அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வஹ்ப் பின் உமைர் என்பவர் உஹுதுப் போரில் காஃபிராகக் கலந்து கொண்டார். அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்டு, கொல்லப்பட்டவர்களின் மத்தியில் கிடந்தார். அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் அவரைக் கடந்து சென்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவரது வயிற்றில் தன் வாளை ஊடுருவி முதுகின் வழியாக வெளிவருமாறு குத்திவிட்டு, அவரை அப்படியே விட்டுச் சென்றார்.
இரவு வந்தபோது, குளிர் அதிகமானதால் அவர் தப்பித்து மக்காவைச் சென்றடைந்தார். பின்னர் அவருக்குக் காயம் குணமானது.
அவரும் ஸஃப்வான் பின் உமைய்யாவும் (கஃபாவின்) ஹிஜ்ருப் பகுதியில் ஒன்றுகூடினர். அப்போது வஹ்ப், “எனக்குக் குடும்பமும் கடனும் இல்லையென்றால், முஹம்மதைக் கொல்பவனாக நானே இருக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.
அதற்கு ஸஃப்வான், “நீர் அதை எப்படிச் செய்வீர்?” எனக் கேட்டார். அதற்கு அவர், “நான் வேகமான குதிரையைக் கொண்டவன்; அவரை யாரும் அடையும் முன்பே நான் அவரிடம் சென்று, அவரை ஏமாற்றி வாளால் வெட்டிவிட்டு, என் குதிரையில் தப்பித்து விடுவேன்; என்னை யாராலும் பிடிக்க முடியாது” என்றார்.
அதற்கு ஸஃப்வான், “உமது குடும்பம் என் குடும்பத்துடன் இருக்கட்டும்; உமது கடன் என் பொறுப்பு!” என்று கூறினார்.
உடனே வஹ்ப் புறப்பட்டுச் சென்று, தன் வாளைத் தீட்டி, அதில் விஷத்தையும் தடவினார். பின்னர் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இன்றி மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்.
அவர் மதீனாவுக்கு வந்தபோது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அவரைக் கண்டு கோபமும் கவலையும் அடைந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம், “நான் வஹ்பைக் கண்டேன்; அவரது வருகை எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் துரோகம் செய்பவர்; எனவே உங்கள் நபியைப் பாதுகாப்பாகச் சூழ்ந்துகொள்ளுங்கள்!” என்று கூறினார்கள்.
முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். வஹ்ப் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்று, “முஹம்மதே! உமது காலைப் பொழுது நன்மையாகட்டும்!” என்றார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அதைவிடச் சிறந்த (முகமன் கூறும்) முறையை எங்களுக்குப் பகரமாகத் தந்துள்ளான்” என்றார்கள்.
அதற்கு அவர், “நீர் இந்த வாழ்த்தைக் கூறி பெருமைப்பட்டுக்கொண்டிருந்த காலத்தை நான் அறிவேன்” என்றார்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீர் எதற்காக வந்தீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “உங்களிடம் உள்ள சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க வந்தேன்” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் இந்த வாள் எது எதற்கு?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர், “பத்ரு நாளில் நாங்கள் இதை ஏந்திச் சென்றும் வெற்றிபெறவில்லையே!” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், “அப்படியில்லை! நீர் ஹிஜ்ரில் ஸஃப்வானிடம், ‘எனக்குக் குடும்பமும் கடனும் இல்லையென்றால், முஹம்மதை என் கையாலேயே கொன்றிருப்பேன்’ என்று கூறிய செய்தி என்ன?” என்று கேட்டு, அவர் கூறிய செய்தியை அப்படியே தெரிவித்தனர்.
உடனே வஹ்ப் திகைத்து, “ஆஹ்! எப்படிச் சொன்னீர்கள்?” என்றார். நபி (ஸல்) அவர்கள் அதை மீண்டும் கூறினார்கள்.
உடனே வஹ்ப், “பூமியில் உள்ள செய்திகளை நீர் எங்களுக்கு அறிவிக்கும்போதெல்லாம் நாங்கள் உம்மைப் பொய்யாக்கி வந்தோம். ஆனால் இப்போது நீர் வானத்தின் செய்தியைத் தெரிவிக்கிறீர் என நான் காண்கிறேன். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்!” என்றார்.
மேலும் அவர், “அல்லாஹ்வின் தூதரே! உங்களது தலைப்பாகையை எனக்குத் தாருங்கள்!” எனக் கேட்க, நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையை அவருக்குக் கொடுத்தார்கள். பின்னர் அவர் மக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
உமர் (ரலி) அவர்கள், “இவர் வந்தபோது பன்றியை விட எனக்கு மிகவும் வெறுப்பானவராக இருந்தார்; பின்னர் அவர் திரும்பிச் செல்லும்போது என் பிள்ளைகளில் சிலரை விட எனக்கு மிகவும் பிரியமானவராக மாறிவிட்டார்” என்று கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13606)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زُهَيْرٍ التُّسْتَرِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، لَا أَعْلَمُهُ إِلَّا عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:
” كَانَ وَهْبُ بْنُ عُمَيْرٍ شَهِدَ أُحُدًا كَافِرًا فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَكَانَ فِي الْقَتْلَى، فَمَرَّ بِهِ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَعَرَفَهَ فَوَضَعَ سَيْفَهُ فِي بَطْنِهِ حَتَّى خَرَجَ مِنْ ظَهْرِهِ، ثُمَّ تَرَكَهُ فَلَمَّا دَخَلَ اللَّيْلُ وَأَصَابَهُ الْبَرْدُ لَحِقَ بِمَكَّةَ، فَبَرَأَ فَاجْتَمَعَ هُوَ وَصَفْوَانُ بْنُ أُمَيَّةَ فِي الْحِجْرِ فَقَالَ وَهْبٌ: لَوْلَا عِيَالِي وَدَيْنٌ عَلَيَّ لَأَحْبَبْتُ أَنْ أَكُونَ أَنَا الَّذِي أقْتُلُ مُحَمَّدًا فَقَالَ لَهُ صَفْوَانُ: فَكَيْفَ تَصْنَعُ؟ فَقَالَ: أَنَا رَجُلٌ جَوَّادٌ لَا أَلْحَقُ آتِيهِ فَأَغْتَرُّهُ ثُمَّ أَضْرِبُهُ بِالسَّيْفِ فَأَلْحَقُ بِالْخَيْلِ وَلَا يَلْحَقُني أَحَدٌ، فَقَالَ لَهُ صَفْوَانُ: فَعِيالُكَ مَعَ عِيَالِي وَدَيْنُكَ عَلَيَّ فَخَرَجَ يَشْحَذُ سَيْفَهُ وَسَمَّهُ، ثُمَّ خَرَجَ إِلَى الْمَدِينَةِ لَا يُرِيدُ إِلَّا قَتْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ رَآهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَهَانَهُ ذَلِكَ وَشَقَّ عَلَيْهِ فَقَالَ لِأَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي رَأَيْتُ وَهْبًا فَرَابَنِي قُدُومُهُ، وَهُوَ رَجُلٌ غَادِرٌ فَأَطِيفُوا نَبِيَّكُمْ، فَأَطَافَ الْمُسْلِمُونَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ وَهْبٌ فَوَقَفَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَنْعِمْ صَبَاحًا يَا مُحَمَّدُ، قَالَ: «قَدْ أَبْدَلَنَا اللهُ خَيْرًا مِنْهَا» قَالَ: عَهْدِي بِكَ تُحَدِّثُ بِهَا وَأَنْتَ مُعْجَبٌ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَقْدَمَكَ؟» قَالَ: جِئْتُ أَفْدِي أُسَارَاكُمْ، قَالَ: «مَا بَالُ السَّيْفِ؟» قَالَ: أَمَا إِنَّا قَدْ حَمَلْنَاهُ يَوْمَ بَدْرٍ فَلَمْ نُفْلِحْ وَلَمْ نَنَجَحْ، قَالَ: ” فَمَا شَيْءٌ قُلْتَ لِصَفْوَانَ فِي الْحِجْرِ: لَوْلَا عِيَالِي وَدَيْنٌ عَلَيَّ لَكُنْتُ أَنَا الَّذِي أُقْتَلُ مُحَمَّدًا بِنَفْسِي ” فَأَخْبَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَبَرَهُ، فَقَالَ وَهْبٌ هَاهْ، كَيْفَ قُلْتَ: فَأَعَادَ عَلَيْهِ، قَالَ وَهْبٌ: قَدْ كُنْتَ تُخْبِرُنَا خَبَرَ أَهْلِ الْأَرْضِ فَنُكَذِّبُكَ فَأَرَاكَ تُخْبِرُ خَبَرَ أَهْلِ السَّمَاءِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّكَ رَسُولُ اللهِ، قَالَ: يَا رَسُولَ اللهِ، أَعْطِنِي عِمَامَتَكَ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِمَامَتَهُ، ثُمَّ خَرَجَ إِلَى مَكَّةَ فَقَالَ عُمَرُ: لَقَدْ قَدِمَ وَإِنَّهُ لَأَبْغَضُ إِلَيَّ مِنَ الْخِنْزِيرِ ثُمَّ رَجَعَ وَهُوَ أَحَبُّ إِلَيَّ مِنْ بَعْضِ وَلَدِي
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-120.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13606.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத் (3. பலமானவர்).
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யஹ்யா பின் ஸுஹைர் (2. மிகப் பலமானவர்).
3 . முஹம்மத் பின் ஸுஹைல்-அத்தமீமீ (3. பலமானவர்).
4 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ (3. பலமானவர்).
5 . ஜஅஃபர் பின் ஸுலைமான் (4. நடுத்தரமானவர்).
6 . அபூஇம்ரான்-அப்துல்மலிக் பின் ஹபீப் (3. பலமானவர்).
சமீப விமர்சனங்கள்