Author: Farook

Musnad-Ahmad-27145

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27145. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை. என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ، وَلَا يُؤْمِنُ بِاللَّهِ مَنْ لَا يُؤْمِنُ بِي، وَلَا يُؤْمِنُ بِي مَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ»


Musnad-Ahmad-23236

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23236. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை. என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ، وَلَا يُؤْمِنُ بِاللَّهِ مَنْ لَا يُؤْمِنُ بِي، وَلَا يُؤْمِنُ بِي مَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ»


Musnad-Ahmad-16651

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தனது பாட்டி வழியாக ரபாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹுவைத்திப் அறிவிக்கும் ஹதீஸ்கள்.

16651. உளூச்செய்யாமல் தொழுதவர் தொழுதவராக ஆகமாட்டார். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தவர் உளூச் செய்தவராக ஆகமாட்டார். என்னை நம்பிக்கைகொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اللَّهَ تَعَالَى، وَلَا يُؤْمِنُ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَا يُؤْمِنُ بِي مَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-28

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

28. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-15

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمِنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمِنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Tayalisi-240

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

240. உளூ இல்லாமல் தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ إِلَّا بِوُضُوءٍ وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Tayalisi-239

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

239. என்னை நம்பிக்கைகொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَمْ يُؤْمِنْ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَمْ يُؤْمِنْ بِي مَنْ لَمْ يُحِبَّ الْأَنْصَارَ»


Tirmidhi-25

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உளூச் செய்யும்போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறுதல்

25. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

………


«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Kubra-Bayhaqi-184

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

184. அப்துல்அஸீஸ் பின் முஹம்மது அத்தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை என்ற நபிமொழியின் கருத்து என்னவென்றால், தொழுகைக்காக உளூச் செய்பவர், பெருந் தொடக்கை நீக்க குளிப்பவர் தொழுகைக்காக உளூச் செய்கிறேன் என்றோ அல்லது பெருந் தொடக்கை நீக்க குளிக்கிறேன் என்றோ நிய்யத் செய்யாமல் உளூச் செய்தால் அவருக்கு உளூ இல்லை, குளிப்பு இல்லை என்பதாகும் என்று ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


وَذَكَرَ رَبِيعَةُ أَنَّ تَفْسِيرَ حَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ “. أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ


Next Page » « Previous Page