعَلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلاَةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»


Bukhari-634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது வாயை இங்குமங்கு மாக (வலம் இடமாக) திருப்பவேண்டுமா?

அவர் பாங்கு சொல்லும் போது (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறுகையில் வலப் பக்கமும் இடப் பக்கமும் தலையைத்) திருப்பவேண்டுமா?

பாங்கு சொல்லும் போது பிலால் (ரலி) அவர்கள் தம் (சுட்டு) விரல்களின் நுனிகளை காதுக்குள் வைத்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை பாங்கு சொல்லும் போது தம்மிரு (சுட்டு)விரல் நுனிகளை காதுகளில் வைக்க மாட்டார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், அங்கசுத்தி (உளூ) இல்லாமல் பாங்கு சொல்வதில் தவறில்லை எனக் கூறினார்கள்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்வதற்காக) அங்கசுத்தி (உளூ) செய்வது (மார்க்கத் தில்) உள்ளது தான் ; நபிவழியே என்று கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் (உளூவுடனும் உளூ இல்லாமலும்) அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (பார்க்க: முஸ்லிம்-608 )

634. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

பிலால் (ரலி) பாங்கு சொல்லும்போது (பாங்கை நீட்டிச் சொல்வதற்காக) தம் வாயை அங்கும் இங்குமாக அசைப்பதைப் பார்த்தேன்.
Book : 10


«أَنَّهُ رَأَى بِلاَلًا يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَهُنَا بِالأَذَانِ»


Next Page » « Previous Page