Author: Farook

Abu-Dawood-196

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 77

பால் பருகியதும் உளூச் செய்தல்.

196. நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார் கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு, இது கொழுப்பு அடங்கியது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، ثُمَّ قَالَ: «إِنَّ لَهُ دَسَمًا»


Abu-Dawood-195

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

195. அபூசுப்யான் பின் சயீத் பின் அல்முகீரா என்பார் உம்மு ஹபீபா (ரலி)யிடம் சென்றார். அவரை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் பருகிவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய்க் கொப்பளித்தார். அப்போது, எனது சகோதரியின் மகனே! நீ உலூச் செய்ய வேண்டாமா? நபி (ஸல்) அவர்கள் நெருப்பில் சமைத்த பொருளை உண்பதினால் உலூச் செய்யுங்கள் என்று சொன்னார்கள் என்று உம்மு ஹபீபா (ரலி) கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூஸலமா (ரலி).


أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ فَسَقَتْهُ قَدَحًا مِنْ سَوِيقٍ، فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، فَقَالَتْ: يَا ابْنَ أُخْتِي أَلَا تَوَضَّأُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ» أَوْ قَالَ: «مِمَّا مَسَّتِ النَّارُ»


Abu-Dawood-194

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 76

சமைத்ததை சாப்பிட்டால் உளூ செய்ய வேண்டும் என்று வலியுறுத்துதல்.

194. நெருப்பில் சமைத்ததை சாப்பிடுவதால் உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).


«الْوُضُوءُ مِمَّا أَنْضَجَتِ النَّارُ»


Abu-Dawood-193

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ (ரலி) அவர்கள் எகிப்து நாட்டில் எங்களிடம் வருகை அளித்தனர். எகிப்திய பள்ளிவாசலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது நான் செவியுற்றேன். அவர் கூறியதாவது, ஒருவரது வீட்டில் அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாங் கள் ஆறு, ஏழு பேர்கள் இருந்தோம் என எண்ணுகிறேன். அப்போது பிலால் (ரலி) வந்து அவர்களை தொழுகைக்கு அழைத் தார்கள். உடனே நாங்கள் புறப்பட்டு சட்டியை நெருப்பில்(அடுப்பில்) வைத் திருந்த ஒருவருக்கு அருகில் சென்றோம். அவரிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் உனது சமையல் ஆகி விட்டதா? என்று வினவினார்கள். அவர் ஆம். எங்களின் தந்தையும் தாயும் தங்க ளுக்கு அர்ப்பணம் ஆகட்டும் என்று பதில ளித்தார். அதி லிருந்து அவர்கள் ஒரு துண்டை எடுத்து அதை தொழுகைக்கு அவர்கள் தக்பீர் கட்டும் வரை மென்று கொண்டிருந் தார்கள். நான் அவர்களையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். 

அறிவிப்பவர் : உபைத் பின் சுமாமா அல்முராதீ.


قَدِمَ عَلَيْنَا مِصْرَ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بْنِ جَزْءٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ فِي مَسْجِدِ مِصْرَ، قَالَ: لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ أَوْ سَادِسَ سِتَّةٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَارِ رَجُلٍ، فَمَرَّ بِلَالٌ فَنَادَاهُ بِالصَّلَاةِ، فَخَرَجْنَا فَمَرَرْنَا بِرَجُلٍ وَبُرْمَتُهُ عَلَى النَّارِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطَابَتْ بُرْمَتُكَ»، قَالَ: نَعَمْ، بِأَبِي أَنْتَ وَأُمِّي فَتَنَاوَلَ مِنْهَا بَضْعَةً، فَلَمْ يَزَلْ يَعْلُكُهَا حَتَّى أَحْرَمَ بِالصَّلَاةِ، وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ


Abu-Dawood-192

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு செயல் முறைகளில் இறுதியானது, சமைக்கப் பட்ட பொருட்களை சாப்பிடுவதால் உலூச் செய்யாமல் இருப்பது தான். 

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இது முந்தைய ஹதீஸின் சுருக்கமே என்று அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.


«كَانَ آخِرَ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ»


Abu-Dawood-191

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

191. நபி (ஸல்) அவர்களுக்கு நான் இறைச்சியும் ரொட்டியும் அளித்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் உலூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு மீதமுள்ள உணவை கொண்டு வரும் படி கூறி சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழலானார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).


«قَرَّبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزًا وَلَحْمًا فَأَكَلَ، ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ بِهِ، ثُمَّ صَلَّى الظُّهْرَ، ثُمَّ دَعَا بِفَضْلِ طَعَامِهِ فَأَكَلَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»


Abu-Dawood-190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

190. நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை கடைவாய் பற்களால் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتَهَشَ مِنْ كَتِفٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Abu-Dawood-189

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

189. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்த விரிப்பு துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتِفًا، ثُمَّ مَسَحَ يَدَهُ بِمِسْحٍ كَانَ تَحْتَهُ، ثُمَّ قَامَ فَصَلَّى»


Abu-Dawood-188

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

188. ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர் களிடம் விருந்தாளியாக தங்கினேன். அவர் கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்யச் சொன்னார்கள். அவர்கள் கத்தியை எடுத்து அதை எனக்காக வெட்டத் துவங் கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர் கள் வந்து அவர்களுக்கு தொழுகையை அறிவித்தார்கள். உடனே அவர்கள் கத்தியைப் போட்டு விட்டு இவருக்கு என்ன அவசரம்? அவரது கைகளில் மண் படியட்டும் என்று கூறி தொழலானார்கள். 

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்பாரி அவர்கள் எனக்கு மீசை அதிகமாக வளர்ந்திருந்தது. அதை எனக்கு ஒரு பற்குச்சியை (அளவாக) வைத்து (அதற்கு மேற்பட்டதை) கத்தரித்து விட்டார்கள் என்றோ அல்லது பற்குச்சியை (அளவாக) வைத்து உனக்கு நான் அதை கத்தரிப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை கூடுதலாக அறிவிக்கிறார்.


ضِفْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبٍ فَشُوِيَ، وَأَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ لِي بِهَا مِنْهُ، قَالَ: فَجَاءَ بِلَالٌ فَآذَنَهُ بِالصَّلَاةِ، قَالَ: فَأَلْقَى الشَّفْرَةَ، وَقَالَ: «مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ» وَقَامَ يُصَلِّ، زَادَ الْأَنْبَارِيُّ: «وَكَانَ شَارِبِي وَفَى فَقَصَّهُ لِي عَلَى سِوَاكٍ» أَوْ قَالَ: «أَقُصُّهُ لَكَ عَلَى سِوَاكٍ؟»


Abu-Dawood-187

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 75

சமைத்த உணவை சாப்பிடுவதால் உளூ நீங்குமா ?

187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Next Page » « Previous Page