Author: Farook

Bukhari-243

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72 ஒரு பெண் தம் தந்தையின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவுதல்.

அபுல் ஆலியா (அர்ரியாஹீ-ரஹ்) அவர்கள், எனது (ஒரு) கால் மீது (ஈரக்கையால்) தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) விடுங்கள். ஏனெனில் அதில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

 243. ‘ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) அவர்களிடம் மக்கள் வந்து, ‘நபி(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சை செய்யப்பட்டது?’ என்று கேட்டபோது, எனக்கும் கேள்வி கேட்கப்பட்டவருக்குமிடையில் யாரும் இருக்கவில்லை. ‘இந்த விஷயத்தை என்னை விட அதிகம் தெரிந்தவர் யாரும் எஞ்சியிருக்கவில்லை.

அலீ(ரலி) தங்களின் கேடயத்தைக் கொண்டு வந்தார். அதில் தண்ணீர் இருந்தது. ஃபாத்திமா(ரலி) அந்தத் தண்ணீரால் நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவினார். ஒரு பாய் எடுக்கப்பட்டு அது கரிக்கப்பட்டது. பின்னர் அந்தச் சாம்பல் நபி(ஸல்) அவர்களின் காயத்தில் பூசப்பட்டது’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) கூறினார்’ என அபூ ஹாஸிம் அறிவித்தார்.
Book : 4


بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، «كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ»


Bukhari-242

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 71

பழரசம், போதையூட்டும் பானம் ஆகிய வற்றில் உளூ செய்வது கூடாது.

இவற்றில் உளூ செய்வதை ஹஸன் அல்பஸரீ (ரஹ்), அபுல் ஆலியா (ரஹ்) ஆகியோர் வெறுப்பிற்குறிய செயலாகக் கருதுகின்றனர். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (தண்ணீர் கிடைக்காத போது) பழரசம், பால் ஆகியவற்றில் உளூ செய்வதைவிட, தயம்மும் செய்வதே எனக்கு மிகவும் விருப்பமான தாகும் என்று கூறியுள்ளார்கள்.

 242. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
Book : 4


«كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»


Bukhari-241

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 ஆடையில் எச்சில், மூக்குச் சளி போன்றவை படுதல்.

ஹுதைபியா உடன் படிக்கை நடைபெற்ற காலக்கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் செய்தியை மிஸ்வர் (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகியோர் கூறினர்:

(உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:) நபி (ஸல்) அவர்கள் உமிழ்ந்தால் அதை (கீழே விழவிடாமல்) அவருடைய தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்.

(குறிப்பு: முழு ஹதீஸ் அறியக் காண்க: பாகம் -3, ஹதீஸ் எண்-2731) 

241. ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 4


«بَزَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: طَوَّلَهُ ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي حُمَيْدٌ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-240

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 தொழுது கொண்டிருப்பவரின் முதுகில் அசுத்தமான பொருளோ இறந்த பிராணி களோ போடப்படுமானால் அதனால் அவருடைய தொழுகை வீணாகிவிடாது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது தமது ஆடையில் அசுத்தம் இருப்பதைக் கண்டுவிடுவீர் களானால் (தொழுகையில் இருந்தவாறே) அதைக் கழற்றி வைத்து விட்டுத் தமது தொழுகையைத் தொடர்வார்கள்.

தமது ஆடையில் இரத்தமோ இந்திரியமோ இருக்க (அது தெரியாமல்) ஒருவர் தொழுதார். அல்லது கிப்லா திசையை விட்டு வேறு திசையில் தொழுதார் (என்று தெரியவந்தது). அல்லது தயம்மும் செய்து தொழுது முடித்தார். பிறகு அதே நேரத்திற்குள் அவருக்கு தண்ணீர் கிடைத்து விட்டது. இந்நிலைகளில் அவர் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டியதில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) ஷஅபீ (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர். 

240. நபி(ஸல்) அவர்கள் கஃபத்துல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عِنْدَ البَيْتِ، وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَيُّكُمْ يَجِيءُ بِسَلَى جَزُورِ بَنِي فُلاَنٍ، فَيَضَعُهُ عَلَى ظَهْرِ مُحَمَّدٍ إِذَا سَجَدَ؟ فَانْبَعَثَ أَشْقَى القَوْمِ فَجَاءَ بِهِ، فَنَظَرَ حَتَّى سَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَضَعَهُ عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ، وَأَنَا أَنْظُرُ لاَ أُغْنِي شَيْئًا، لَوْ كَانَ لِي مَنَعَةٌ، قَالَ: فَجَعَلُوا يَضْحَكُونَ وَيُحِيلُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدٌ لاَ يَرْفَعُ رَأْسَهُ، حَتَّى جَاءَتْهُ فَاطِمَةُ، فَطَرَحَتْ عَنْ ظَهْرِهِ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ». ثَلاَثَ مَرَّاتٍ، فَشَقَّ عَلَيْهِمْ إِذْ دَعَا عَلَيْهِمْ، قَالَ: وَكَانُوا يَرَوْنَ أَنَّ الدَّعْوَةَ فِي ذَلِكَ البَلَدِ مُسْتَجَابَةٌ، ثُمَّ سَمَّى: «اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ، وَعَلَيْكَ بِعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ» – وَعَدَّ السَّابِعَ فَلَمْ يَحْفَظْ -، قَالَ: فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ رَأَيْتُ الَّذِينَ عَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَرْعَى، فِي القَلِيبِ قَلِيبِ بَدْرٍ


Bukhari-239

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

239. ‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :4


«لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي المَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ»


Bukhari-238

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 68 தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்.

 238. ‘நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருக்கிறோம்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 4


«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ»


Bukhari-237

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

237. ‘இறைவழியில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஈட்டியால் குத்தப்படும்போது இருந்தது போல் மறுமை நாளில் அப்படியே இருக்கும். அதிலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடும். ஆனால் அதன் நிறயம் இரத்தத்தினுடைய நிறமாக இருந்தாலும் அதன் வாடை கஸ்தூரி வாடையாகவே இருக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :4


«كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ  المُسْلِمُ فِي سَبِيلِ اللَّهِ، يَكُونُ يَوْمَ القِيَامَةِ كَهَيْئَتِهَا، إِذْ طُعِنَتْ، تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالعَرْفُ عَرْفُ المِسْكِ»


Bukhari-236

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

236. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book :4


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ: «خُذُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ» قَالَ مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، مَا لاَ أُحْصِيهِ يَقُولُ عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ


Bukhari-235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்து விட்டால்… (என்ன சட்டம்?)

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஒரு அசுத்தமான பொருளின்) ருசியோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றி விடாமலிருக்கும் வரை எந்தத் தண்ணீரையும் பயன் படுத்தலாம் என்று கூறியுள்ளார்கள்.

ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) பரவாயில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.)

இறந்து விட்ட யானை போன்ற மிருகங் களின் எலும்புகள் விஷயத்தில் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவற்றின் எலும்புகளால் அவர்கள் தலைவாரிக் கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக் கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதை குற்றமென அவர்கள் கருதவில்லை.

முஹம்மத் பின் சீரீன், இப்றாஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்றமில்லை எனக் கூறியுள்ளனர். 

235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்)

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ: «أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ، وَكُلُوا سَمْنَكُمْ»


Bukhari-234

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

234. ‘பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு முன்னர், நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவத்தில் தொழுதார்கள்’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :4


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، قَبْلَ أَنْ يُبْنَى المَسْجِدُ، فِي مَرَابِضِ الغَنَمِ»


Next Page » « Previous Page