Author: Farook

Abu-Dawood-281

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

281. ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அஸ்மா (ரலி) அவர்களிடம் “எனக்கு இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது, என்ன செய் வது என்பதைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச்சொல்” என்று கோரினேன். (அவ்வாறே அஸ்மா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள்)
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மாதவிடாயில் வழக்கமாக எத்தனை நாள்கள் அமர்வாயோ அதே அளவு நாள்கள் உட்கார்ந்துவிடு. பிறகு குளித்து(விட்டுத் தொழுது)விடு” என்று பதிலளித்தார்கள்.

இந்த நபிமொழி எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:

“உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், பி அவரிடம் “(வழக்கமான) மாதவிடாய் நாள்களில் தொழுகையைத் தவிர்த்து விட்டு (வழக்கமான நாள்கள் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுது கொள்” என்று கட்டளையிட்டார்கள் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூதாவூத்

أَنَّهَا أَمَرَتْ أَسْمَاءَ أَوْ أَسْمَاءُ حَدَّثَتْنِي أَنَّهَا أَمَرَتْهَا فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ، أَنْ تَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهَا أَنْ تَقْعُدَ الْأَيَّامَ الَّتِي كَانَتْ تَقْعُدُ، ثُمَّ تَغْتَسِلُ»


Abu-Dawood-280

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

280. ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனக்கு இரத் தப்போக்கு அதிகம் இருப்பதாக முறையிட்டேன். அதற்கு அவர்கள், “இது, இரத்தக் குழாயிலிருந்து வரும் இரத்தமாகும்” என்று சொல்லிவிட்டு, “உனக்கு மாதவிடாய் வழக்கமாக ஏற்படும் காலத்தைக் கணக்கிட்டு அந்நாள்களில் தொழாதே.
உனது மாதவிடாய்க் காலம் முடிந்துவிட்டால்…

பாத்திமா பின் அபீ ஹுபைஷ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொடர் உதிரப்போக்கு பற்றி கேட்டு முறையிட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அந்த உதிரப்போக்கு ஏற்படுவது ஒரு நரம்பு (காரணமாகத்)தான் என்பதை நீ கவனித்துக் கொள். உன் (வழக்கமான) மாதவிடாய் (காலம்) வந்ததும் நீ தொழாதே. உன் (வழக்கமான) மாதவிடாய் (காலம்) முடிந்ததும் நீ (குளித்து) துப்புரவாகிக் கொள். பிறகு (அந்த வழக்கமான காலத்தை தாண்டி ஏற்படும் மாதவிடாயை கவனத்தில் கொள்ளாது) ஒரு மாதவிடாய் (காலத்திற்)கும் இன்னொரு மாதவிடாய் (காலத்திற்)கும் இடைப்பட்ட காலத்தில் தொழுது கொள்க என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : உர் பின் ஜுபைர் (ரலி)


أَنَّهَا، سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَكَتْ إِلَيْهِ الدَّمَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ فَانْظُرِي إِذَا أَتَى قَرْؤُكِ فَلَا تُصَلِّي، فَإِذَا مَرَّ قَرْؤُكِ فَتَطَهَّرِي، ثُمَّ صَلِّي مَا بَيْنَ الْقَرْءِ إِلَى الْقَرْءِ»


Abu-Dawood-279

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

279. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உம்மு ஹபீபாவின் (தொடர் உதிரப் போக்கு) இரத்தம், வாயகன்ற பாத்திரம் நிறைய இருப்பதை நான் பார்த்தேன்)

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அதிக இரத்தப் போக்கு பற்றிக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உம்மு ஹபீபாவை நோக்கி) “எத்தனை நாட்கள் மாதவிடாயில் இருப்பது (வழக்கமோ) அத்தனை நாட்கள் தொழுவதைத் தவிர்த்துக் கொள். அதன் பிறகு குளித்துக்கொள் (பிறகு தொழுதுகொள்)” என்று கூறினார்கள். 

….

சூதக இரத்தப் போக்குள்ளவர் தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படிப்பட்டவர் (ஒரு தடவை மட்டும் குளிப்பாராக! பிறகு தனது மாதவிடாய் நாட்கள் வரை உலூச் செய்வாராக என்று கூறுகின்றார். 

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).


إِنَّ أُمَّ حَبِيبَةَ سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّمِ، فَقَالَتْ عَائِشَةُ: فَرَأَيْتُ مِرْكَنَهَا مَلْآنَ دَمًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ، ثُمَّ اغْتَسِلِي»


Abu-Dawood-278

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

278.

ஐந்தாம் அறிவிப்பில், “அதிக இரத்தப் போக்குள்ளவள் வழக்க மான நாள்களைக் கணக்கிட்டுத் தொழுகையைத் தவிர்த்து விடு வாள். வழக்கமான நாள்களுக்குப் பிறகு குளித்துக்கொள்வாள். (அதிகப்படியான) துணியால் உள்ளாடை அணிந்துகொண்டு தொழு வாள் என நபி (ஸல்) சொன்னார்கள்” என்று உள்ளது.

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:

உம்முஸலமா (ரலி) அவர்கள் மூலம் அய்யூப் வழியாக ஹம்மாத் பின் ஸைத் அவர்களின் அறிவிப்பில் அப்பெண் ஃபாத்திமா பின்த் அபூஹுபைஷ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாத்திமா பின்த் அபீ ஷுபைஷ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர் அவர்களது நிகழ்ச்சியை தெரிவிக்கின்றார். பிறகு நீ குளித்துக் கொள். பிறகு, நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து தொழுது கொள் என்று கூறியதாகவும் அறிவிக்கின்றார்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).


«تَدَعُ الصَّلَاةَ وَتَغْتَسِلُ فِيمَا سِوَى ذَلِكَ وَتَسْتَثْفِرُ بِثَوْبٍ وَتُصَلِّي»


Abu-Dawood-277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

277.

நான்காம் அறிவிப்பில், “அதிக இரத்தப்போக்குள்ளவள் (வழக்க மான) மாதவிடாய்க் காலம் வரை தொழுகையை விட்டுவிட்டு அதற்கு அடுத்தடுத்த நாள்களில் தொழுகை நேரம் வந்துவிட்டால் குளித்துக்கொள்ள வேண்டும். மேலும் (அதிகப்படியான) துணி யால் உள்ளாடை அணிந்துகொள்ள வேண்டும். பின்பு தொழ வேண்டும் என்று நபி (ஸல்) சொன்னார்கள்” என்று கூடுதலாகக் காணப் படுகிறது.

….

சூதக ரத்தப் போக்கு உள்ளவள் தொடர்பாக, அவர் தனது மாதவிடாய் நாட்களில் (மட்டும்) தொழுகையை விட்டு விடுவாராக! பிறகு குளித்து தொழுவாராக. மேலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்தல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது ஜாபிர் பின் ஜியாத்


«فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ، ثُمَّ إِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْتَغْتَسِلْ، وَلْتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ تُصَلِّي»


Abu-Dawood-276

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

276.

மூன்றாம் அறிவிப்பில்,

“ஒரு பெண்ணிற்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. மாதவிடாய் வழக்கமான நாள்களுக்கு மேல் கடந்துவிட்ட பின் தொழுகை நேரம் வந்து விட்டால் குளித்துக்கொள்ளட்டும்” என்று உள்ளது.

ஒரு பெண்மணிக்கு சூதக ரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் லைஸ் னற அறிவிப்பாளரின் கருத்தை கூறும் போது, அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும் தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக என்று அறிவித்து, மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தில் தொடர்கிறார்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்லமா.


أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدِّمَاءَ، فَذَكَرَ مَعْنَى حَدِيثِ اللَّيْثِ قَالَ: «فَإِذَا خَلَّفَتْهُنَّ وَحَضَرَتِ الصَّلَاةُ فَلْتَغْتَسِلْ»، وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَاهُ


Abu-Dawood-275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

275.

“ஒரு பெண்ணிற்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் அவள் வழக்கமான மாதவிடாய் நாள்கள் கடந்தபின், தொழுகை நேரம் வந்துவிட்டால் குளித்துக்கொள்ளட்டும்” என நபி (ஸல்) கூறினார்கள்” என்று காணப்படுகிறது.

….

ஒரு பெண்மணிக்கு சூதக இரத்த போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸின் கருத்தை கூறும் போது அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும். தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக! என்று மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தை போன்றே தொடர்ந்து இங்கும் தெரிவிக்கின்றார்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)


أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ، فَذَكَرَ مَعْنَاهُ. قَالَ: «فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ وَحَضَرَتِ الصَّلَاةُ فَلْتَغْتَسِلْ». بِمَعْنَاهُ


Abu-Dawood-274

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 107

அதிக இரத்தப்போக்குள்ள பெண்ணுக்கான சட்டம்:

வழக்கமான மாதவிடாய்க் காலத்தின் தொழுகைகளை விட்டுவிடுவாள்.

274. நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு வழக்கத்திற்கு மாறாக இரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவளைக் குறித்து மார்க்கச் சட்டத்தைக் கேட்டேன். அதற்கு அவர்கள், “இப்போது ஏற்பட்டுள்ள – அதிக இரத்தப்போக்குக்கு முன்பு, மாதத்தில் எத்தனை நாள்கள் இரவு – பகல் மாதவிடாய் ஏற்பட்டது என்பதை அவள் கணக்கிட்டு அதே அளவுள்ள நாள்கள் இப்போதும் தொழுகையைத் தொழாமல் தவிர்த்து விடட்டும். வழக்கமான நாள்கள் முடிந்த தும் குளித்துக்கொள்ளட்டும். பின்னர் அந்த இடத்தில் துணியை இறுகக் கட்டிக் கொண்டு தொழட் டும்” என்று பதிலளித்தார்கள்.


أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدِّمَاءَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِتَنْظُرْ عِدَّةَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا، فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ، ثُمَّ لِتُصَلِّ فِيهِ»


Abu-Dawood-273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

273. எங்களுடைய மாதவிடாய் பெருக்கெடுக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இடுப்பாடை உடுத்தும் படி கட்டளையிடுவார்கள். பிறகு எங்களை கட்டி அணைப்பார்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டுப் படுத்துவது போல் தனது தேவையை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا فِي فَوْحِ حَيْضَتِنَا أَنْ نَتَّزِرَ، ثُمَّ يُبَاشِرُنَا. وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْلِكُ إِرْبَهُ؟


Abu-Dawood-272

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

272. நபி (ஸல்) அவர்கள் மாதவிலக்கான(தமது மனைவிய)ரிடம் எதையும் விரும்பினால், அவருடைய மறைவுறுப்பில் ஆடை இருக்க செய்வார்கள். 

அறிவிப்பவர் : நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்

(குறிப்பு : இதன் அறிவிப்பாளர் வரிசை மிகவும் வலுவானது என ஹாபிழ் இப்னு ஹஜர் ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிடுகின்றார்.)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ مِنَ الْحَائِضِ شَيْئًا أَلْقَى عَلَى فَرْجِهَا ثَوْبًا»


Next Page » « Previous Page