Author: Farook

الدعء للطبراني

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22. அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«سَلُوا اللَّهَ عَزَّ وَجَلَّ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ، وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ»


Tirmidhi-3571

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

துன்பம் நீங்கும் வரை பிரார்த்தனை செய்து இறையருளை எதிர்பார்ப்பது…

3571. அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ، وَأَفْضَلُ العِبَادَةِ انْتِظَارُ الفَرَجِ»


Tirmidhi-3373

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3373. யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّهُ مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ»


Musnad-Ahmad-8748

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8748. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ»


Tirmidhi-3370

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3370. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ»


Musnad-Ahmad-3046

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்….pending

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«الْحَجَرُ الْأَسْوَدُ مِنَ الجَنَّةِ، وَكَانَ أَشَدَّ بَيَاضًا مِنَ الثَّلْجِ، حَتَّى سَوَّدَتْهُ خَطَايَا أَهْلِ الشِّرْكِ»


Tirmidhi-877

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஹஜருல் அஸ்வத் கல்…

877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«نَزَلَ الحَجَرُ الأَسْوَدُ مِنَ الجَنَّةِ، وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ»


Shuabul-Iman-2773

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2773. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உலகில் அதிமாக என் மீது ஸலவாத் கூறியவரே மறுமை நாளில் உங்களிலே எல்லா வகையிலும் எனக்கு நெருக்கமானவர் ஆவார். ஜூம்ஆ பகலிலும் இரவிலும் என் மீது ஸலவாத் கூறியவரின் நூறு தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து விடுவான்.

எழுபது தேவைகள் மறுமை தொடர்புடையதாகவும், முப்பது தேவைகள் உலகத் தொடர்புடையதாகவும் இருக்கும். பிறகு இதற்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமிப்பான். அவர் பலிப்பிராணிகள் உங்களிடம் நுழைந்து வருவதைப் போன்று எனது கப்ரில் நுழைந்து வருவார். என் மீது ஸலவாத் கூறியவரின் பெயர், அவரது பாரம்பரியம் என அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் எனக்கு அவ்வானவர் தெரிவிப்பார். என்னிடத்தில் உள்ள வெள்ளைப் பதிவேட்டில் அவற்றை நான் குறித்துக் கொள்வேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


إِنَّ أَقْرَبَكُمْ مِنِّي يَوْمَ الْقِيَامَةِ فِي كُلِّ مَوْطِنٍ أَكْثَرُكُمْ عَلَيَّ صَلَاةً فِي الدُّنْيَا مَنْ صَلَّى عَلَيَّ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَةِ الْجُمُعَةِ، قَضَى اللهُ لَهُ مِائَةَ حَاجَةٍ، سَبْعِينَ مِنْ حَوَائِجِ الْآخِرَةِ، وَثَلَاثِينَ مِنْ حَوَائِجِ الدُّنْيَا، ثُمَّ يُوَكِّلُ اللهُ بِذَلِكَ مَلَكًا يُدْخِلُهُ فِي قَبْرِهِ كَمَا يُدْخِلُ عَلَيْكُمُ الْهَدَايَا، يُخْبِرُنِي مَنْ صَلَّى عَلَيَّ بِاسْمِهِ وَنَسَبِهِ إِلَى عَشِيرَتِهِ فَأُثْبِتُهُ عِنْدِي فِي صَحِيفَةٍ بَيْضَاءَ


Almujam-Alawsat-1835

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1835. யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)


«مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَابِ»


Musnad-Ahmad-4390

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4390. நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ» ، قَالَ: قُلْتُ لِأَبِي: حَتَّى يَقُومَ، قَالَ: حَتَّى يَقُومَ


Next Page » « Previous Page