Author: Farook

Tirmidhi-1322/1

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1322/1. அப்துல்லாஹ் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள், உங்கள் தந்தை உமர் ரலி) அவர்கள் மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இருந்திருக்கும் போது நீங்கள் ஏன் அதை வெறுக்கின்றீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ஒரு நீதிபதி நீதமாக தீர்ப்பளித்தால் அவர் தப்பித்துவிடுவார். (அவருக்கு லாபமும் இல்லை, நட்டமும் இல்லை) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்றுள்ளேன். இதற்கு பின்பும் இந்த நீதிபதி பொறுப்பிற்கு நான் ஆசைப்படுவேனா? என்று உஸ்மான் (ரலி) அவர்களுக்கு பதிலளித்தார்கள்…


أَنَّ عُثْمَانَ قَالَ لِابْنِ عُمَرَ: اذْهَبْ فَاقْضِ بَيْنَ النَّاسِ، قَالَ: أَوَ تُعَافِينِي يَا أَمِيرَ المُؤْمِنِينَ قَالَ: فَمَا تَكْرَهُ مِنْ ذَلِكَ، وَقَدْ كَانَ أَبُوكَ يَقْضِي؟ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِالعَدْلِ فَبِالحَرِيِّ أَنْ يَنْقَلِبَ مِنْهُ كَفَافًا» فَمَا أَرْجُو بَعْدَ ذَلِكَ؟


Abi-Yala-5727

ஹதீஸின் தரம்: More Info

5727. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி பொறுப்பேற்று, அநியாயமாக தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துக்கொள்வார்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَوْرٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَهْلٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِعَدْلٍ فَبِالْحَرِيِّ أَنْ يَنْفَلِتَ كَفَافًا»


Musnad-Ahmad-8940

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

8940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பயணத்தில் தனது ஒட்டகத்தை களைப்படையச் செய்வது போன்று, ஒரு இறைநம்பிக்கையாளர் தனது ஷைத்தான்களை (எதிர்த்துப் போராடி) களைப்படையச் செய்து விடுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ الْمُؤْمِنَ لَيُنْضِي شَيَاطِينَهُ، كَمَا يُنْضِي أَحَدُكُمْ بَعِيرَهُ فِي السَّفَرِ»


Almujam-Alkabir-13801

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13801. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. மனோஇச்சைப்படி (சுயலாபத்திற்கு) தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


القضاة ثلاثة قاضيان في النار وقاض في الجنة قاضي قضى بالهوى فهو في النار وقاضي قضى بغير علم فهو في النار وقاضي قضى بالحق فهو في الجنة


Musannaf-Abdur-Razzaq-21599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21599. அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. ஒருவர் ஆய்வு செய்து நீதியில் தவறிழைத்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. ஒருவர் உண்மையை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல் அநீதமாக தீர்ப்பளித்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
  3. ஒருவர் ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர்: கதாதா (ரஹ்)


الْقُضَاةُ ثَلاَثَةٌ: قَاضٍ اجْتَهَدَ فَأَخْطَأَ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ رَأَى الْحَقَّ فَقَضَى بِغَيْرِهِ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ اجْتَهَدَ فَأَصَابَ فَهُوَ فِي الْجَنَّةِ.


Musannaf-Ibn-Abi-Shaybah-22963

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22963. அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

பின்பு நரகில் செல்லும் இருவரை கூறினார்கள்.

  1. (நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல்) தீர்ப்பில் அநீதி செய்த மனிதர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. உண்மையை நாடியவர் தான் என்றாலும், நீதியில் தவறிழைத்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
  3. உண்மையை நாடி சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : அபுல்ஆலியா (ரஹ்)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபுல்ஆலியாவிடம் , உண்மையை நாடி, நீதியில் தவறிழைத்தவர் என்ன பாவம் செய்தார்?என்று கேட்டார். அதற்கு அபுல்ஆலியா, அவர் தீர்ப்பின் சட்டங்களை அறியாமல் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பிற்கு வந்திருக்கக்கூடாது என்று கூறினார்கள்.


الْقُضَاةُ ثَلَاثَةٌ: اثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ “، فَذَكَرَ اللَّذَيْنِ فِي النَّارِ، قَالَ: «رَجُلٌ جَارَ مُتَعَمِّدًا فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ فَهُوَ فِي النَّارِ، آخَرُ أَرَادَ الْحَقَّ فَأَصَابَ فَهُوَ فِي الْجَنَّةِ» قَالَ: فَقُلْتُ لِرُفَيْعٍ: أَرَأَيْتَ هَذَا الَّذِي أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ؟ قَالَ: «كَانَ حَقُّهُ إِذَا لَمْ يَعْلَمِ الْقَضَاءَ لَا يَكُونُ قَاضِيًا»


Kubra-Bayhaqi-20675

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20675. அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

பின்பு நரகில் செல்லும் இருவரை கூறினார்கள்.

  1. (நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல்) தீர்ப்பில் அநீதி செய்த மனிதர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. ஆய்வு செய்தும், நீதியில் தவறிழைத்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
  3. ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : அபுல்ஆலியா (ரஹ்)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபுல்ஆலியாவிடம் , ஆய்வு செய்தும், நீதியில் தவறிழைத்தவரின் நிலை ஏன் நரகம் செல்வார்?என்று கேட்டார். அதற்கு அபுல்ஆலியா, அவர் சரியாக தீர்ப்பளிக்க தெரியாவிட்டால் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பில் இருந்திருக்கக் கூடாது என்று கூறினார்கள்.

பைஹகீ கூறுகிறார்:

அபுல்ஆலியா அவர்களின் விளக்கத்தின் படி மேற்கண்ட செய்தி, ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் பற்றியே எச்சரிக்கை செய்கிறது என்று தெரிகிறது. அம்ர் பின் ஆஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) போன்றோர் வழியாக வரும் ஹதீஸ்கள் மூலம் ஆய்வுத்திறன் உள்ள நீதிபதி ஆய்வு செய்து தீர்ப்பளித்தால் சரியாக இருந்தால் இரண்டு நன்மையும், தவறாக இருந்தால்

الْقُضَاةُ ثَلَاثَةٌ: فَاثْنَانِ فِي النَّارِ , وَوَاحِدٌ فِي الْجَنَّةِ، فَأَمَّا اللَّذَانِ فِي النَّارِ: فَرَجُلٌ جَارَ عَنِ الْحَقِّ مُتَعَمِّدًا , وَرَجُلٌ اجْتَهَدَ رَأْيَهُ فَأَخْطَأَ , وَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ , فَرَجُلٌ اجْتَهَدَ رَأْيَهُ فِي الْحَقِّ فَأَصَابَ ” , قَالَ: فَقُلْتُ لِأَبِي الْعَالِيَةِ: ” مَا بَالُ هَذَا الَّذِي اجْتَهَدَ رَأْيَهُ فِي الْحَقِّ فَأَخْطَأَ؟ ” قَالَ: ” لَوْ شَاءَ لَمْ يَجْلِسْ يَقْضِي , وَهُوَ لَا يُحْسِنُ يَقْضِي “.


Almujam-Alawsat-3616

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3616.


«الْقُضَاةُ ثَلَاثَةٌ: فَرَجُلٌ قَضَى فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ الْجَنَّةُ، وَرَجُلٌ قَضَى فَاجْتَهَدَ فَأَخْطَأَ فَلَهُ الْجَنَّةُ، وَرَجُلٌ قَضَى فَجَارَ فَفِي النَّارِ»


Shuabul-Iman-7125

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7125. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே தீர்ப்பு வழங்கி மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


الْقُضَاةُ ثَلَاثَةٌ: قَاضِيَانِ فِي النَّارِ، وَقَاضٍ فِي الْجَنَّةِ، قَاضٍ قَضَى بِغَيْرِ الْحَقِّ وَهُوَ يَعْلَمُ فَذَلِكَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى وَهُوَ لَا يَعْلَمُ فَأَهْلَكَ حُقُوقَ النَّاسِ فَذَلِكَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِالْحَقِّ فَذَلِكَ فِي الْجَنَّةِ


Bazzar-4468

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4468. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. அநீதியாக தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. உண்மையை அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் புகுவார்.
  3. உண்மையை அறிந்து நீதமாக தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


الْقُضَاةُ ثَلاثَةٌ اثْنَانِ فِي النَّارِ وَوَاحِدٌ فِي الْجَنَّةِ قَاضٍ قَضَى بِجُورٍ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ قَضَى بِغَيْرِ عِلْمٍ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ بِالْحَقِّ فَهُوَ فِي الْجَنَّةِ.


Next Page » « Previous Page