பாடம்:
பலவந்தமாக பாலியல் குற்றத்திற்கு நிர்பந்திக்கப்பட்ட பெண்ணைக் குறித்து வந்துள்ளவை.
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண் (பாலியல் உறவுக்கு) வற்புறுத்தப்பட்டார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை விட்டும் தண்டனையைத் தவிர்த்தார்கள். ஆனால், அவளை (வற்புறுத்தி) அடைந்தவன் மீது அத்தண்டனையை நிறைவேற்றினார்கள். மேலும், அப்பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் மஹர் (திருமணக் கொடை) நிர்ணயித்ததாகக் குறிப்பிடப்படவில்லை.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஒரு ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடர் தொடர்ச்சியானது அல்ல. இந்தச் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ஜப்பார் பின் வாயில் பின் ஹுஜ்ர் அவர்கள் தனது தந்தையிடமிருந்து (ஹதீஸ்களை) செவியுறவில்லை, அவரையும் சந்திக்கவில்லை. அவர் தனது தந்தை இறந்த சில மாதங்களுக்குப் பிறகு பிறந்ததாகக் கூறப்படுகிறது என்று முஹம்மத் (புகாரி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்.
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களிடையே இந்த ஹதீஸின் அடிப்படையில் உள்ள செயல்பாடு என்னவென்றால், வற்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு குற்றவியல் தண்டனை இல்லை என்பதே.
(திர்மிதி: 1453)بَابُ مَا جَاءَ فِي المَرْأَةِ إِذَا اسْتُكْرِهَتْ عَلَى الزِّنَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ الرَّقِّيُّ، عَنْ الحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَبْدِ الجَبَّارِ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ:
«اسْتُكْرِهَتْ امْرَأَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَرَأَ عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الحَدَّ، وَأَقَامَهُ عَلَى الَّذِي أَصَابَهَا» وَلَمْ يُذْكَرْ أَنَّهُ جَعَلَ لَهَا مَهْرًا
هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ، وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ: عَبْدُ الجَبَّارِ بْنُ وَائِلِ بْنِ حُجْرٍ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ وَلَا أَدْرَكَهُ، يُقَالُ: إِنَّهُ وُلِدَ بَعْدَ مَوْتِ أَبِيهِ بِأَشْهُرٍ وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ: أَنْ لَيْسَ عَلَى المُسْتَكْرَهَةِ حَدٌّ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1453.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்