Author: Farook

Abu-Dawood-271

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

271. நான் மாத விலக்கு அடைந்து விட்டால் விரிப்பை விட்டு விலகி பாய்க்கு வந்து விடுவேன். நாங்கள் சுத்தமாகும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்க மாட்டோம்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


«كُنْتُ إِذَا حِضْتُ نَزَلْتُ عَنِ المِثَالِ عَلَى الْحَصِيرِ، فَلَمْ نَقْرُبْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ نَدْنُ مِنْهُ حَتَّى نَطْهُرَ»


Abu-Dawood-270

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

270. எங்களில் ஒருவர் மாத விலக்காகி விடுவர். அவளுக்கும் அவருடைய கணவருக்கும் ஒரு விரிப்பைத் தவிர வேறு எதுவும் இருக்காது (அப்போது என்ன செய்யவேண்டும்?) என்று தனது அத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்று உனக்கு அறிவிக்கிறேன் என்று பின் வருமாறு கூறினார்கள் :

(நான் மாதவிலக்காகி இருக்கும் போது என்னிடம்) அவர்கள் வந்தார்கள். பிறகு உடனே அவர்கள் தனது பள்ளிக்கு சென்றார்கள். எனது கண்கள் (உறக்கத்தில்) என்னை ஆட்கொள்ளும் வரை அவர்கள் திரும்பவில்லை. அவர்களை குளிர் வதைத்ததும் (என்னிடம் வந்து) நீ நெருங்கி வா என்று கூறினார்கள். நான் மாதவிலக்கானவள் என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் உனது தொடைகளை வெளிப்படுத்துக என்று சொன்னதும் எனது தொடைகளை வெளிப்படுத்தினேன். அவர்கள் தனது கன்னத்தையும் மார்பையும் எனது தொடையின் மீது வை(த்துப்டு)த்தார்கள். நான் அவர்கள் மீது குப்புற சாய்ந்தேன். அவர்கள் (உடல்) சூடாகி (வெதுவெதுப்படைந்து) உறங்கிவிட்டார்கள்.

அறிவிப்பவர் : தன் அத்தை வழியாக உமாரா பின் குராப்.


أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ: إِحْدَانَا تَحِيضُ وَلَيْسَ لَهَا وَلِزَوْجِهَا إِلَّا فِرَاشٌ وَاحِدٌ؟ قَالَتْ: أُخْبِرُكِ بِمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ فَمَضَى إِلَى مَسْجِدِه – قَالَ أَبُو دَاوُدَ: تَعْنِي مَسْجِدَ بَيْتِهِ – فَلَمْ يَنْصَرِفْ حَتَّى غَلَبَتْنِي عَيْنِي وَأَوْجَعَهُ الْبَرْدُ فَقَالَ: «ادْنِي مِنِّي». فَقُلْتُ: إِنِّي حَائِضٌ. فَقَالَ: «وَإِنْ، اكْشِفِي عَنْ فَخِذَيْكِ». فَكَشَفْتُ فَخِذَيَّ فَوَضَعَ خَدَّهُ وَصَدْرَهُ عَلَى فَخِذِي، وَحَنَيْتُ عَلَيْهِ حَتَّى دَفِئَ وَنَامَ


Abu-Dawood-269

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

269. நான் மாதவிலக்காகி இருக்கும் போது நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே மேலாடையில் (இருவரும் படுத்து) இரவு கழிப்போம். என்னிடமிருந்து எதுவும் (ரத்தம்) அதில் பட்டு விடும் போது அது பட்ட இடத்தை மட்டும் கழுவுவார்கள். பிறகு அதை அணிந்தவாறு தொழுது கொள்ளுவார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيتُ فِي الشِّعَارِ الْوَاحِدِ، وَأَنَا حَائِضٌ طَامِثٌ، فَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ غَسَلَ مَكَانَهُ وَلَمْ يَعْدُهُ، ثُمَّ صَلَّى فِيهِ، وَإِنْ أَصَابَ – تَعْنِي: ثَوْبَهُ – مِنْهُ شَيْءٌ غَسَلَ مَكَانَهُ وَلَمْ يَعْدُهُ، ثُمَّ صَلَّى فِيهِ


Abu-Dawood-268

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

268. ஒரு பெண் மாதவிடாய் நிலையில் இருந்தால், (இடுப்புக்குக்) கீழே துணியை கட்டுக்கொண்ட பிறகு அவளுடைய கணவர் அவளை தழுவிக் கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறினார்கள். மற்றொரு முறை, அவளை சீராட்டி வருடிக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி).


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تَتَّزِرَ، ثُمَّ يُضَاجِعُهَا زَوْجُهَا» وَقَالَ مَرَّةً: «يُبَاشِرُهَا»


Abu-Dawood-267

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 107

உடலுறவு அல்லாத காரியம் செய்தல்.

267. நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் மாத விலக்காகி இருக்கும் மனைவியை அவரது மேல் பாதி தொடைகள் வரை அல்லது முட்டுக்கள் வரை மறைக்கின்ற ஆடை இருக்கும் போது கட்டி அணைப்பார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி).


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُبَاشِرُ الْمَرْأَةَ مِنْ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ، إِذَا كَانَ عَلَيْهَا إِزَارٌ إِلَى أَنْصَافِ الْفَخِذَيْنِ أَوِ الرُّكْبَتَيْنِ تَحْتَجِزُ بِهِ»


Abu-Dawood-262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 105

மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்யத் தேவையில்லை.

262. ஒரு பெண்மணி ஆயிஷா (ரலி) யிடம் வந்து மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்ய வேண்டுமா? என்று வினவினாள். அதற்கு ஆயிஷா (ரலி), நீ ஹரூரைச் சேர்ந்தவள் தானே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் மாதவிலக்காவோம். அப்போது நாங்கள் தொழுகையை களா செய்யமாட்டோம். நாங்கள் தொழுகையை களா செய்யும் படி ஏவப்படவும் இல்லை. 

அறிவிப்பவர் : முஆதா.


أَنَّ امْرَأَةً سَأَلَتْ عَائِشَةَ: أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ؟ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ لَقَدْ «كُنَّا نَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا نَقْضِي، وَلَا نُؤْمَرُ بِالْقَضَاءِ»


Abu-Dawood–261

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 104

குளிப்பு கடமையானவள் பள்ளியிலிருந்து எடுத்து தருதல்.

261. (வெளியே நின்று கொண்டு) பள்ளியிலிருந்து தொழுகை விரிப்பை எனக்கு எடுத்துத் தா என்று என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது நான் மாத விலக்கானவள் என்று பதிலளித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ». فَقُلْتُ: إِنِّي حَائِضٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ»


Abu-Dawood-260

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

260. நான் மாதவிலக்காக இருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் தலையை என் மடியில் வைத்து படுத்து இருப்பார்கள். அப்போது அவர்கள் (குர்ஆன்) ஓதுவார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِي فَيَقْرَأُ وَأَنَا حَائِضٌ»


Abu-Dawood-259

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

259. நான் மாதவிலக்காக இருக்கும் போது இறைச்சி எலும்பைக் கடிப்பேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் நான் வாய் வைத்த அதே இடத்திலேயே வாய் வைத்து சாப்பிடுவார்கள். நான் பானம் பருகி விட்டு, அதை அவர்களிடம் அளிப்பேன். நான் எந்த இடத்தில் பருகினேனோ அதே இடத்தில் அவர்களும் வாய் வைத்து பருகுவார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


«كُنْتُ أَتَعَرَّقُ الْعَظْمَ وَأَنَا حَائِضٌ، فَأُعْطِيهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَمَهُ فِي الْمَوْضِعِ الَّذِي فِيهِ وَضَعْتُهُ، وَأَشْرَبُ الشَّرَابَ فَأُنَاوِلُهُ فَيَضَعُ فَمَهُ فِي الْمَوْضِعِ الَّذِي كُنْتُ أَشْرَبُ مِنْهُ»


Next Page » « Previous Page