Author: Farook

Bukhari-233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66 ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும், ஆட்டுத் தொழுவமும்.

அபூமூசா (ரலி) அவர்கள் தாருல் பரீத் எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் வெட்ட வெளியும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் வெட்ட வெளியையும் சுட்டிக் காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)என்றார்கள்.

 233. ‘உகல்’ அல்லது ‘உரைனா’ கோத்திரத்திலிருந்து சிலர் மதீனாவிற்கு வந்திருந்தனர். மதீனா(வின் கால நிலை) அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே ஒட்டகங்களிடத்தில் பாலையும் அதன் சிறு நீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் அதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததும் நபி(ஸல்) அவர்களின் கால் நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டுக் கால்நடைகளைத் தங்களோடு ஓட்டிச் சென்றனர்.

இச்செய்தி மறு நாள் காலை நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் அவர்களைப் பின்தொடர்ந்து (பிடித்து வர) சிலரை அனுப்பினார்கள். அன்று நண்பகலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்பட்டு, அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. ‘ஹர்ரா’

قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوْا المَدِينَةَ «فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا» فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا، قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، «فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الحَرَّةِ، يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ». قَالَ أَبُو قِلاَبَةَ: «فَهَؤُلاَءِ سَرَقُوا وَقَتَلُوا، وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ»


Bukhari-232

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

232. ‘நபி(ஸல்) அவர்களின் ஆடையிலிருந்த இந்திரியத்தைத் தாம் கழுவியதாகவும் அந்த ஆடையில் ஆங்காங்கே சில இடங்களில் அதன் ஈரத்தைப் பார்த்ததாகவும் ஆயிஷா(ரலி) கூறினார்’ என சுலைமான் இப்னு யஸார் அறிவித்தார்.
Book :4


أَنَّهَا كَانَتْ تَغْسِلُ المَنِيَّ مِنْ ثَوْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا


Bukhari-231

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65 இந்திரியம் முதலியவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் அதனைக் கழுவிய அடையாளம் விலகவில்லையென்றால் (என்ன செய்ய வேண்டும்)? 

231. ‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, ‘நபி(ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ஆங்காங்கே காணப்படும்’ என்று கூறினார்கள்’ சுலைமான் இப்னு யஸார் அறிவித்தார்.
Book : 4


سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ  فِي الثَّوْبِ تُصِيبُهُ الجَنَابَةُ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: «كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَأَثَرُ الغَسْلِ فِيهِ» بُقَعُ المَاءِ


Bukhari-230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

230. ‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, ‘ நபி(ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ஆங்காங்கே காணப்படும்’ என்று கூறினார்கள்’ என சுலைமான் இப்னு யஸார் கூறினார்.
Book :4


سَأَلْتُ عَائِشَةَ عَنِ المَنِيِّ، يُصِيبُ الثَّوْبَ؟ فَقَالَتْ: «كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَأَثَرُ الغَسْلِ فِي ثَوْبِهِ بُقَعُ المَاءِ»


Bukhari-229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டிவிடுவதும் பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்.

 229. ‘நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்
Book : 4


( كُنْتُ أَغْسِلُ الجَنَابَةَ مِنْ ثَوْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَإِنَّ بُقَعَ المَاءِ فِي ثَوْبِهِ )


Bukhari-228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

228. அபூஹுபைஷ் என்பவரின் மகள் ஃபாத்திமா என்ற பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

-ஹிஷாம் பின் உர்வா அவர்கள், தனது தந்தை இந்த செய்தியின் மீதிப்பகுதியையும் அறிவித்ததாக கூறுகிறார்:-

‘பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»


Bukhari-227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63 இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல்.

 227. ‘ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 4


جَاءَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ، كَيْفَ تَصْنَعُ؟ قَالَ: «تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، وَتَنْضَحُهُ، وَتُصَلِّي فِيهِ»


Bukhari-226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62 ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழியில் சிறுநீர் கழித்தல். 

226. ‘அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) சிறுநீர் விஷயத்தில் மிகக் கண்டிப்பானவராக இருந்தார். ‘இஸ்ரவேலர் சமூகத்தினரில் யாருடைய ஆடையிலாவது சிறுநீர் பட்டால் அப்பாகத்தைக் கத்தரித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்’ எனக் கூறுவார்.

‘அவர் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளலாமே’ என ஹுதைஃபா(ரலி) கூறிவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்’ என்று கூறினார்’ என அபூ வாயில் அறிவித்தார்.
Book : 4


كَانَ أَبُو مُوسَى الأَشْعَرِيُّ يُشَدِّدُ فِي البَوْلِ، وَيَقُولُ: ” إِنَّ: بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ ثَوْبَ أَحَدِهِمْ قَرَضَهُ “

فَقَالَ: حُذَيْفَةُ لَيْتَهُ أَمْسَكَ «أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا»


Bukhari-225

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 61 மற்றொருவர் பக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் சுவற்றினால் மறைத்துக் கொள்வதும். 

225. ‘நானும் நபி(ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஒரு சுவரின் பின்னாலுள்ள ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் எவ்வாறு நிற்பாரோ அதைப் போன்று நின்றவர்களாகச் சிறுநீர் கழித்தார்கள். அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கிச் சென்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் கை அசைத்து அழைத்தார்கள். நான் வந்து அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றும் வரை அவர்களின் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்’ என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
Book : 4


«رَأَيْتُنِي أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَمَاشَى، فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ، فَبَالَ، فَانْتَبَذْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَيَّ فَجِئْتُهُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ»


Bukhari-224

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60 நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் சிறுநீர் கழித்தல். 

224. ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்’ என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
Book : 4


«أَتَى النَّبِيُّ  صلّى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ»


Next Page » « Previous Page