Author: Farook

Abu-Dawood-2438

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2438. துல் ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் “தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


«مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ» يَعْنِي أَيَّامَ الْعَشْرِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ»


Ibn-Majah-1727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1727. துல் ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் “தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَا مِنْ أَيَّامٍ، الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ، مِنْ هَذِهِ الْأَيَّامِ» يَعْنِي الْعَشْرَ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ»


Darimi-1815

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1815.

நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது , “அறப்போரை விடவுமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும் தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَا مِنْ عَمَلٍ أَزْكَى عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَلَا أَعْظَمَ أَجْرًا مِنْ خَيْرٍ يَعْمَلُهُ فِي عَشْرِ الْأَضْحَى». قِيلَ: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ»،

قَالَ: وَكَانَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ إِذَا دَخَلَ أَيَّامُ الْعَشْرِ اجْتَهَدَ اجْتِهَادًا شَدِيدًا حَتَّى مَا يَكَادُ يَقْدِرُ عَلَيْهِ


Darimi-1814

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1814. நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது , “அறப்போரை விடவுமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும் தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَا الْعَمَلُ، فِي أَيَّامٍ أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي عَشْرِ ذِي الْحِجَّةِ». قِيلَ: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ ثُمَّ لَمْ يَرْجِعْ بِشَيْءٍ»


Almujam-Alkabir-11116

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், மதிப்புள்ளவைகளாகவும் இல்லை.

எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ أَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ التَّسْبِيحَ، وَالتَّكْبِيرَ، وَالتَّهْلِيلَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-13919

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

13919. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாக இல்லை.

எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ فِيهِنَّ الْعَمَلُ مِنْ هَذِهِ الْأَيَّامِ أَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ التَّكْبِيرَ وَالتَّهْلِيلَ وَالتَّحْمِيدَ»


Musnad-Ahmad-6154

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6154. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், மதிப்புள்ளவைகளாகவும் இல்லை.

எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ»


Musnad-Ahmad-5446

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5446. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், மதிப்புள்ளவைகளாகவும் இல்லை.

எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ، وَالتَّحْمِيدِ»


Kubra-Bayhaqi-13048

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13048. ஹதீஸ் எண்-13047 இல் வரும் செய்தி இதில் ஸாலிஹ் பின் யஹ்யா —> (அவரின் தந்தை) யஹ்யா பின் மிக்தாம் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் (மிக்தாமே! நீ தலைவராகவோ, வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ இருக்க வேண்டாம்” என்று வந்துள்ளது.


لَمْ يَكُنْ أَمِيرًا وَلَا جَابِيًا وَلَا عَرَّافًا


Kubra-Bayhaqi-13047

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13047. மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய தோளில் அடித்து, “மிக்தாமே! நீ தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இல்லாத நிலையில் மரணமடைந்தால் நீ (மறுமையில்) வெற்றி பெற்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبِهِ ثُمَّ قَالَ: ” أَفْلَحْتَ يَا قَدِيمُ إِنْ مِتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا أَوْ كَاتِبًا أَوْ عَرِيفًا


Next Page » « Previous Page