Author: Farook

Bukhari-613

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

613. யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்:

தொழுகை அறிவிப்பாளர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்”  என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்று கூறினார்கள்.

மேலும், “இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்றும் முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம்: 10


لَمَّا قَالَ: حَيَّ عَلَى الصَّلاَةِ، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»، وَقَالَ: هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ


Bukhari-612

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

612. ஈஸா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (தொழுகை அறிவிப்பைச் செவியுற்ற போது) “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்பதுவரை அறிவிப்பாளர் கூறியதைப் போன்றே சொன்னதை நான் கேட்டேன்.


இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.


அத்தியாயம் : 10


أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَوْمًا، فَقَالَ مِثْلَهُ، إِلَى قَوْلِهِ: وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ


Bukhari-611

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.

611. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 10


«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»


Bukhari-610

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 பாங்கு சொல்லப்படுவதால் (ஓர் ஊரின் மீது) போர் செய்யலாகாது.

610. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்.

என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு

كَانَ إِذَا غَزَا بِنَا قَوْمًا، لَمْ يَكُنْ يَغْزُو بِنَا حَتَّى يُصْبِحَ وَيَنْظُرَ، فَإِنْ سَمِعَ أَذَانًا كَفَّ عَنْهُمْ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ عَلَيْهِمْ، قَالَ: فَخَرَجْنَا إِلَى خَيْبَرَ، فَانْتَهَيْنَا  إِلَيْهِمْ لَيْلًا، فَلَمَّا أَصْبَحَ وَلَمْ يَسْمَعْ أَذَانًا رَكِبَ، وَرَكِبْتُ خَلْفَ أَبِي طَلْحَةَ، وَإِنَّ قَدَمِي لَتَمَسُّ قَدَمَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَخَرَجُوا إِلَيْنَا بِمَكَاتِلِهِمْ وَمَسَاحِيهِمْ، فَلَمَّا رَأَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا: مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالخَمِيسُ، قَالَ: فَلَمَّا رَآهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ {فَسَاءَ صَبَاحُ المُنْذَرِينَ} [الصافات: 177]


Bukhari-609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 உரத்த குரலில் பாங்கு சொல்வது.

(மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்லும் பொறுப்பிலிருந்தவரிடம்), (இராகமிட்டுக் கொண்டிராமல்) குரலெடுத்து பாங்கு சொல்லுங்கள்: அல்லது இப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

609. அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் ‘நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்’ எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.
Book : 10


إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ، أَوْ بَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ: «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ، جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ، إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»، قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-608

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

பாங்கு சொல்வதன் சிறப்பு.

608. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான்.

தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, ‘இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,’ என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ، حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ المَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى


Bukhari-607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 இகாமத்தின் வாசகங்களில் கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும்.

607. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத் காமதிஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Book : 10


«أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ» قَالَ إِسْمَاعِيلُ: فَذَكَرْتُ لِأَيُّوبَ، فَقَالَ: «إِلَّا الإِقَامَةَ»


Bukhari-606

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

606. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

மக்கள் எண்ணிக்கையில் அதிகமானபோது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது, நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் எனக் கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Book :10


«لَمَّا كَثُرَ النَّاسُ» قَالَ: «ذَكَرُوا أَنْ يَعْلَمُوا وَقْتَ الصَّلاَةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ، فَذَكَرُوا أَنْ يُورُوا نَارًا، أَوْ يَضْرِبُوا نَاقُوسًا فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ»


Bukhari-605

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும்.

605. அனஸ் (ரலி) அறிவித்தார்.

பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத் காமதிஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10


«أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ، إِلَّا الإِقَامَةَ»


Bukhari-604

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

604. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து (தொழுதுக்) கொள்வார்கள்.

ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்று கூறினர். வேறு சிலர், யூதர்கள் வைத்திருக்கிற (ஊதுகுழல்) கொம்பைப் போன்று நாமும் (ஏற்படுத்தி) கொம்பூதலாமே! என்று கூறினர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை அனுப்பி வைக்கலாமே?” என்று கூறினார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் “பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)

அத்தியாயம்: 10


أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ كَانَ المُسْلِمُونَ حِينَ قَدِمُوا المَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاَةَ لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ: اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ بُوقًا مِثْلَ قَرْنِ اليَهُودِ، فَقَالَ عُمَرُ: أَوَلاَ تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلاَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ»


Next Page » « Previous Page