இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் விபச்சாரம் செய்த நிலையில் உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அது குறித்து அவர் மக்களிடம் ஆலோசனை கேட்டார். பின்னர், அந்தப் பெண்ணை கல்லால் எறிந்து தண்டனை நிறைவேற்றுமாறு உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார். அப்பெண் அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களைக் கடந்து அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார். மக்கள், “மனநிலை பாதிக்கப்பட்ட இன்னார் வம்சத்துப் பெண் விபச்சாரம் செய்துவிட்டார்; இவரை கல்லால் எறிந்து தண்டனை நிறைவேற்ற உமர் (ரலி) உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினர்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், “இவரைத் திருப்பி அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். அவர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘மூன்று நபர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (அவர்களுக்குக் குற்றம் எழுதப்படாது):
1 . குணம் பெறும் வரை மனநிலை பாதிக்கப்பட்டவரிடமிருந்து,
2 . விழித்தெழும் வரை தூங்குபவரிடமிருந்து,
3 . அறிவு முதிர்ச்சி பெறும் வரை சிறுவரிடமிருந்து’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “ஆம், அறிவேன்” என்றார். அலீ (ரலி) அவர்கள், “அப்படியிருக்க, இவருக்கு ஏன் தண்டனை நிறைவேற்றப்படுகிறது?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி), “தண்டனை எதுவுமில்லை” என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள், “அப்படியென்றால் இவரை போகவிடுங்கள்” என்றார். அப்படியே அந்தப் பெண்ணை உமர் (ரலி) அவர்கள் போகவிட்டுவிட்டு, (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறலானார்.
(அபூதாவூத்: 4399)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
أُتِيَ عُمَرُ بِمَجْنُونَةٍ قَدْ زَنَتْ، فَاسْتَشَارَ فِيهَا أُنَاسًا، فَأَمَرَ بِهَا عُمَرُ أَنْ تُرْجَمَ، مُرَّ بِهَا عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، فَقَالَ: مَا شَأْنُ هَذِهِ؟ قَالُوا: مَجْنُونَةُ بَنِي فُلَانٍ زَنَتْ، فَأَمَرَ بِهَا عُمَرُ أَنْ تُرْجَمَ، قَالَ: فَقَالَ: ارْجِعُوا بِهَا، ثُمَّ أَتَاهُ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَمَا عَلِمْتَ ” أَنَّ الْقَلَمَ قَدْ رُفِعَ عَنْ ثَلَاثَةٍ: عَنِ الْمَجْنُونِ حَتَّى يَبْرَأَ، وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَعْقِلَ؟ ” قَالَ: بَلَى، قَالَ: فَمَا بَالُ هَذِهِ تُرْجَمُ؟ قَالَ: لَا شَيْءَ، قَالَ: فَأَرْسِلْهَا، قَالَ: فَأَرْسَلَهَا، قَالَ: فَجَعَلَ يُكَبِّرُ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4399.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்