Author: Farook

Bukhari-223

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

223. ‘(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை’ என உம்மு கைஸ்(ரலி) அறிவித்தார்.
Book :4


أَنَّهَا  أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، « فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ، فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ »


Bukhari-222

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 59

சிறுவர்களின் சிறுநீர்.

 222. நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை, அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (கொஞ்சம்) தண்ணீர் கொண்டு வரச் செய்து அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4


«أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ»


Bukhari-221

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

221. ‘ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் சிறுநீர் கழித்தார். அப்போது அவரை மக்கள் விரட்டினார்கள். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அம்மனிதர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கட்டளையிட்டார்கள். அது சிறுநீரின் மீது ஊற்றப்பட்டது’ என அனஸ்(ரலி) அறிவித்தார்
Book :4


«فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَنُوبٍ مِنْ مَاءٍ فَأُهْرِيقَ عَلَيْهِ»

حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلّى الله عليه وسلم


Bukhari-220

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58

பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்து விட்டால் அதன் மீது தண்ணீர் ஊற்றுதல்.

 220. ‘ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 4


قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي المَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلًا مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ»


Bukhari-219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57

பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை நபி (ஸல்) அவர்களும் மக்களும் விட்டுவிட்டது.

 219. ‘ஒரு கிராமவாசி பள்ளியினுள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, ‘அவரைவிட்டு விடுங்கள்’ என்று கூறிவிட்டு, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதன் மீது ஊற்றினார்கள்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 4


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أَعْرَابِيًّا يَبُولُ فِي المَسْجِدِ فَقَالَ: «دَعُوهُ حَتَّى إِذَا فَرَغَ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ»


Bukhari-218

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

218. நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்” என்று கூறினார்கள்.

பிறகு ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள்.

அது பற்றி மக்கள், நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்டபோது “இவ்விரு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் வரை அவர்களின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


புகாரீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை முஹம்மத் பின் முஸன்னா அவர்கள் வகீஃ அவர்களிடமிருந்து வகீஃ —> அஃமஷ்.. என்று மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார். அதில் அஃமஷ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம்பெற்றுள்ளது. மேலும் ஹதீஸின் வார்த்தையில் சிறிது மாற்றம் உள்ளது.

அத்தியாயம்: 4


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ» ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»

وَقَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى، وَحَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ: «يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ»


Bukhari-217

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56

சிறுநீர் கழித்தபின் கழுவுதல்.

அந்த சவக்குழியிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் தமது சிறுநீரிலிருந்து அவர் (தம் உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார் என்றே கூறினார்கள்.

மனிதர்களுடைய சிறுநீரைத் தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.

 217. ‘நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் செல்வார்களானால் அவர்களுக்காக தண்ணீர் கொண்டு செல்வேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்வார்கள்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 4


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ، أَتَيْتُهُ بِمَاءٍ فَيَغْسِلُ بِهِ»


Bukhari-216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 55

சிறுநீரிலிருந்து (உடையையும் உடலையும்) மறைக்காமலிருப்பது பெரும் (பாவச்) செயல்களில் ஒன்றாகும். 

216. நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை’ என்று சொல்லிவிட்டு,

“இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம் பேசித் திரிந்தார்” என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள்.

அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு, “அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ، أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ» ثُمَّ قَالَ: «بَلَى، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ». ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ، فَكَسَرَهَا كِسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا» أَوْ: «إِلَى أَنْ يَيْبَسَا»


Bukhari-215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

215. ‘கைபர் போர் நடந்தவருடம் நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். ‘ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (அஸர்) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் (பயண) உணவைக் கொண்டு வரும் படி கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் சாப்பிட்டோம்; குடித்தோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்து, உளூச் செய்யாமலேயே எங்களுக்கு மக்ரிப் தொழுகை நடத்தினார்கள்’ என ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.
Book :4


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ، «صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَصْرَ، فَلَمَّا صَلَّى دَعَا بِالأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ» فَأَكَلْنَا وَشَرِبْنَا،« ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَغْرِبِ، فَمَضْمَضَ، ثُمَّ صَلَّى لَنَا المَغْرِبَ وَلَمْ يَتَوَضَّأْ»


Bukhari-214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 54

உளூ முறிவதற்குரிய காரணம் (ஹதஸ்) ஏற்படாமலேயே (புதிதாக) உளூ செய்தல்.

214. ‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூச் செய்வார்கள்’ என அனஸ் (ரலி) கூறியபோது, ‘நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?’ என அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘உளூவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது’ என்று அனஸ் (ரலி) கூறினார்’

இதை அம்ர் இப்னு ஆமிர் அறிவித்தார்.

அத்தியாயம்: 4


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ» قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: يُجْزِئُ أَحَدَنَا الوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ


Next Page » « Previous Page