Author: Farook

Nasaayi-5140

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5140. ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஹுபைரா என்பவரின் மகள் (ஹிந்த்) அல்லாஹ்வின் தூதரிடத்தில் கனமான தங்க மோதிரங்கள் கையில் வைத்திருந்தவராக வந்தார்…

அப்பெண்னின் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறையிட்டாள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை (அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார்.

பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.

உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையை கடையில் விற்றுவிட்டு வருமாறு ஆளப்பினார்கள். மாலையை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள்…


جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ، فَقَالَ: كَذَا فِي كِتَابِ أَبِي، أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ يَدَهَا، فَدَخَلَتْ عَلَى فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَشْكُو إِلَيْهَا الَّذِي صَنَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ،

وَقَالَتْ: هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا فَقَالَ: «يَا فَاطِمَةُ، أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللَّهِ وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ»، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا، وَاشْتَرَتْ بِثَمَنِهَا غُلَامًا وَقَالَ مَرَّةً: عَبْدًا وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَأَعْتَقَتْهُ، فَحُدِّثَ بِذَلِكَ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْجَى فَاطِمَةَ مِنَ النَّارِ»


Ibn-Hibban-3309

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3309. அனஸ் பின் மாலிக் அவர்கள் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும். கெட்ட மரணத்தை விட்டும் தடுக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«الصَّدَقَةُ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ»


Tirmidhi-664

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும். கெட்ட மரணத்தை விட்டும் தடுக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ»


Almujam-Alkabir-1018

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1018. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ»


Almujam-Alkabir-1017

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1017. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ»


Almujam-Alawsat-3450

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3450. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَى»


Almujam-Alawsat-943

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

943. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரகசியமாக தர்மம் செய்வது, இறைவனின் கோபத்தை தணித்துவிடும்.

நன்மைகள், தீமைகளை வீழ்த்திவிடும்.

உறவை பேணி நடப்பது, ஆயுளை அதிகரிக்க செய்யும். வறுமையை நீக்கும்.

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாக கூறுங்கள். ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்.

மேலும் அதில் தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்துள்ளது. அவற்றில் மிகச் சிறியது கவலையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَإِنَّ صَنَائِعَ الْمَعْرُوفِ تَقِي مَصَارِعَ السَّوْءِ، وَإِنَّ صِلَةَ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ، وَتَقِي الْفَقْرَ. وَأَكْثِرُوا مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا وَقُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ، وَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَدْنَاهَا الْهَمُّ»


Almujam-Alawsat-5028

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5028. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்ற வார்த்தை தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கும் மருந்தாகும்.

அதில் குறைந்த பட்சம் கவலை என்னும் நோயிக்கு மருந்தாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-541

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ்”

(பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது)

என்று ஒருவர் கூறினால் அது அவருக்கு தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்தாகும். அவற்றில் மிகவும் சிறியது கவலை எனும் நோயாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


 


مَنْ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ كَانَتْ لَهُ دَوَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ


Hakim-1990

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1990. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யார் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறுகிறாரோ அது அவருக்கு தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்தாகும். அதில் குறைந்த பட்சம் கவலை என்னும் நோயிக்கு மருந்தாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، كَانَ دَوَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ»


Next Page » « Previous Page