Author: Farook

Musnad-Ahmad-22974

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22974.


«لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ؛ فَإِنَّمَا لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ»


Almujam-Alawsat-7532

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7532.


«مَنْ كَتَمَ عِلْمًا عِنْدَهُ أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»


Almujam-Alawsat-2290

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2290.


«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ يَعْلَمُهُ، فَكَتَمَهُ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ مُلْجَمًا بِلِجَامٍ مِنْ نَارٍ»


Hakim-345

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

345. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் (அவர் அறிந்துள்ள) கல்வியைப் பற்றி வினவப்படும் போது, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவருக்கு நெருப்பாலான கடிவாளத்தை அல்லாஹ் மாட்டுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

(இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த அபூஅலீ அவர்களிடம்) நீங்கள் கூறும் அறிவிப்பாளர்தொடரில் உள்ள அஸ்ஹர் பின் மர்வானோ அல்லது உங்கள் ஆசிரியரான முஹம்மத் பின் அஹ்மத் அவர்களே தவறிழைத்துள்ளார்கள். அவர்கள் தவறிழைப்பது ஒன்றும் அரிதானதல்ல.

இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த அபூபக்ர் பின் இஸ்ஹாக், அலீ பின் ஹம்ஷாத் ஆகியோர் அலீ பின் ஹகம் அவர்களுக்கும், அதாஃ அவர்களுக்கும் இடையில் தான், ஒரு அறியப்படாத மனிதரைக் கூறி அறிவித்தனர் என்று கூறினேன். அதை அபூஅலீ அவர்களும் சரியென்று ஏற்றுக்கொண்டார்.

பிறகு இந்த கருத்தில் வரும் பலஅறிவிப்பாளர்தொடர்களை நான் ஒன்றுசேர்த்து பார்த்தபோது தான், பலரும் அதாஃ அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிப்பதாகத்தான் அறிவித்திருந்தார்கள்.

மேலும் இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக; எந்த குறையும் இல்லாத அறிவிப்பாளர்தொடரும் நமக்கு கிடைத்தது. (பார்க்க: ஹாகிம்-346)


«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»


Hakim-344

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

344. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அதாஉ பின் அபூரபாஹ் அவர்களிடம், அஃமஷ் (ஸுலைமான் பின் மிஹ்ரான்) அவர்கள் வந்து ஒரு ஹதீஸ் பற்றி கேட்டார். அவருக்கு அந்த ஹதீஸை அதாஉ அவர்கள் அறிவித்தார். உடனே நாங்கள், “அவர் இராக்வாசி ஆயிற்றே! அவருக்கு ஹதீஸை அறிவிக்கிறீர்களே!” என்று அதாஉ அவர்களிடம் கூறினோம்.

அதற்கு அதாஉ அவர்கள், “ஒருவரிடம் (அவர் அறிந்துள்ள) கல்வியைப் பற்றி வினவப்படும் போது, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவர் நெருப்பாலான கடிவாளம் பூட்டப்பட்டவராக கொண்டு வரப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை நான் செவியேற்றுள்ளேன் என்று பதிலளித்தார்.

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை மக்கள் அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் பயன்படுத்துகிறார்கள். இது (மக்களுக்கு மத்தியில்) அடிக்கடி பேசப்படும் செய்தியாகும்.

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் புகாரீ, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைக்குட்பட்டதாகும். என்றாலும் அவர்கள் இதை பதிவு செய்யவில்லை.

இந்தச் செய்தி பற்றி எங்களுடைய ஆசிரியர் அபூஅலீ அவர்களிடம் நான் பேசும் போது, அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர்களில் ஏதாவது சரியாக உள்ளதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்.

جَاءَ الْأَعْمَشُ إِلَى عَطَاءٍ فَسَأَلَهُ عَنْ حَدِيثٍ فَحَدَّثَهُ، فَقُلْنَا لَهُ تُحَدِّثُ هَذَا وَهُوَ عِرَاقِيٌّ؟ قَالَ: لِأَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ جِيءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَقَدْ أُلْجِمَ بِلِجَامٍ مِنْ نَارٍ»


Musnad-Ahmad-10597

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10597.


«مَنْ كَتَمَ عِلْمًا يَعْلَمُهُ، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ مُلَجَّمًا بِلِجَامٍ مِنْ نَارٍ»


Next Page » « Previous Page