Author: Farook

Bukhari-623

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

623. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِنَّ بِلاَلًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»


Bukhari-622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

622. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்’
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِنَّ بِلاَلًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»


Bukhari-621

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

ஃபஜ்ர் நேரம் வருவதற்குமுன் பாங்கு சொல்வது.

621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானில்) உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு அவரைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற்காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவுமே பிலால் பின்இரவில் ‘அறிவிப்புச் செய்கிறார்’ அல்லது ‘அழைக்கிறார்’.

இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள், தம் விரல்களை மேல்நோக்கி உயர்த்திக்காட்டி, பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு, “இவ்வாறு (மேல் கீழாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம்) ‘ஃபஜ்ர்’ அல்லது ‘ஸுப்ஹ்’ அல்ல” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) அவர்கள், ‘இவ்வாறு’ என்பதற்கு விளக்கமளிக்கையில், தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றின்மீது வைத்துப் பிறகு அவற்றை(ப் பிரித்து) வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் நீட்டி (“பரவலாகத் தோன்றும் அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; செங்குத்தாய் தோன்றுவது அல்ல” என்ற கருத்தில்) சைகை செய்தார்கள்.

அத்தியாயம்: 10


«لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ – أَوْ أَحَدًا مِنْكُمْ – أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ يُنَادِي بِلَيْلٍ – لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الفَجْرُ – أَوِ الصُّبْحُ -» وَقَالَ بِأَصَابِعِهِ وَرَفَعَهَا إِلَى فَوْقُ وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ هَكَذَا وَقَالَ زُهَيْرٌ: «بِسَبَّابَتَيْهِ إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى، ثُمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ»


Bukhari-620

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

620. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِنَّ بِلاَلًا يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»


Bukhari-619

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

619. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஸுப்ஹுத் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதற்கும் இகாமத்திற்குமிடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்.
Book :10


«كَانَ النَّبِيُّ صلّى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ»


Bukhari-618

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 ஃபஜ்ர் நேரம் வந்த பின் பாங்கு சொல்வது.

618. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
Book : 10


كَانَ إِذَا اعْتَكَفَ المُؤَذِّنُ لِلصُّبْحِ، وَبَدَا الصُّبْحُ، صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ»


Bukhari-617

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

தொழுகையின் நேரத்தை தெரிவிக்கின்ற ஒருவர் (உதவிக்கு) இருந்தால் பார்வையற்ற வரும் பாங்கு சொல்லலாம்.

617. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


இதை அறிவிக்கும் இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ் நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 10


«إِنَّ بِلاَلًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»،
ثُمَّ قَالَ: وَكَانَ رَجُلًا أَعْمَى، لاَ يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ: أَصْبَحْتَ أَصْبَحْتَ


Bukhari-616

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 பாங்கு சொல்பவர் மற்ற பேச்சுக்கள் பேசுவது.

சுலைமான் பின் ஸுரத் ரலி) அவர்கள் பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போதே (இதரப் பேச்சுக்கள்) பேசினார்கள்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதோ இகாமத் சொல்லிக் கொண்டி ருக்கும்போதோ ஒருவர் சிரிப்பது குற்றமல்ல என்று கூறினார்கள்.

616. அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்.

மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று சொல்ல ஆரம்பித்தபோது ‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.

அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். ‘இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்!’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 10


خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ رَدْغٍ، فَلَمَّا بَلَغَ المُؤَذِّنُ حَيَّ عَلَى الصَّلاَةِ، فَأَمَرَهُ أَنْ يُنَادِيَ «الصَّلاَةُ فِي الرِّحَالِ»، فَنَظَرَ القَوْمُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَقَالَ: «فَعَلَ هَذَا مَنْ هُوَ خَيْرٌ  مِنْهُ وَإِنَّهَا عَزْمَةٌ»


Bukhari-615

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

பாங்கு சொல்வதற்காக (போட்டி நிலவும் போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது.

பாங்கு (சொல்லும் பொறுப்பு) விஷயத்தில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சீட்டுக் குலுக்கி (அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலா)னார்கள்.

615. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.

தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»


Bukhari-614

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

பாங்கு (எனும் தொழுகை அறிவிப்பு) முடிந்த பின் ஓதவேண்டிய பிரார்த்தனை.

614. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தொழுகை அறிவிப்பைக் கேட்(டு முடிக்)கும்போது, “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா.

(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) உயர் பதவியையும் தனிச் சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உன்னத இடத்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)” என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

இதை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 10


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ


Next Page » « Previous Page