Author: Farook

Bukhari-633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

633. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ‘அப்தஹ்’ என்ற இடத்தில் இருந்தபோது அங்கு வந்த பிலால்(ரலி) தொழுகை நேரம் (வந்துவிட்டது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். பின்னர் பிலால் ஒரு கைத்தடியை எடுத்து வந்து அதை நபி(ஸல்) அவர்கள் முன் நாட்டிவிட்டுத் தொழுகைக்காக இகாமத் கூறினார்கள்.
Book :10


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالأَبْطَحِ، فَجَاءَهُ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ ثُمَّ خَرَجَ بِلاَلٌ بِالعَنَزَةِ حَتَّى رَكَزَهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالأَبْطَحِ، وَأَقَامَ الصَّلاَةَ»


Bukhari-632

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

632. நாஃபிவு அறிவித்தார்.

மக்காவை அடுத்துள்ள ‘ளஜ்னான்’ என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்கள். மேலும் ‘பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழை பெய்யும்  இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்:
Book :10


أَذَّنَ ابْنُ عُمَرَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ بِضَجْنَانَ، ثُمَّ قَالَ: صَلُّوا فِي رِحَالِكُمْ، فَأَخْبَرَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ، ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِهِ: «أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ» فِي اللَّيْلَةِ البَارِدَةِ، أَوِ المَطِيرَةِ فِي السَّفَرِ


Bukhari-631

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

631. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள்.

நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.

அத்தியாயம்: 10


أَتَيْنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا، فَأَخْبَرْنَاهُ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا – وَصَلُّوا  كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»


Bukhari-630

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

630. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :10


أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»


Bukhari-629

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 பயணிகள் கூட்டமாகச் செல்லும் போதும் (ஹஜ்ஜின்போது) அரஃபா முஸ்தலிஃபாவில் இருக்கும் போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும்,

தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான இரவுகளிலும் மழை பெய்யும் நேரங்களிலும் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அஸ்ஸலாது ஃபிர் ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்.

629. அபூ தர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தோம். (லுஹர் தொழுகைக்கு) முஅத்தின் பாங்கு சொல்ல ஆயத்தமானபோது ‘கொஞ்சம் பொறு’ என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து முஅத்தின் பாங்கு சொல்லத் தயாரான போதும் மலைக் குன்றுகளின் நிழல் அதே அளவிற்குச் சமமாகும் வரை ‘(பாங்கு சொல்வதைப்) பிற்படுத்துங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறிவிட்டு, ‘நிச்சயமாக இந்தக் கடும் வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும்’ என்று கூறினார்கள்.
Book : 10


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَرَادَ المُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ: «أَبْرِدْ»، ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ: «أَبْرِدْ»، ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ: «أَبْرِدْ» حَتَّى سَاوَى الظِّلُّ التُّلُولَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


Bukhari-628

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 17 பயணத்தில் ஒரேயொருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும்.

628. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்’ என்று கூறினார்கள்.
Book : 10


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ قَوْمِي، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا، قَالَ: «ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ، وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»


Bukhari-627

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. விரும்பியவர் அதைத் தொழுதுகொள்ளலாம்.

627. அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார்.

‘ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு’ என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்’ என்றார்கள்.
Book : 10


«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ»، ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ»


Bukhari-626

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 15

இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது.

626. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபஜ்ரு நேரம் வந்து, முஅத்தின் ஃபஜ்ருக்கு பாங்கு சொன்னதற்கும் ஃபஜ்ருத் தொழுகைக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரணடு ரக்அத்துகள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.

அத்தியாயம்: 10


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكَتَ المُؤَذِّنُ بِالأُولَى مِنْ صَلاَةِ الفَجْرِ قَامَ، فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلاَةِ الفَجْرِ، بَعْدَ أَنْ يَسْتَبِينَ الفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ، حَتَّى يَأْتِيَهُ المُؤَذِّنُ لِلْإِقَامَةِ»


Bukhari-625

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

625. அனஸ்(ரலி) அறிவித்தார்.

முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கும் முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
Book :10


«كَانَ المُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ، حَتَّى يَخْرُجَ النَّبِيُّ  صلّى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ، يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ المَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَيْءٌ»


Bukhari-624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும்,தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.

624. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.’ என அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، ثَلاَثًا لِمَنْ شَاءَ»


Next Page » « Previous Page