Author: Farook

Abu-Dawood-206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 83

மதீ (இச்சை நீர்) வெளிப்படுதல்.

206. எனக்கு (மதீ) இச்சை நீர் அதிகமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் என் முதுகு ஒடிகின்ற (குளிர் வேதனையினால்) அளவிற்கு அடிக்கடி குளித்து கொண்டிருப்பேன். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ அவ்வாறு வெளிப்படுவதை கண்டால் உனது ஆண்குறியை கழுவிக் கொள். பிறகு தொழுகைக்கு நீ உலூச் செய்வது போல் உலூச் செய்து கொள்க! உனக்கு இந்திரியம் வெளிப்பட்டால் குளித்துக் கொள்க என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அலீ (ரலி).


كُنْتُ رَجُلًا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ ذُكِرَ لَهُ – فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَفْعَلْ إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ، فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ»


Abu-Dawood-205

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 82

தொழும் போது உளூ நீங்கி விடுதல்.

205. உங்களில் ஒருவருக்கு தொழுகையில் காற்று விட்டால் அவர் (தொழுகையை விட்டுவிட்டு) உலூச் செய்து, திரும்பத் தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ، فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدِ الصَّلَاةَ»


Abu-Dawood-204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 81

கழிவுப் பொருளை காலால் மிதித்தால் ?

204. கழிவுப்பொருட்கள் காலில் மிதிப் பட்டால் நாங்கள் உலூச் செய்ய மாட்டோம் (தொழும் போது) எங்களது தலை முடி, ஆடை (தரையில் படுவதை) நாங்கள் தடுக்க மாட்டோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸுத் (ரலி).


«كُنَّا لَا نَتَوَضَّأُ مِنْ مَوْطِئٍ وَلَا نَكُفُّ شَعْرًا وَلَا ثَوْبًا»، قَالَ أَبُو دَاوُدَ: قَالَ: إِبْرَاهِيمُ بْنُ أَبِي مُعَاوِيَةَ فِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: وَقَالَ هَنَّادٌ، عَنْ شَقِيقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ


Abu-Dawood-203

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

203. ஆசன வாயின் கட்டுப்பாடு கண்களாகும். யார் உறங்கி விட்டாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«وِكَاءُ السَّهِ الْعَيْنَانِ، فَمَنْ نَامَ فَلْيَتَوَضَّأْ»


Abu-Dawood-202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்வார்கள். பிறகு உலூச் செய்யாமலேயே குறட்டை விட்டவாறு (ஸஜ்தாவில்) உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுவார்கள். அவர்களிடம் நான் உறங்கிய நீங்கள் உலூச் செய்யாமல் தொழுதீர்களே? என்று வினவினேன். படுத்து உறங்கியவர்கள் தான் உலூச் செய்ய வேண்டும் என்று அவர்கள் பதிலளித்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

உஸ்மான், ஹன்னாத் ஆகிய அறிவிப்பாளர்கள் ஏனெனில் (ஒருவர்) படுத்து உறங்கும் போது மூட்டிணைப்புகள் தளர்வுறுகின்றன. (அதனால் காற்று வெளியேற வாய்ப்புண்டு) என்று கூடுதலாக அறிவிக்கின்றனர்.


இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றனர் :

படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய úண்டும் என்ற அவரது அறிவிப்பு முன்கரான நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் ஆகும். கதாதாவிடமிருந்து யசீத் அபூகாரித் தாலனியை தவிர வேறு யாரும் இதை அறிவிக்கவில்லை.

இதன் ஆரம்பத்தை இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களிடமிருந்து பெருங்குழுவினரே அறிவிக்கின்றனர்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْجُدُ وَيَنَامُ وَيَنْفُخُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي وَلَا يَتَوَضَّأُ، قَالَ: فَقُلْتُ لَهُ: صَلَّيْتَ وَلَمْ تَتَوَضَّأْ وَقَدْ نِمْتَ، فَقَالَ: «إِنَّمَا الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا»، زَادَ عُثْمَانُ، وَهَنَّادٌ: فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ اسْتَرْخَتْ مَفَاصِلُهُ،


Abu-Dawood-201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

201. இஷா தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டது. அப்போது ஒருவர் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு ஒரு தேவை உள்ளது என்று சொன்னார். அவர்கள் அவரிடம் மக்கள் அல்லது மக்களில் சிலர் சிறு துயில் கொள்ளும் வரை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் சாபித் அல்புனானீ ஆவார். இவர் உலூவைப்பற்றி இதில் குறிப்பிடவில்லை.


أُقِيمَتْ صَلَاةُ الْعِشَاءِ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي حَاجَةً، «فَقَامَ يُنَاجِيهِ حَتَّى نَعَسَ الْقَوْمُ، أَوْ بَعْضُ الْقَوْمِ، ثُمَّ صَلَّى بِهِمْ وَلَمْ يَذْكُرْ وُضُوءًا»


Abu-Dawood-200

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு, அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் (இஷா தொழுகையை எதிர்பார்த்து) தலைகள் சரிந்து விழும் வரை தூங்கிக் கொண்டிருப்போம் என்று அனஸ் (ரலி) கூறியதாக கதாதா என்பார் கூடுதலாக அறிவிக்கின்றார். 

இந்த ஹதீஸை இப்னு அபீ அரூபா என்பவர் கதாதா இடமிருந்து வேறோரு உரைநடையில் அறிவிக்கின்றார்.


«كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَظِرُونَ الْعِشَاءَ الْآخِرَةَ حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ، ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ»


Abu-Dawood-199

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 80

உறங்குவதால் உளூ நீங்குமா ?

199. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் (ஒரு பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர் இஷாவை பிற்படுத்தி விட்டார்கள். எந்த அளவுக்கு என்றால் பள்ளியில் நாங்கள் உறங்கினோம். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகையுற்று உங்களைத் தவிர தொழுகைக்காக காத்திருப்பவர்கள் யாரும் இல்லை என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ عَنْهَا لَيْلَةً فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَقَالَ: «لَيْسَ أَحَدٌ يَنْتَظِرُ الصَّلَاةَ غَيْرُكُمْ»


Abu-Dawood-198

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 79

இரத்தம் வெளிப்படுவதால் உளூ நீங்குமா ?

198. தாது ரிகாஃ என்ற போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்) ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவன் முஹம்மதுடைய தோழர்களில் எவரையேனும் கொல்லாமல் ஓயப்போவ தில்லை என்று சத்தியம் செய்து கொண் டான். எனவே அவன் நபி (ஸல்) அவர் களின் அடிச்சுவற்றை தொடரலானான். நபி (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நம்மை காவல் புரிபவர்கள் யார் என வினவினார் கள். முஹாஜிர்களில் ஒருவரும் அன்சாரி களில் ஒருவரும் பதிலளித்ததும். நீங்கள் இருவரும் கணவாயின் வாயிலில் (காவல்) இருந்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்விருவரும் கணவாயின் வாயிலுக்குச் சென்றதும். முஹாஜிர் தோழர் படுத்துக்கொண்டார். அன்சாரித் தோழர் தொழத் துவங்கினார். (சபதம் செய்த)அந்த மனிதன் வந்து விட்டான். அவன் (தொழுகின்ற) அவரது தோற்றத்தைக் கண்டதும் அக்கூட்டத்தின் காவலாளி என்று வினங்கிக் கொண்டான். அவரை நோக்கி அவன் அம்பு எய்தான். அதை அவர்மேல் (குறி தவறாது)விழச் செய் தான். அதை அவர் கழற்றி விட்டார். இவ் வாறு அவன் மூன்று அம்புகளை அவரை நோக்கி எறியும்வரை (அவர்

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ – فَأَصَابَ رَجُلٌ امْرَأَةَ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ، فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ حَتَّى أُهَرِيقَ دَمًا فِي أَصْحَابِ  مُحَمَّدٍ، فَخَرَجَ يَتْبَعُ أَثَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا، فَقَالَ: مَنْ رَجُلٌ يَكْلَؤُنَا؟ فَانْتَدَبَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «كُونَا بِفَمِ الشِّعْبِ»، قَالَ: فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعْبِ اضْطَجَعَ الْمُهَاجِرِيُّ، وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّ، وَأَتَى الرَّجُلُ فَلَمَّا رَأَى شَخْصَهُ عَرَفَ أَنَّهُ رَبِيئَةٌ لِلْقَوْمِ، فَرَمَاهُ بِسَهْمٍ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ، حَتَّى رَمَاهُ بِثَلَاثَةِ أَسْهُمٍ، ثُمَّ رَكَعَ وَسَجَدَ، ثُمَّ انْتَبَهَ صَاحِبُهُ، فَلَمَّا عَرَفَ أَنَّهُمْ قَدْ نَذِرُوا بِهِ هَرَبَ، وَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنَ الدَّمِ، قَالَ: سُبْحَانَ اللَّهِ أَلَا أَنْبَهْتَنِي أَوَّلَ مَا رَمَى، قَالَ: كُنْتَ فِي سُورَةٍ أَقْرَؤُهَا فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا


Abu-Dawood-197

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 78

பால் பருகியதும் உளூச் செய்யாமலிருக்க அனுமதி.

197. அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள். ஆனால், வாய்க் கொப்பளிக்காமலும், உலூச்செய்யாமலும் தொழுதார்கள் . 

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜைத் அல்ஹப்பாப் என்பார் தனக்கு அறிவித்த அறிவிப்பாளர் முதீ பின் ராஷித் என்பாரைப் பற்றி, எனக்கு இந்த அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியவர் ஷுஃபா ஆவார் என்று கூறுகிறார்.


«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، فَلَمْ يُمَضْمِضْ وَلَمْ يَتَوَضَّأْ وَصَلَّى»، قَالَ زَيْدٌ: دَلَّنِي شُعْبَةُ عَلَى هَذَا الشَّيْخِ


Next Page » « Previous Page