Author: Farook

Musnad-Ahmad-11281

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11281. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

«تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً»

Musnad-Ahmad-11086

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11086. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஹர் உணவு உண்ணுவதில் பரக்கத் இருக்கிறது. எனவே அதை விட்டுவிடாதீர்கள். ஒரு மிடரு தண்ணீரையாவது குடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

«السَّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ، فَلَا تَدَعُوهُ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»

Almujam-Alawsat-6434

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»

Ibn-Hibban-3467

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3467. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»

Musnad-Ahmad-11396

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11396. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஹர் உணவு உண்ணுவதில் பரக்கத் இருக்கிறது. எனவே அதை விட்டுவிடாதீர்கள். ஒரு மிடரு தண்ணீரையாவது குடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

«السُّحُورُ أَكْلَةٌ بَرَكَةٌ فَلَا تَدَعُوهُ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جَرْعَةً مِنْ مَاءٍ، فَإِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»

Bazzar-3720

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3720. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி)

إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

Musannaf-Abdur-Razzaq-1665

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1665. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ் லனா அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எங்களுக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நாங்கள் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறோம்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)

إِذَا دَخَلْتُمُ الْمَسْجِدَ فَقُولُوا: اللَّهُمُ افْتَحْ لَنَا أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجْتُمْ فَقُولُوا: اللَّهُمْ إِنَّا نَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

Musnad-Ahmad-23607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23607. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்கள்: அபூஹுமைத் (ரலி), அபூஉசைத் (ரலி)

إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، فَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

Musnad-Ahmad-16057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16057. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ் லனா அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எங்களுக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்கள்: அபூஹுமைத் (ரலி), அபூஉசைத் (ரலி)

إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لَنَا أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

Next Page » « Previous Page