Author: Farook

Almujam-Alkabir-12066

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12066. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


فِي «الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ»


Almujam-Alkabir-12065

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12065. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டு விட்டதாக கூறினார். எனவே  நபி (ஸல்) அவர்கள், அவர் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும், அது இல்லாவிட்டால் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள்.


«أَنَّ رَجُلًا أَتَى نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزَعَمَ أَنَّهُ وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَصَدَّقَ بِدِينَارٍ فَإِنْ لَمْ يَجِدْ فَبِنِصْفِ دِينَارٍ»


Almujam-Alkabir-12025

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12025. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்ட ஒரு மனிதருக்கு, அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.


«أَنَّ رَجُلًا وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَصَدَّقَ بِنِصْفِ دِينَارٍ»


Almujam-Alkabir-11921

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11921. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும், அது இல்லாவிட்டால் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


فِي الَّذِي يَغْشَى امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِنِصْفِ دِينَارٍ»


Almujam-Alkabir-11698

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11698. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து , என் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என கட்டளையிட்டார்கள்.


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي وَقَعَتُ عَلَى امْرَأَتِي، وَهِيَ حَائِضٌ «فَأَمَرَهُ أَنْ يَتَصَدَّقَ بِنِصْفِ دِينَارٍ»


Daraqutni-3749

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3749. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனாரும், இரத்தம் வருவது நின்று குளிப்பதற்கு முன் உடலுறவு கொண்டவர் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…


إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَ الْوَاطِئَ فِي الْعِرَاكِ بِصَدَقَةٍ دِينَارٍ , وَإِنْ وَطِئَهَا بَعْدَ أَنْ تَطْهُرَ وَلَمْ تَغْتَسِلْ بِصَدَقَةٍ نِصْفِ دِينَارٍ»


Daraqutni-3748

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3748. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், அந்த நேரத்தில் இரத்தம் சிகப்பு நிறத்தில் வந்திருந்தால் ஒரு தீனாரும், மஞ்சள் நிறத்தில் வந்திருந்தால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِذَا كَانَ الدَّمُ عَبِيطًا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ , وَإِنْ كَانَ صُفْرَةً فَبِنِصْفِ دِينَارٍ»


Daraqutni-3747

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3747. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், அந்த நேரத்தில் இரத்தம் சிகப்பு நிறத்தில் வந்திருந்தால் ஒரு தீனாரும், மஞ்சள் நிறத்தில் வந்திருந்தால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…


«مَنْ أَتَى امْرَأَتَهُ فِي الدَّمِ فَعَلَيْهِ دِينَارٌ , وَفِي الصُّفْرَةِ نِصْفُ دِينَارٍ»


Daraqutni-3746

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3746. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ»


Daraqutni-3745

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3745. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ , قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ»


Next Page » « Previous Page