Author: Farook

Musnad-Ahmad-5716

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5716. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  1. மது பானத்தையும்
  2. அதைப் பருகுபவரையும்
  3. பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்
  4. அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும்
  5. (தானே) தயார் செய்து கொள்பவரையும்
  6. அதை விற்பவரையும்
  7. அதை வாங்குபவரையும்
  8. அதைச் சுமந்து செல்பவரையும்
  9. யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும்
  10. அதன் கிரயத்தை உண்பவரையும் (அல்லாஹ் சபிக்கிறான்.)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).


«لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَلَعَنَ شَارِبَهَا، وَسَاقِيَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ، وَآكِلَ ثَمَنِهَا»


Musnad-Ahmad-5390

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5390. ….அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

  1. மது
  2. அதை பருகக்கூடியவன்
  3. அதைப் பரிமாறக்கூடியவன்
  4. அதை விற்பவன்
  5. வாங்குபவன்
  6. அதைத் தயாரிப்பவன்
  7. தயாரிக்குமாறு கோருபவன்
  8. அதைச் சுமந்து செல்பவன்
  9. யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவன்
  10. அதன் கிரயத்தை உண்பவன் போன்றோர் (அல்லாஹ்வால்) சபிக்கப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمِرْبَدِ فَخَرَجْتُ مَعَهُ، فَكُنْتُ عَنْ يَمِينِهِ، وَأَقْبَلَ أَبُو بَكْرٍ فَتَأَخَّرْتُ لَهُ، فَكَانَ عَنْ يَمِينِهِ وَكُنْتُ عَنْ يَسَارِهِ، ثُمَّ أَقْبَلَ عُمَرُ فَتَنَحَّيْتُ لَهُ فَكَانَ عَنْ يَسَارِهِ، فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِرْبَدَ، فَإِذَا بِأَزْقَاقٍ عَلَى الْمِرْبَدِ فِيهَا خَمْرٌ، قَالَ ابْنُ عُمَرَ: فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمُدْيَةِ قَالَ: وَمَا عَرَفْتُ الْمُدْيَةَ إِلَّا يَوْمَئِذٍ، فَأَمَرَ بِالزِّقَاقِ فَشُقَّتْ، ثُمَّ قَالَ: «لُعِنَتِ الْخَمْرُ، وَشَارِبُهَا، وَسَاقِيهَا، وَبَائِعُهَا، وَمُبْتَاعُهَا، وَحَامِلُهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَعَاصِرُهَا، وَمُعْتَصِرُهَا، وَآكِلُ ثَمَنِهَا»


Musnad-Ahmad-4787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதுவுடன் சம்பந்தப்படும் பத்து வகையினர் சபிக்கப்படுகின்றனர்.

  1. மது பானத்தையும்
  2. அதைப் பருகுபவரையும்
  3. பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்
  4. அதை விற்பவரையும்
  5. அதை வாங்குபவரையும்
  6. அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும்
  7. (தானே) தயார் செய்து கொள்பவரையும்
  8. அதைச் சுமந்து செல்பவரையும்
  9. யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும்
  10. அதன் கிரயத்தை உண்பவரையும் (அல்லாஹ் சபிக்கிறான்.)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).


لُعِنَتِ الْخَمْرُ عَلَى عَشْرَةِ وُجُوهٍ: لُعِنَتِ الْخَمْرُ بِعَيْنِهَا، وَشَارِبُهَا، وَسَاقِيهَا، وَبَائِعُهَا، وَمُبْتَاعُهَا، وَعَاصِرُهَا، وَمُعْتَصِرُهَا، وَحَامِلُهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَآكِلُ ثَمَنِهَا


Abu-Dawood-3674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3674. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ், 1. மதுவையும் 2. அதைப் பருகக்கூடியவன் 3. அதைப் பரிமாறக்கூடியவன் 4. அதை விற்பவன் 5. வாங்குபவன் 6. அதைத் தயாரிப்பவன் 7. தயாரிக்குமாறு கோருபவன் 8. அதைச் சுமந்து செல்பவன் 9. யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவன் ஆகியோரையும் சபிக்கின்றான்…

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ»


Almujam-Alawsat-9083

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9083. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்…

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ أَحَبَّ فِي اللَّهِ، وَأَبْغَضَ فِي اللَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانَ»


Almujam-Alawsat-8

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர்கள் தங்களுடைய முகங்களிலும் நெஞ்சுகளிலும் கீரிக் கொண்டனர். ஜிப்ரீலே இவர்கள் யார்? எனக் கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியை உண்டவர்கள். மக்களின் மானத்துடன் விளையாடியவர்கள் என்று பதிலளித்தார்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


«لَمَّا عُرِجَ بِي، مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ، فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونُ لَحْمَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ»


Musnad-Ahmad-13340

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13340. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர்கள் தங்களுடைய முகங்களிலும் நெஞ்சுகளிலும் கீரிக் கொண்டனர். ஜிப்ரீலே இவர்கள் யார்? எனக் கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியை உண்டவர்கள். மக்களின் மானத்துடன் விளையாடியவர்கள் என்று பதிலளித்தார்….

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


لَمَّا عَرَجَ بِي رَبِّي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ، يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ. فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ


Abu-Dawood-4878

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர்கள் தங்களுடைய முகங்களிலும் நெஞ்சுகளிலும் கீரிக் கொண்டனர். ஜிப்ரீலே இவர்கள் யார்? எனக் கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியை உண்டவர்கள். மக்களின் மானத்துடன் விளையாடியவர்கள் என்று பதிலளித்தார்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ، فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ، قَالَ : هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ

قَالَ أَبُو دَاوُدَ: حَدَّثَنَاه يَحْيَى بْنُ عُثْمَانَ، عَنْ بَقِيَّةَ، لَيْسَ فِيهِ أَنَسٌ


Almujam-Alkabir-3983

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3983. நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது காலுறைகளின் மீதும் ஹிமார் (தலையில் போடும் துண்டின்) மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்தேன் என்று அபூஅய்யூப் (ரலி) கூறியதாக அவர்களின் அடிமை அஃப்லஹ் அறிவிக்கிறார்…


«رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25609

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25609. நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது என் தாய் என்னை, வா நான் உனக்கு (ஒன்றைத்) தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீ (உன் மகனுக்கு எதையாவது) கொடுக்க எண்ணியுள்ளாயா? என்று கேட்டார்கள். நான் அவனுக்கு ஒரு பேரித்தம் பழத்தைக் கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறினார். நீ அவனுக்கு எதையும் கொடுக்கவில்லையானால் உன் மீது பொய் சொன்ன குற்றம் எழுதப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)


دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا، فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيَهُ؟» قَالَتْ: تَمْرًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ»


Next Page » « Previous Page