Author: Farook

Almujam-Alkabir-5407

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5407. ….நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்த போது மதீனாவில் (பெரும்) சப்தத்தைக் கேட்டோம். ‘இது என்ன சப்தம்?’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘இது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் ஒட்டங்களின் சப்தம், அனைத்து விதமான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு (அப்போது) எழுநூறு ஒட்டகங்கள் இருந்தன. அவற்றின் சப்தத்தால் மதீனா அதிர்ந்தது.

அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களை சொர்க்கத்தில் தவழ்ந்து செல்வதைப் பார்த்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்கள்.

இந்த செய்தி அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, ‘நான் நின்றவாறு சொர்க்கத்தில் செல்வேன்’ என்று சொல்லிவிட்டு ஒட்டகச் சேணங்களையும் அவை சுமந்து வந்த பொருட்களையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கிவிட்டார்கள்…

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


لَمَّا هَاجَرَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَحِمَهُ اللهُ إِلَى الْمَدِينَةِ، آخَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُ وَبَيْنَ سَعْدٍ، وَكَانَ لِسَعْدٍ حَائِطَانِ وَامْرَأَتَانِ، فَقَالَ سَعْدٌ لِعَبْدِ الرَّحْمَنِ: اخْتَرْ أَيَّ امْرَأَتِيَّ شِئْتَ أَتَحَوَّلْ لَكَ عَنْهَا، وَاخْتَرْ أَيَّ حَائِطَيَّ شِئْتَ، فَقَالَ: لَا حَاجَةَ لِي فِي امْرَأَتِكَ، وَلَا فِي حَائِطِكَ، مَا لِهَذَا أَسْلَمْتُ، وَلَكِنْ دُلُّونِي عَلَى السُّوقِ، فَدَلَّهُ وَلَيْسَ لَهُ شَيْءٌ، فَكَانَ يَشْتَرِي السَّمِينَةَ، وَالْأَقِطَةَ، وَالْإِهَابَ، وَالشَّيْءَ، فَيَبِيعُهُ، حَتَّى جَمَعَ شَيْئًا، فَتَزَوَّجَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَبْدَ الرَّحْمَنِ مَهْيَمْ؟» ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، تَزَوَّجْتُ عَلَى نَوَاةٍ مِنْ ذَهَبٍ، قَالَ: «فَأَوْلِمْ وَلوْ بِشَاةٍ» ، فَأَصَابَ، وَكَثُرَ مَالُهُ

فَبَيْنَمَا عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا فِي بَيْتِهَا، إِذْ سَمِعْتُ صَوْتًا رُجَّتْ مِنْهُ الْمَدِينَةُ، فَقَالَتْ: مَا هَذَا؟ فَقَالُوا: عِيرٌ قَدِمَتْ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ مِنَ الشَّامِ، وَكَانَتْ سَبْعَ مِائَةِ رَاحِلَةٍ، فَقَالَتْ عَائِشَةُ: أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَدْخُلُ الْجَنَّةَ حَبْوًا» ، فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَتَاهَا فَسَأَلَهَا عَمَّا بَلَغَهُ مِنَ الْحَدِيثِ، فَحَدَّثَتْهُ قَالَ: «فَإِنِّي أُشْهِدُكِ أَنَّهَا بِأَحْمَالِهَا، وَأَقْتَابِهَا، وَأَحْلَاسِهَا فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ»


Almujam-Alkabir-264

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

264. நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்த போது மதீனாவில் (பெரும்) சப்தத்தைக் கேட்டோம். ‘இது என்ன சப்தம்?’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘இது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் ஒட்டங்களின் சப்தம், அனைத்து விதமான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு (அப்போது) எழுநூறு ஒட்டகங்கள் இருந்தன. அவற்றின் சப்தத்தால் மதீனா அதிர்ந்தது.

அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களை சொர்க்கத்தில் தவழ்ந்து செல்வதைப் பார்த்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்கள்.

இந்த செய்தி அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, ‘நான் நின்றவாறு சொர்க்கத்தில் செல்வேன்’ என்று சொல்லிவிட்டு ஒட்டகச் சேணங்களையும் அவை சுமந்து வந்த பொருட்களையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கிவிட்டார்கள்…

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


بَيْنَمَا عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا فِي بَيْتِهَا، إِذْ سَمِعَتْ صَوْتًا رُجَّتْ مِنْهُ الْمَدِينَةُ، فَقَالَتْ: مَا هَذَا؟ فَقَالُوا عِيرٌ قَدِمَتْ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ مِنَ الشَّامِ، وَكَانَتْ سَبْعَمِائَةِ رَاحِلَةٍ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَدْخُلُ الْجَنَّةَ حَبْوًا» فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ فَأَتَاهَا فَسَأَلَهَا عَمَّا بَلَغَهُ فَحَدَّثَتْهُ قَالَ: «فَإِنِّي أُشْهِدُكِ أَنَّهَا بِأَحْمَالِها وَأَقْتَابِهَا، وَأَحْلَاسِهَا فِي سَبِيلِ اللهِ»


Hakim-1934

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1934. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து எழுந்திருக்கும் போது தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களும் இந்த பிரார்த்தனையை தனது சபையோருக்காக செய்வார்கள் என்றும் நம்பினார்கள்.

இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில் ஒரு தடையாக உனது பயத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களை உனது சுவனத்திற்கு நீ அழைத்துச் செல்லும் காரணமாக (நாங்கள்) உனக்கு கட்டுப்படுவதை ஆக்குவாயாக! எங்களுக்கு ஏற்படும் உலக ரீதியான துன்பங்களை உன் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையால் கடினமில்லாமல் ஆக்குவாயாக!

எங்களது செவிகளாலும், பார்வைகளாலும் ஆற்றலாலும் நாங்கள் உயிருடன் உள்ள வரை எங்களை பயன்பெறச் செய்வாயாக! அந்த பயனை (மரணம் வரை) எங்களுக்கு நிலைக்கச் செய்வாயாக! எங்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எங்களை பழிவாங்கச் செய்வாயாக! எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!

எங்களது மார்க்கத்தில் நாங்கள் தவறிவிடுவதை ஆக்கிவிடாதே! உலக வாழ்க்கையை (பற்றிய சிந்தனையை) எங்களது கவலையில் பெரியதாக ஆக்கிவிடாதே! அதை எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுக்கு இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டி

أَنَّهُ لَمْ يَكُنْ يَجْلِسُ مَجْلِسًا كَانَ عِنْدَهُ أَحَدٌ، وَلَمْ يَكُنْ إِلَّا قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ ارْزُقْنِي مِنْ طَاعَتِكَ مَا تَحُولُ بَيْنِي وَبَيْنَ مَعْصِيَتَكَ، وَارْزُقْنِي مِنْ خَشْيَتِكَ مَا تُبَلِّغُنِي بِهِ رَحْمَتَكَ، وَارْزُقْنِي مِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيَّ مَصَائِبَ الدُّنْيَا، وَبَارِكْ لِي فِي سَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، اللَّهُمَّ وَخُذْ بِثَأْرِي مِمَّنْ ظَلَمَنِي، وَانْصُرْنِي عَلَى مَنْ عَادَانِي، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّي، وَلَا مَبْلَغَ عِلْمِي، اللَّهُمَّ وَلَا تُسَلَّطْ عَلَيَّ مَنْ لَا يَرْحَمُنِي»

فَسُئِلَ عَنْهُنَّ ابْنُ عُمَرَ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْتِمُ بِهِنَّ مَجْلِسَهُ»


Kubra-Nasaayi-10161

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10161. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து எழுந்திருக்கும் போது தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களும் இந்த பிரார்த்தனையை தனது சபையோருக்காக செய்வார்கள் என்றும் நம்பினார்கள்.

இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில் ஒரு தடையாக உனது பயத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களை உனது சுவனத்திற்கு நீ அழைத்துச் செல்லும் காரணமாக (நாங்கள்) உனக்கு கட்டுப்படுவதை ஆக்குவாயாக! எங்களுக்கு ஏற்படும் உலக ரீதியான துன்பங்களை உன் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையால் கடினமில்லாமல் ஆக்குவாயாக!

எங்களது செவிகளாலும், பார்வைகளாலும் ஆற்றலாலும் நாங்கள் உயிருடன் உள்ள வரை எங்களை பயன்பெறச் செய்வாயாக! அந்த பயனை (மரணம் வரை) எங்களுக்கு நிலைக்கச் செய்வாயாக! எங்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எங்களை பழிவாங்கச் செய்வாயாக! எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!

எங்களது மார்க்கத்தில் நாங்கள் தவறிவிடுவதை ஆக்கிவிடாதே! உலக வாழ்க்கையை (பற்றிய சிந்தனையை) எங்களது கவலையில் பெரியதாக ஆக்கிவிடாதே! அதை எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே!

كَانَ ابْنُ عُمَرَ إِذَا جَلَسَ مَجْلِسًا لَمْ يَقُمْ حَتَّى يَدْعُو لِجُلَسَائِهِ بِهَذِهِ الْكَلِمَاتِ، وَزَعَمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهِنَّ لِجُلَسَائِهِ: «اللهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تُحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمَنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمَنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، اللهُمَّ أَمْتِعْنَا بِأَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمْنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْثَرَ هَمِّنَا، وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا»


Tirmidhi-3502

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3502. நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்கும் போது சிலவேளை தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள்.

இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில் ஒரு தடையாக உனது பயத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களை உனது சுவனத்திற்கு நீ அழைத்துச் செல்லும் காரணமாக (நாங்கள்) உனக்கு கட்டுப்படுவதை ஆக்குவாயாக! எங்களுக்கு ஏற்படும் உலக ரீதியான துன்பங்களை உன் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையால் கடினமில்லாமல் ஆக்குவாயாக!

எங்களது செவிகளாலும், பார்வைகளாலும் ஆற்றலாலும் நாங்கள் உயிருடன் உள்ள வரை எங்களை பயன்பெறச் செய்வாயாக! அந்த பயனை (மரணம் வரை) எங்களுக்கு நிலைக்கச் செய்வாயாக! எங்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எங்களை பழிவாங்கச் செய்வாயாக! எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!

எங்களது மார்க்கத்தில் நாங்கள் தவறிவிடுவதை ஆக்கிவிடாதே! உலக வாழ்க்கையை (பற்றிய சிந்தனையை) எங்களது கவலையில் பெரியதாக ஆக்கிவிடாதே! அதை எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுக்கு இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டி விடாதே!

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ: «اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ اليَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا»


Musnad-Ahmad-13596

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13596. “ஒரு மனிதர்  (நபி (ஸல்) அவர்களை பார்த்து) முஹம்மத் அவர்களே, எங்களில் சிறந்தவரே, எங்களில் சிறந்தவரின் மகனே, எங்களின் தலைவரே, எங்களின் தலைவரின் மகனே ! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீீங்கள் கூறும் இது போன்ற வார்த்தைகளை கூறிக் கொள்ளுங்கள். ஆனால்  ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். ( அல்லது ஷைத்தான்கள் உங்களைக் கெடுத்து விட வேண்டாம்) நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«قُولُوا بِقَوْلِكُمْ وَلَا يَسْتَجْرِكُمُ الشَّيْطَانُ – أَوِ الشَّيَاطِينُ، إِحْدَى الْكَلِمَتَيْنِ – أَنَا مُحَمَّدٌ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، مَا أُحِبُّ أَنْ تَرْفَعُونِي فَوْقَ مَنْزِلَتِي الَّتِي أَنْزَلَنِي اللَّهُ»


Almujam-Alkabir-73

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

73. முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَأْمُرُ بِدَفْنِ الشَّعْرِ، وَالْأَظْفَارِ»


Shuabul-Iman-6069

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6069. முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த செய்தி பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானதாகும்.


كَانَ يَأْمُرُ بِدَفْنِ الشَّعْرِ وَالْأَظْفَارِ


Musannaf-Ibn-Abi-Shaybah-25661

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25661. முடி, நகம், இரத்தம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்…

அறிவிப்பவர்: பனூ ஹாஷிம் வமிசத்தை சேர்ந்த ஒருவர்.


«أَمَرَ بِدَفْنِ الشَّعْرِ، وَالظُّفُرِ، وَالدَّمِ»


Tabaqatul-Kubra-Ibn-Sahd-2247

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் எத்தனை நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்; எந்த நாளில் மரணித்தார்கள்?

2247. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ஸஃபர் மாதம் 11 ஆம் நாள், புதன்கிழமை இரவு நோயுற்றார்கள். 13 இரவுகள் (நாட்கள்) இவ்வாறு நோயுற்றிருந்தார்கள். ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ரபீஉல் அவ்வல் மாதம் 3 ஆம் நாள், திங்கள்கிழமை மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் கைஸ்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلم اشْتَكَى يَوْمَ الْأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ، فَاشْتَكَى ثَلَاثَ عَشْرَةَ لَيْلَةً , وَتُوُفِّيَ صلّى الله عليه وسلم يَوْمَ الِاثْنَيْنِ لِلَيْلَتَيْنِ مَضَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ سَنَةَ إِحْدَى عَشْرَةَ»


Next Page » « Previous Page